Saturday, June 29, 2013

Vishwambari Stuti - விஸ்வம்பரீ ஸ்துதி



விஸ்²வம்ப⁴ரீ ஸ்துதி
விஸ்வம்பரீ ஸ்துதியின் மூலம், குஜராத்தி மொழியில், வல்லப பட் என்பவரால் இயற்றப்பட்டது. குஜராத் மாநிலத்தில் துர்க்கா தேவியின் ஆர்த்தி முடிந்தபின்னரோ அல்லது கர்பா எனப்படும் குஜராத்திய நடனம் தொடங்கும் முன்னரோ துர்க்கை அம்மனின் மீதான இத்துதியை பாடுவர். விஸ்வம்பரி ஸ்துதி, தேவியின் லீலைகளை போற்றி, தம்மை ரட்சித்து அருளுமாறு வேண்டும் கவசமாகும். அன்னையிடம் பக்தி சிரத்தையுடன், அன்புடன் வேண்டினால், நமது அனைத்து கவலைகளும் நீங்கி அமைதியான சிறப்பான வாழ்வு வாழ அன்னை அருள்வாள்.

 

 विश्वंभरी स्तुति
(विश्वंभरी स्तुति मूल रुपसे गुजराति मे वल्लभ भट्ट द्वार लिखी गई है)

विश्वंभरी अखिल विश्वतणी जनेता ।
विद्या धरी वदनमां वसजो विधाता ॥
दुर्बुद्धि दुर करी सद्दबुद्धि आपो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥१॥

मूलो पडि भवरने भटकुं भवानि ।
सुझि नहि लगीर कोइ दिशा जवानी ॥
भासे भयंकर वळी मनना उतापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥२॥

आ रंकने उगरवा नथी कोइ आरो ।
जन्मांध धु जननी हु ग्रही हाथ तारो ॥
ना शुं सुणो भगवती शिशुना विलापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥३॥

मा कर्म जन्म कथनि करतां विचारु ।
आ सृष्टिमां तुज विना नथी कोइ मारु ॥
कोने कहुं कठण काळ तणो बळापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥४॥

हुं काम क्रोध मध मोह थकी भरेलो ।
आडंबरे अति धणो मद्थी छकेलो ॥
दोषो बधा दूर करी माफ पापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥५॥

ना शास्त्रना श्रवणनु पंयःपान पीधु ।
ना मंत्र के स्तुति कथा नथी काइ कीधु ॥
श्रद्धा धरी नथी कर्या तव नाम जापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥६॥

रे रे भवानी बहु भूल थई ज मारी ।
आ जिंदगी थई मने अतिशे अकारी ॥
दोषो प्रजाळि सधळा तव छाप छापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥७॥

खाली न कोइ स्थळ छे विण आप धारो ।
ब्रह्मांडमां अणु - अणु महीं वास तारो ॥
शक्ति न माप गणवा अगणित मापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥८॥

पापो प्रपंच करवा बधी रीते पूरो ।
खोटो खरो भगवती पण हुं तमारो ॥
जाडयांधकार करी दूर सुबुद्धि स्थापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥९॥

शीखे सुणे रसिक छंद ज एक चित्ते ।
तेना थकी त्रिविध ताप टळे खचिते ॥
बुद्धि विशेष जगदंब तणा प्रतापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥१०॥

श्री सदगुरु शरनमां रहीने यजुं छुं ।
रात्रि दिने भगवती तुजने भजुं छु ॥
सदभक्त सेवक तणा परिताप चापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥११॥

अंतर विषे अधिक उर्मि थतां भवानी ।
गाऊ स्तुति तव बळे नमीने मृडानी ॥
संसारना सकळ रोग समूळ कापो ।
माम् पाहि ॐ भगवती भव दुःख कापो ॥१२॥


 விஸ்²வம்ப⁴ரீ ஸ்துதி
விஸ்²வம்ப⁴ரீ அகி²ல விஸ்²வதணீ ஜனேதா |
வித்³யா த⁴ரீ வத³னமாம்ʼ வஸஜோ விதா⁴தா ||
து³ர்பு³த்³தி⁴ து³ர கரீ ஸத்³³பு³த்³தி⁴ ஆபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 1||

அகிலம் முழுதும் ஆளும் அகிலாண்டேசுவரியே, ஞானசக்தியாக என்னுள் உறைபவளே!,  நீயே கதி என்று சரணடைந்த என் அஞ்ஞானத்தை அழித்து, நல்வழிப்படுத்தி, பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து அருள்வாய்..

