சக்தி வாய்ந்த ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகம்
புகழ்பெற்ற ஸ்ரீமத் அஹோபில மடத்தின் 44 வது பட்டம் அழகியசிங்கராக ஸ்ரீ மடத்தின் பீடத்தை அலங்கரித்தவரும், திருவரங்கத் திருத்தலத்தின் தெற்கு ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவருமான மகான் ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகளால் அருளப்பட்டது திவ்ய சக்திவாய்ந்த இந்த ஸ்லோகம்.
1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ ந்ருஸிம்ஹ: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ: தேவாத் பரோ நகஸ்சித்
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரத்யே:
தமிழாக்கம்:
1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை
8. அதனால் நரசிம்மனே ! உம்மைச் சரணடைகிறேன்
ஆதாரம்: குமுதம் ஜோதிடம்
No comments:
Post a Comment