Tuesday, August 13, 2013

Sri Nanda Nandanashtakam - ஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம்


श्री नन्द नन्दऩाष्टकम्
सुचारु वक्त्र मण्डलम्, चुकर्ण रत्ऩ कुण्डलम्
सुचर्चिताङ्ग चन्दऩम्,, नमामि नन्द-नन्दनम्

सुदीर्घ नेत्र पङ्कजम्, चिखी चिखण्ट मूर्धजम्
अऩन्त कोटि मोहऩम् नमामि नन्द नन्दऩम्

सुऩासिकाग्र मौक्तिकम्, च्वच्छ दन्त पङ्क्तिकम्
नवांबुदाङ्ग चिक्कणम्, नमामि नन्द नन्दऩम्

करेण वेणु रञ्चितम् गति करीऩ्द्रगञ्जितम्
दुकूल पीत सुचोभऩम् नमामि नन्द नन्दऩम्

त्रिभङ्ग देह सुन्दरम् नखद्युति चुधाकरम्
अमूल्य रत्ऩ भूषणम् नमामि नन्द नन्दऩम्

सुगन्ध अङ्ग  चौरभम् उरो विराजि कौस्तुभम्
स्फुर्जित् वत्स लाञ्छऩम् नमामि नन्द नन्दऩम्

व्रुन्दावऩ सुनागरम् विलासुनाग वाससम्
सुरेन्द्र गर्व मोचऩम् नमामि नन्द नन्दऩम्

व्रजाङ्गऩा चुऩायकम् सता सुख प्रदायकम्
जगऩ्मऩ: प्रलोभऩम् नमामि नन्द नन्दऩम्

श्री नन्द नन्दऩाष्टकम् पठेत् य स्रद्दयाऩ्वित:
तरेद भवाब्धिम् दुस्तरम् लभेत्तदऩ्घ्री युक्तकम्

ஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம்
ஸுசாரு வக்த்ர மண்ட³லம், சுகர்ண ரத்ன குண்ட³லம் 
ஸுசர்சிதாங்க³ சந்த³னம்,, நமாமி நந்த³-நந்த³னம்

ஸுதீ³ர்க நேத்ர பங்கஜம், சிகீ² சிக²ண்ட மூர்தஜம்
அனந்த கோடி மோஹனம் நமாமி நந்த³ நந்த³னம்

ஸுனாஸிகாக்³ர மௌக்திகம், ச்வச்ச²³ந்த பங்க்திகம்
நவாம்பு³தா³ங்க³ சிக்கணம், நமாமி நந்த³ நந்த³னம்

கரேண வேணு ரஞ்சிதம் க³தி கரீந்³ரக³ஞ்ஜிதம்
து³கூல பீத ஸுசோபனம் நமாமி நந்த³ நந்த³னம்

த்ரிபங்க³ தே³ஹ ஸுந்த³ரம் நக²த்³யுதி சுதாகரம்
அமூல்ய ரத்ன பூஷணம் நமாமி நந்த³ நந்த³னம்

ஸுக³ந்த அங்க³  சௌரபம் உரோ விராஜி கௌஸ்துபம்
ஸ்பு²ர்ஜித் வத்ஸ லாஞ்ச²னம் நமாமி நந்த³ நந்த³னம்

வ்ருந்தா³வன ஸுனாக³ரம் விலாஸுனாக³ வாஸஸம்
ஸுரேந்த்³ர க³ர்வ மோசனம் நமாமி நந்த³ நந்த³னம்

வ்ரஜாங்க³னா சுனாயகம் ஸதா ஸுக² ப்ரதா³யகம்
ஜக³ன்மன: ப்ரலோபனம் நமாமி நந்த³ நந்த³னம்

ஸ்ரீ நந்த³ நந்த³னாஷ்டகம் படே²த் ய ஸ்ரத்³³யான்வித:
தரேத³வாப்³திம் து³ஸ்தரம் லபேத்தத³ன்க்ரீ யுக்தகம்
===========================================
ஸுசாரு வக்த்ர மண்டலம், சுகர்ண ரத்ன குண்டலம்
ஸுசர்சிதாங்க சந்தனம், நமாமி நந்த நந்தனம் 

அழகிய வட்ட வடிவமான திருமுகம், மதிப்பு மிகுந்த ரத்ன குண்டலங்கள் அலங்கரிக்கும் திருச்செவிகள், சந்தனச் சாந்தால் பூசப்பட்டு, அழகுடனும் வாசனையுடனும் மிளிரும் திருமேனி, ஆகியவற்றுடன் கூடிய, நந்தனின் குமாரரான ஸ்ரீ கிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