மூலோ படி³ ப⁴வரனே ப⁴டகும்ʼ ப⁴வானி |
ஸுஜி² நஹி லகீ³ர கோஇ தி³ஸா² ஜவானீ ||
பா⁴ஸே ப⁴யங்கர வளீ மனனா உதாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 2||

மாயையினால் சூழப்பட்ட இவ்வுலகில், அஞ்ஞானம் என்னும் இருளில் மூழ்கி, வாழ்க்கை பாதையை மறந்து, தொலைந்த பாதையை தனியாகத் தேடிக் கொண்டிருக்கும் நான், சேர வேண்டிய இடம் சென்று அடைய முடியுமா என்பதும் சந்தேகமே. பயம் என்னும் ஜ்வாலையின் கொழுந்துகள் என் மனதில் தோன்றுகின்றன..."ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா  மாதா, உன்னிடம் சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

ஆ ரங்கனே உக³ரவா நதீ² கோஇ ஆரோ |
ஜன்மாந்த⁴ து⁴ ஜனனீ ஹு க்³ரஹீ ஹாத² தாரோ ||
நா ஸு²ம்ʼ ஸுணோ ப⁴க³வதீ ஸி²ஸு²னா விலாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 3||

வாழ்க்கையில் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பதறியாமல் பூமியில் வாழும் ஒரு ஆத்மா நான். நீ அந்த ஆத்மாவின் தாயல்லவா!!!. அம்மா!, இக்குழந்தையின் அழுகுரலைக் கேள். "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா  மாதா,  உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

மா கர்ம ஜன்ம கத²னி கரதாம்ʼ விசாரு |
ஆ ஸ்ருʼஷ்டிமாம்ʼ துஜ வினா நதீ² கோஇ மாரு ||
கோனே கஹும்ʼ கட²ண காள தணோ ப³ளாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 4|| 

இப்பிறவியில் என் நடத்தை மற்றும் செயல்களை பற்றி யோசிக்கிறேன். இவ்வுலகில் உன்னையன்றி வேறு யார் எனக்கு உளர்?. என் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் வருத்தங்களையும், வலிகளையும் பற்றி உன்னையன்றி வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?. "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா  மாதா,  உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

ஹும்ʼ காம க்ரோத⁴ மத⁴ மோஹ த²கீ ப⁴ரேலோ |
ஆட³ம்ப³ரே அதி த⁴ணோ மத்³தீ²²கேலோ ||
தோ³ஷோ ப³தா⁴ தூ³ர கரீ மாப² பாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 5||

காதல், கோபம், காமம், இச்சை (ஆசை) ஆகியவை நிரம்பி உள்ள என் நாவிலிருந்து கேட்பதற்கு கர்ண கடூரமான வார்த்தைகள் வெளிப்படுகிறது. என் குறைகளை நீ அறிந்து, என்னை மன்னித்து, என் பாபங்களிலிருந்து விடுவித்து அருள்வாய். ."ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக.

நா ஸா²ஸ்த்ரனா ஸ்²ரவணனு பம்ʼய​:பான பீது⁴ |
நா மந்த்ர கே ஸ்துதி கதா² நதீ² காயி  கீது⁴ ||
ஸ்²ரத்³தா⁴ த⁴ரீ நதீ² கர்யா தவ நாம ஜாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 6||

மறை நூல் யாவும் படித்தவனில்லை. படிப்பதைக் கேட்டதும் இல்லை. உன்னை போற்றும் ஸ்தோத்ரங்களை பாடியதும் இல்லை. உன் சுய ரூபத்தை பற்றி அறியவும் இல்லை. உன் திருநாமத்தை உள்ளன்போடு உச்சரித்ததும் இல்லை. "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

ரே ரே ப⁴வானீ ப³ஹு பூ⁴ல த²யீ  ஜ மாரீ |
ஆ ஜிந்த³கீ³²ஈ மனே அதிஸே² அகாரீ ||
தோ³ஷோ ப்ரஜாளி ஸத⁴ளா தவ சா²ப சா²போ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 7|| 

