பாஹூ நதி எனப் புராண வரலாறுகளில் போற்றப்படும் புண்ணிய நதியான செய்யாற்றின் கரையில் விளங்குகிறது நரசிம்மபுரம் எனும் பழமையான க்ஷேத்திரம். புகழ்பெற்ற ஸ்ரீ அஹோபில மடத்தின் 6-வது பட்டம், ஸ்ரீ ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற இந்தத்திருத்தலத்தில் ஸ்ரீ பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள், பல மஹான்களால் ஏராளமான யாகங்களால் ஆராதிக்கப்பட்டதால், இவ்வூர்
'யக்ஞவேதிகை' - அதாவது "யாக மேடு" எனப் பிரசித்தி பெற்றது. இதுவே காலக்கிரமத்தில் மருவி, இஞ்சி மேடு எனத் தற்போது விளங்குகிறது.
இச்க்ஷேத்திரத்திற்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீ அஹோபில மடத்தின் 34-வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ராமானுஜ யதீந்திர மகாதேசிகன் மற்றும் அதே வம்சத்தில் அவதரித்தவரும், ஸ்ரீ மாலோல நரசிம்மருடன் பேசும் பேறு பெற்றவருமான 42-வது பட்டம் ஸ்ரீரங்க சடகோப யதீந்திர மகாதேசிகன் ஆகிய இரண்டு மஹான்களும் இவ்வூரில் தான் அவதரித்தனர்.
இத்தகைய பரம பவித்திரமான திவ்ய க்ஷேத்திரத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான மரகதக் கல்லில் வடித்த ஸ்ரீ சீதா, லட்சுமண, அனுமத் சமேதனான ஸ்ரீ ராமன் மற்றும் பேரழகு வாய்ந்த ஸ்ரீ லட்சுமிநரசிம்மன், ஸ்ரீவரதராஜன், ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஆகியோரும் எழுந்தருளி, பூத பைஸாஸ பய நிவர்த்தி, மனத் தெளிவு, புத்திர பாக்கியம், கணவன்-மனைவி ஒற்றுமை, கடன் நிவாரணம், விவாக தடங்கல் நீங்குதல் ஆகிய ஏராளமான நற்பலன்களை உடனுக்குடன் அளித்தருள்வது வழிபடும் பக்தர்கள் கண்டுவரும் அனுபவமாம்.
கிடைத்தற்கரிய புண்ணிய திருத்தலமான இஞ்சிமேடு திருக்கோயில் பக்தர்களின் பேருதவியால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்று விளங்குகிறது இப்போது.
வந்தவாசியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு என அறியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தில் தொடர்பு கொள்ளவும்.

Sri Ram Flats, No.19/4, I st Floor, 7th Street , Ram Nagar, Nanganallur,
Chennai – 600 061.
Phone: 94440 22548 / 99625 22548
(தகவல் மற்றும் நன்றிகள் to : வி.சி.நாராயணன், குமுதம் ஜோதிடம் வார இதழ்)

There are lots of buses that run from Chennai to Polur travel via Injimedu. The temple is found near to the stopping and can get the clear route from the local people. Lots of buses also run from Vandhavasi.
No comments:
Post a Comment