Wednesday, June 26, 2013

Sri Kamalambiga Ashtakam - ஸ்ரீ கமலாம்பிகா அஷ்டகம்

கவலையெல்லாம் தீர்க்கும் ஸ்ரீகமலாம்பிகா அஷ்டகம்
51 சக்தி பீடங்களில் முதல் சக்தி பீடமாகத் திகழும் பெருமை பெற்றது, திருவாரூர் கமலை பீடம்.  இத்தலத்தில் உள்ள அட்சரபீடத்தில், சக்தியின் 51 அட்சரங்களும் இடம்பெற்றுள்ளன. இத்தலத்தை தரிசித்தாலே 51 சக்தி பீடங்களையும் தரிசித்த பலனைப் பெறலாம். தேவேந்திரனால் ஆராதிக்கப்பட்ட தியாகராஜ மூர்த்தி அருளாட்சி புரியும் இத்தலத்தில் தேவியும் கமலாம்பிகையாக திருவருள் பாலிக்கிறாள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இத்தேவியைக் குறித்து கமலாம்பாள் நவாவரணம் எனும் அற்புத கீர்த்தனைகளை இயற்றியருளியுள்ளார். அந்த கீர்த்தனைகள் ஸ்ரீவித்யா உபாசகர்களால் வழி வழியாக இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.

நம் உடலில் இருக்கும் ஆதாரச் சக்கரங்களுள் முதலாவதான மூலாதாரச் சக்கரத்திற்குரிய திருத்தலமாகவும் திருவாரூர் போற்றப்படுகிறது. இத்தலத்தில் அம்பிகை  யோகாசனத்தில், யோகமுத்திரையுடன் வீற்றிருந்தருளுவது தனிச் சிறப்பு. இத்திருக்கோலம் வேறெந்தத் திருத்தலங்களிலும் காணக் கிடைக்காத ஒன்று.

பொதுவாகவே கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் அனுபவம், நம்பிக்கை. இத்துதி நாராயண தீர்த்தர் எனும் யதியின் சிஷ்யரால் இயற்றப்பட்டது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம்.
 
श्री कमलाम्बिकै स्तोत्रम्
ஸ்ரீ கமலாம்பி³கை ஸ்தோத்ரம்
(ஸ்ரீ நாராயண தீர்த்தரின் சீடரால் துதிக்கப்பட்டது)

बन्धूकद्युतिमिन्दु बिम्ब वदऩाम् बृन्दारकैर्वन्दिताम्
मन्दारादि समर्चिताम् मदुमतीम् मन्दस्मिताम् सुन्दरीम् ।
बन्धच् छेदऩ कारिणीम् त्रिनयऩाम् भोगापवर्ग प्रदाम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥१॥

³ந்தூகத்³யுதிமிந்து³ பி³ம்ப³ வத³னாம் ப்³ருʼந்தா³ரகைர்வந்தி³தாம்
மந்தா³ராதி³ ஸமர்ச்சிதாம் மது³மதீம் மந்த³ஸ்மிதாம் ஸுந்த³ரீம் |
³ந்தச் சே²³ன காரிணீம் த்ரிநயனாம் போகா³பவர்க³ ப்ரதா³ம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் ||1||
  
श्री कामेच्वर पीठ मध्‍य निलयाम् श्री राजराजेच्वरीम्
श्री वाणी परिसेविताङ्घ्रियुगळाम् श्रीमत्क्रुपासागराम् ।
चोकापद्‍भय मोचिऩीम् सूकविता नन्दैक सन्दायिऩीम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥२॥

ஸ்ரீ காமேச்வர பீட² மத்ய நிலயாம் ஸ்ரீ ராஜராஜேச்வரீம்
ஸ்ரீ வாணீ பரிஸேவிதாங்க்ரியுக³ளாம் ஸ்ரீமத்க்ருபாஸாக³ராம் |
சோகாபத்³ய மோசினீம் ஸூகவிதா நந்தை³க ஸந்தா³யினீம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் || 2||