தாயே, துர்க்கதி நாசினி, துர்க்கா மா,  நான் நிறைய பாவம் செய்தவனாய் உள்ளேன். என் வாழ்க்கை பயனில்லாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். மீண்டும் பாவத்தின் வழியில் செல்லுமுன் என்னை ரட்சித்து நல்வழியை காட்டி அருள்வாய். "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

கா²லீ ந கோஇ ஸ்த²ள சே² விண ஆப தா⁴ரோ |
ப்³ரஹ்மாண்ட³மாம்ʼ அணு - அணு மஹீம்ʼ வாஸ தாரோ ||
²க்தி ந மாப க³ணவா அக³ணித மாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 8||

மாயா சக்தியாக இவ்வுலகை வீயாபித்திருக்கும் நீ இல்லாத இடமே இல்லை, பிரபஞ்சம் முழுதும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவள், சர்வ வீயாபி, உன் அருட்பெரும் சக்தியை பற்றி யாராலும் அறிந்து கொள்ள இயலாது. "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக.

பாபோ ப்ரபஞ்ச கரவா ப³தீ⁴ ரீதே பூரோ |
கோ²டோ க²ரோ ப⁴க³வதீ பண ஹும்ʼ தமாரோ ||
ஜாட³யாந்த⁴கார கரீ தூ³ர ஸுபு³த்³தி⁴ ஸ்தா²போ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 9||

நான் மறுபடியும் பாவம் செய்யும் முன், என்னை அற வழிக்கு திருப்பு, அறியாமையில் மூழ்கி இருந்தாலும், நான் உன் குழந்தை யல்லவா!!!!, நான் செய்த பாவங்களின் விளைவுகளை பற்றி என்னை அறியச் செய். அஞ்ஞானம் என்னும் இருள்மாயையை அழிக்க வந்த பிரகாச ஞானச் சுடரே..."ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

ஸீ²கே² ஸுணே ரஸிக ச²ந்த³ ஜ ஏக சித்தே |
தேனா த²கீ த்ரிவித⁴ தாப டளே க²சிதே ||
பு³த்³தி⁴ விஸே²ஷ ஜக³³ம்ப³ தணா ப்ரதாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 10||

எவரெல்லாம் பக்தி சிரத்தையுடன், உள்ளமெல்லாம் உன் நினைவாக உன்னை போற்றித் துதிக்கும் பாடல்களை கேட்டும், படித்தும் அறிந்து கொள்கிறார்களோ, அவர்களின் பயம், கவலை நீங்கும். நாளைடைவில் அவர்கள் நித்ரையிலிருந்து (அஞ்ஞானத்திலிருந்து)  விழிப்பு பெற்று உன் அன்பென்னும் வெள்ளத்தில் மூழ்கி திளைப்பர். "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

ஸ்ரீ ஸத³கு³ரு ஸ²ரனமாம்ʼ ரஹீனே யஜும்ʼ சு²ம்ʼ |
ராத்ரி தி³னே ப⁴க³வதீ துஜனே ப⁴ஜும்ʼ சு² ||
ஸத³ப⁴க்த ஸேவக தணா பரிதாப சாபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 11||

நின்னை மனதில் இருத்தி என் குருநாதரின் திருவடி நிழலில் தியானத்தில் ஆழ்ந்துள்ளேன்.  இரவு, பகல் பாராது எவ்வேளையும் உன் திருநாமத்தை உச்சரித்தபடி உள்ளேன். என்னை உனது உண்மையான சீடனாக ஏற்றுக் கொள்."ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக...

அந்தர விஷே அதி⁴க உர்மி த²தாம்ʼ ப⁴வானீ |
கா³ஊ ஸ்துதி தவ ப³ளே நமீனே ம்ருʼடா³னீ ||
ஸம்ʼஸாரனா ஸகள ரோக³ ஸமூள காபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³​:க² காபோ || 12||

இந்த அழியும் உடலின் மீது அழியாத காதல் கொண்டுள்ளேன். நான் உன் பாடல்களை பாடும் போது, தலை குனிந்து வணங்குகிறேன். துன்பங்களுக்கு ஆதாரமான வேர்களை அழிப்பாயாக. "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக..

No comments:

Post a Comment