சொந்த வீடு அமைய பாட வேண்டிய திருப்புகழ்
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ் மீற அருளாலே
அந்தரி யொ (டு) உடனோடு சங்கரனும் மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேரும்
மஞ்சனனும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற
மைந்து மயிலுடனாடி வர வேணும்
புண்டரீக விழியாள ! அண்டர்மகள் மணவாளா
புந்தி நிறை அறிவாளா ! உயர் தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன் பரவு கதிர்வீசு வடிவேலா
தண் தரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண் தமிழின் மிகு நேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே !
(அருணகிரி நாதர் - திருப்புகழ்)
No comments:
Post a Comment