 माया मोहविऩाचिऩीम् मुऩिगणैराराधिताम् तऩ्मयीम्
च्रेय: सञ्चय दायिऩीम् गुणमयीम् वाय्वादि भूताम् सताम् ।
प्रात: काल समाऩचोभ मकुठाम् सामादि वेदैस्तुताम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥३॥

மாயா மோஹவிநாசினீம் முனிக³ணைராராதிதாம் தன்மயீம்
ச்ரேய: ஸஞ்சய தா³யினீம் கு³ணமயீம் வாய்வாதி³ பூதாம் ஸதாம் |
ப்ராத: கால ஸமானசோப மகுடா²ம் ஸாமாதி³ வேதை³ஸ்துதாம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் || 3||

बालाम् भक्तजऩौघ चित्तनिलयाम् बालेन्दु चूडाम्बराम्
सालोक्यादि चतुर्विधार्थ पलदाम् नीलोत्पलाक्षीमजाम् ।
कालारि प्रिय नायिकाम् कलिमल प्रद्‍वम्सिऩीम् कौलिऩीम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥४॥

பா³லாம் ப⁴க்தஜனௌக⁴ சித்தநிலயாம் பா³லேந்து³ சூடா³ம்ப³ராம்
ஸாலோக்யாதி³ சதுர்விதா⁴ர்த்த² பலதா³ம் நீலோத்பலாக்ஷீமஜாம் |
காலாரி ப்ரிய நாயிகாம் கலிமல ப்ரத்³வம்ஸினீம் கௌலினீம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் || 4||

आऩन्दामृत सिन्धु मध्‍य निलयाम् अक्ञाऩ मूलापहाम्
क्ञाऩाऩन्द विवर्धिऩीम् विजयदाम् मीऩेक्षणाम् मोहिऩीम् ।
क्ञाऩाऩन्दपराम् कणेच जऩऩीम् गन्धर्व सम्पूजिताम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥५॥

ஆனந்தா³ம்ருʼத ஸிந்து⁴ மத்⁴ய நிலயாம் அக்ஞான மூலாபஹாம் க்ஞானானந்த³ விவர்த்தி⁴னீம் விஜயதா³ம் மீனேக்ஷணாம் மோஹினீம் |
க்ஞானானந்த³பராம் கணேச ஜனனீம் க³ந்த⁴ர்வ ஸம்பூஜிதாம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் ||5||

षट्चक्रोपरि नादबिन्दु निलयाम् सर्वेच्वरीम् सर्वगाम्
षट् चास्त्रागम वेद वेदितगुणाम् षट्कोण सम्वासिऩीम् ।
षट्कालेऩ समर्च्चितात्म विभवाम् षड्‍वर्ग सम्छेदिऩीम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥६॥

ஷட்சக்ரோபரி நாத³பி³ந்து³ நிலயாம் ஸர்வேச்வரீம் ஸர்வகா³ம்
ஷட் சாஸ்த்ராக³ம வேத³ வேதி³தகு³ணாம் ஷட்கோண ஸம்வாஸினீம் |
ஷட்காலேன ஸமர்ச்சிதாத்ம விப⁴வாம் ஷட்³வர்க³ ஸம்சே²தி³னீம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் || 6||

  योगाऩन्दकरीम् जगत्सूखकरीम् योगीन्द्र चित्तालयाम्
एकामीच सूखप्रदाम् द्विजनुताम् एकान्त सञ्चारिणीम् ।
वागीचाम्, विधि, विष्णु, चम्भु, वरदाम् विच्वेच्वरीम् वैणिकीम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥७॥

