Tuesday, June 18, 2013

Papa Hara Dashami - பாப ஹர தசமி


 பாப ஹர தசமி
நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் மாதம் 18ம் தேதி) ஜேஷ்ட சுக்ல தசமி திதி தினம் பாபஹர தசமி தினமாக கொண்டாடப்படுகிறது. புண்ணிய நதியான கங்கையின் அவதார தினமாகவும் இதை கொண்டாடுவர். கங்கா ஸ்நானம் செய்வது தச வித (பத்து விதமான) பாபங்களையும் அழித்து புண்ணியத்தை அருளும் என்று புராணங்கள் கூறுகிறது.

அன்று பாபங்களை அழிக்க (பாப ஹர) வல்ல ஸ்தோத்ரங்களை ஜப பாராயணம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். 

கங்கா ஸ்துதி (ப்ரஹ்ம புராணம்), தச பாபஹர கங்கா ஸ்துதி (ஸ்கந்த புராணம்), கங்காஷ்டகம் (ஸ்ரீதர அய்யர்வாள்) மற்றும் பாப ப்ரஸமன ஸ்தோத்ரம் (வாமன புராணம்) ஆகிய ஸ்தோத்ரங்களை இந்நாளில் பாராயணம் செய்யலாம். 

கங்கா ஸ்துதி (ப்ரஹ்ம புராணம்)
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கிஷ்கிந்தா வாசத்தின் போது வானரர்களிடம் உபதேசித்த இந்த அரிதான ஸ்துதி ப்ரஹ்ம புராணம், பகுதி 157, தீர்த்த மஹாத்மிய அத்தியாயம்,  கவுதமி மஹாத்மியம்  படலத்தில் உள்ளது. இந்த ஸ்துதி கங்கையின் மஹாத்மியத்தை விவரிப்பதோடு இல்லாமல் பிரார்த்தனையாகவும் அமைந்துள்ளது. 

ஸ்ரீ ராமரால் அருளப்பட்ட கங்கா ஸ்துதி மிகவும் விசேஷமானது. கலியுகத்தில் நினைத்த மாத்திரத்திரத்தில் பாபங்களை அழித்து உய்விக்கும் திருநாமம் ஸ்ரீ ராம நாமம். ஆனால் ஸ்ரீ ராமனே கங்கையின் மஹாத்மியம் தன் திருநாமத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தது என உபதேசிக்கிறார்.

தசபாப ஹர கங்கா ஸ்துதி (ஸ்கந்த புராணம்) 
புண்ணிய நதியாம் கங்கையை துதி செய்யும் இந்த ஸ்தோத்ரம் ஸ்கந்த புராணத்தில் உள்ளது.  அரிதான சக்தி வாய்ந்த இந்த ஸ்தோத்ர பாராயணம் முந்தைய பத்து பிறவிகளில் செய்த பாபங்களை அழித்து இப்பிறவியில் ஏற்படும் இன்னல்களையும், இடர்களையும் எதிர்நோக்க துணிச்சலான மன ஆற்றலை அருளும் வல்லமை கொண்டது.

பாப ப்ரஸமன ஸ்தோத்ரம் - (வாமன புராணம்)
மஹாவிஷ்ணுவின் திருநாமங்களை துதிப்பதாக அமைந்த இந்த பாப ப்ரஸமன ஸ்தோத்ரம் வாமன புராணத்தில் உள்ளது. வாரணசியில் எழுந்தருளியுள்ள ருத்ர தேவரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ர பாராயணம் அனைத்து பாபங்களையும் போக்குவதோடு,  தேவர்களிடம் நற்புகழையும் மதிப்பையும் பெற்றுத் தரும் என்று பலஸ்ருதியில் சொல்லப்பட்டுள்ளது. 
  
கங்கா ஸ்துதி (ப்ரஹ்ம புராணம்) - இங்கு சொடுக்கவும்
தசபாப ஹர கங்கா ஸ்துதி (ஸ்கந்த புராணம்) - இங்கு சொடுக்கவும்
பாப ப்ரசமன ஸ்தோத்ரம் (வாமன புராணம்) - இங்கு சொடுக்கவும்
 
பத்து வித பாபங்களைப் போக்கும் பாப ஹர தசமியை பற்றி மேல் விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.

கங்கையின் அவதார தினத்தை பற்றி மேல் விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.


No comments:

Post a Comment