ஸுதீர்க நேத்ர பங்கஜம், சிகீ சிகண்ட மூர்தஜம்
அனந்த கோடி மோஹனம் நமாமி நந்த நந்தனம்

தீர்க்கமான, தாமரை போன்ற விழிகளை உடையவரும், மயிற்பீலிகளால் அலங்கரிக்கப்பட்ட சிகையை உடையவரும், பல கோடி பக்தர்களை வசீகரித்துத் தன்பால் கவர்ந்தவருமான நந்தனின் மகன் ஆனந்த கிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

ஸுனாஸிகாக்ர மௌக்திகம், ச்வச்ச தந்த பங்க்திகம்
நவாம்புதாங்க சிக்கணம், நமாமி நந்த நந்தனம்

தம் நாசியின் நுனி, முத்தை ஒத்த பிரகாசத்துடன் மின்ன, ஒளி வீசும் வெண்ணிறப் பல் வரிசைகளுடன் கூடியவரும், மிருதுவான கன்னங்களை உடைய‌வரும், இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான நாயகனும், நந்தனின் புத்திரனுமான‌  ஸ்ரீகிருஷ்ண பகவானை வணங்குகிறேன் .

கரேண வேணு ரஞ்சிதம் கதி கரீந்ரகஞ்ஜிதம்
துகூல பீத ஸுசோபனம் நமாமி நந்த நந்தனம்

அனைவரையும் மயக்கும் இசையைத் தரும் புல்லாங்குழலை திருக்கரத்தில் ஏந்தியவரும், யானை போல் வசீகரிக்கும் நடையை உடையவரும், மஞ்சள் பட்டால் அலங்கரிக்கப்பட்டவ‌ருமான நந்தனின் புத்திரனுமான‌ கிருஷ்ணனை வணங்குகிறேன்.

த்ரிபங்க தேஹ ஸுந்தரம் நகத்யுதி சுதாகரம்
அமூல்ய ரத்ன பூஷணம் நமாமி நந்த நந்தனம்

கால், கழுத்து, இடுப்பு இவற்றை மூன்று விதங்களில் வளைத்து நின்று, புல்லாங்குழலை வாசிப்பவரும், ஒளி வீசும் சந்திர கிரணங்கள் போன்ற நகங்களை உடையவரும், உயர் ரகக் கற்கள் பதிக்கப் பெற்ற விலைமதிப்பற்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் நந்தனின் குமாரனுமாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

ஸுகந்த அங்க  சௌரபம் உரோ விராஜி கௌஸ்துபம்
ஸ்புர்ஜித் வத்ஸ லாஞ்சனம் நமாமி நந்த நந்தனம்

நறுமணத்துடன் கூடிய தம் அங்கங்கள் யாவும், அந்த சுகந்த நறுமணத்தை கமழச் செய்து கொண்டிருக்க, ஜொலிக்கும் கௌஸ்துப மணி தம் திருமார்பை அலங்கரிக்க, திருக்காட்சி தரும்  நந்தனின் குமாரன் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

வ்ருந்தாவன ஸுநாகரம் விலாஸுநாக வாஸஸம்
ஸுரேந்த்ர கர்வ மோசனம் நமாமி நந்த³ நந்தனம்

பிருந்தாவனத்தில் நித்யவாசம் செய்பவரும், தம் லீலைகளால், அடியவர்களது மனதைக் கவர்ந்திழுக்கக் கூடியவரும், கோவர்த்தன மலையைத் தம் சுட்டு விரலால் தூக்கி, தேவேந்திரனின் கர்வத்தை அடக்கியவரும், நந்தகோபனின் குமாரருமான ஸ்ரீகிருஷ்ணனை வணங்குகிறேன். 

வ்ரஜாங்கனா சுனாயகம் ஸதா ஸுக ப்ரதாயகம்
ஜகன்மன: ப்ரலோபனம் நமாமி நந்த³ நந்தனம்,

கோபியர்களை ரட்சிப்பவரும், அவர்களால் போற்றப்படுபவரும்,  மிகுந்த தெய்வீக தாகத்துடன் தம்மைச் சரணடையும் எல்லா பக்தர்களுக்கும் அழிவற்ற இன்பத்தை அளிப்பவரும், நந்தனின் மைந்தனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணனை வணங்குகிறேன்.

ஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம் படேத் ய ஸ்ரத்தயான்வித:
தரேத் பவாப்திம் துஸ்தரம் லபேத்தன்க்ரீ யுக்தகம்

கிருஷ்ணனின் புகழ் பாடும், இந்த எட்டு சுலோகங்களைச் சிரத்தையுடன் படிப்போர் கடக்க முடியாத சம்சாரக் கடலைக் கடந்து கண்ணனின் திருவடிகளை அடைவார்கள்.

No comments:

Post a Comment