யோகா³னந்த³கரீம் ஜக³த்ஸூக²கரீம் யோகீ³ந்த்³ர சித்தாலயாம்
ஏகாமீச ஸூக²ப்ரதா³ம் த்³விஜநுதாம் ஏகாந்த ஸஞ்சாரிணீம் |
வாகீ³சாம், விதி⁴, விஷ்ணு, சம்பு⁴, வரதா³ம் விச்வேச்வரீம் வைணிகீம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் ||7||

   बोधाऩन्दमयीम् बुधैरभिनुताम् मोदप्रदामम्बिकाम्
श्रीमद्‍वेदपुरीच दासविऩुताम् ह्रीङ्कार सन्धालयाम् ।
भेदाभेद विवर्जिताम् बहूविधाम् वेदान्त चूडामणीम्
वन्देहम् कमलाम्बिकाम् अऩुदिऩम् वाञ्छाऩुकूलाम् चिवाम् ॥८॥

போ³தா⁴னந்த³மயீம் பு³தை⁴ரபி⁴நுதாம் மோத³ப்ரதா³மம்பி³காம்
ஸ்ரீமத்³வேத³புரீச தா³ஸவினுதாம் ஹ்ரீங்கார ஸந்தா⁴லயாம் |
பே⁴தா³பே⁴த³ விவர்ஜிதாம் ப³ஹூவிதா⁴ம் வேதா³ந்த சூடா³மணீம்
வந்தே³ஹம் கமலாம்பி³காம் அனுதி³னம் வாஞ்சா²னுகூலாம் சிவாம் || 8||

इत्थम् श्रीकमलाम्बिकाप्रियकरम् स्तोत्रम् पटे‍द्‍यस्सदा
पुत्र श्रीप्रदमष्टसिद्धि पलदम् चिन्ता विऩाचास्पदम् ।
एति ब्रह्मबदम् निजम् निरुपमम् निष्कल्मषम् निष्कळम्
योगीन्द्रै रपि दुर्लभम् पुऩरयम् चिन्ता विऩाचम् परम् ॥९॥

இத்த²ம் ஸ்ரீகமலாம்பி³காப்ரியகரம் ஸ்தோத்ரம் படேத்³யஸ்ஸதா³
புத்ர ஸ்ரீப்ரத³மஷ்டஸித்³தி⁴ பலத³ம் சிந்தா விநாசாஸ்பத³ம் |
ஏதி ப்³ரஹ்மப³³ம் நிஜம் நிருபமம் நிஷ்கல்மஷம் நிஷ்களம்
யோகீ³ந்த்³ரை ரபி து³ர்லப⁴ம் புனரயம் சிந்தா விநாசம் பரம் || 9||
  
செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற திருமுகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்ப டுகிற‌வளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

ஸ்ரீகாமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவளே, ராஜராஜர்கள், ஈஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் சேவிக்கப்பட்ட, தாமரை போன்ற மென்பாதங்களைக் கொண்டவளே, ஐஸ்வர்யத்தை அளிக்கும் கருணைக் கடலாக இருப்பவளே, மனக்கவலை, ஆபத்துகள், பயம் ஆகியவற்றைப் போக்குகிறவளே,  நல்ல புலமையை அளித்து, அதனால் பேரானந்தத்துக்கு வழி வகுப்பவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

மாயையினால் ஏற்படும் அஞ்ஞானத்தை நீக்குகிறவளே, முனிவர்களால் ஆராதிக்கப்படுபவளே, பிரம்ம ஸ்வரூபமாக துலங்குபவளே, பலவித க்ஷேமங்களை மனம் மகிழ அளிப்பவளே, சத்குணங்கள் நிரம்பியவளே, சாதுக்களின் இதயத்தில் பிராணனுக்குக் காரணமான ஆகாச பூதமாக திகழ்பவளே, உதய காலத்திற்கு ஒப்பான சிவந்த ஒளியுடன் கூடிய கிரீடத்தை அணிந்தவளே, சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

சிறுமி வடிவினளாக  இருப்பவளே, பக்தர்களின் சித்தத்தில் உறைபவளே, சந்திர கலையை சிரஸில் தரித்தவளே, பரப்ரம்ம ஸ்வரூபிணியே, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவளே, நீலோத்பலம் போன்ற விழிகளை உடையவளே, பிறப்பு அற்றவளே, காலனைக் காலால் உதைத்த பரமசிவனுடைய பிரிய மனைவியே, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்குகிறவளே, சிவசக்தி ஸம்பந்தரூபமாக உள்ளவளே,  பக்தர்கள் விரும்பியதை ஈடேற்றுபவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.

ஆனந்த சமுத்திரத்தின் நடுவில் இருப்பவளே, அஞ்ஞானத்தின் ஆதிகாரணத்தையே போக்குகிறவளே, ஞானம், ஆனந்தம், இவற்றை நன்கு மேலோங்கச் செய்கிறவளே, ஜயத்தைக் கொடுக்கிறவளே, மீன் போன்ற கண்களை உடையவளே,மோகிக்கச் செய்கிறவளே, ஞானம் ஆனந்தம் இவற்றிற்குக் காரணமாக இருப்பவளே, ஸ்ரீமகாகணபதியின் தாயே!! , கந்தர்வர்களால் சிறப்பாக பூஜிக்கப்பட்டவளே, கோரிய பொருளை அளிப்பவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.

ஷட்சக்ரத்தின் (அறுகோண சக்கரத்தின்) மீது நாதபிந்துவில் இருப்பவளே, யாவருக்கும் ஈஸ்வரியாய் விளங்குபவளே, எங்கும் வியாபித்திருப்பவளே, ஆறு சாஸ்திரம், ஆகமங்கள், நான்கு வேதங்கள், ஆகிய‌வைகளால்  அறியப்பட்ட குணங்களை உடையவளே, ஷட்கோணங்களில் இருப்பவளே, ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவளே, காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் எனும் ஆறு  பகைவர்களையும் அழிப்பவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமாய்த் துலங்குபவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

தியான யோகத்தினால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவளே, உலகத்திற்கு சுகத்தை அளிப்பவளே, யோகீந்த்ரர்களின் மனதைக் கோயிலாகக் கொண்டவளே, பரமசிவனுக்கு சுகத்தை அளிப்பவளே, வேதியர்களால் துதிக்கப்பட்டவளே, பிரளய காலத்திலும் தனித்து நிற்பவளே, வாக்கிற்கு ஈஸ்வரியாக விளங்குபவளே, பிரம்மா, விஷ்ணு, சிவன்,  ஆகியோருக்கும்  வரங்களை அளிப்பவளே, உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாகத் திகழ்பவளே, வீணா வாத்யத்தில் தேர்ச்சி பெற்றவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

ஞானானந்த ஸ்வரூபிணியே,  சான்றோர்களால்  சிறப்பாக ஸ்தோத்திரம் செய்யப்படுகின்ற‌வளே, சந்தோஷத்தை அளிக்கிறவளே, அம்பிகையே, வேதபுரீச தாஸரால் துதிக்கப்பட்டவளே, ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தை ஆலயமாகக் கொண்டவளே, வேறுபட்டது, வேறுபடாதது இவ்விரண்டும் அற்றவளே, பலவிதமாய் காட்சி தருபவளே, வேதாந்தங்களுக்கு  மணிமகுடமாக இருப்பவளே, கோரிய பலனை அளிப்பவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

 குழந்தைச் செல்வம் மற்றும் எல்லாச் செல்வங்களையும், எட்டு சித்திகளின் பயனையும் அளித்து கவலைகளைப் போக்கும் ஸ்ரீ கமலாம்பிகைக்குப் பிரியமான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ அவர்கள், இணையற்ற, உருவமற்ற, களங்கமற்ற, சிறந்த யோகிகளுக்கும் எட்டாத மேலான பிரம்மபதத்தை அடைவார்கள்.

No comments:

Post a Comment