Thursday, May 30, 2013

Sri Garbharakshambiga Stotram - ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம்ʼ

அம்பாளிடம் சரணாகதி அடைந்து "அம்மா நீயே எனக்கு எல்லாமும்" என்று மனமுருகி வேண்டினால் அன்னையானவள் நிச்சயம் காத்து ரக்ஷிப்பாள். பிரார்த்தனையின் வடிவமே ஸ்தோத்ரங்கள். ஒவ்வொரு ஸ்தோத்திரத்தையும் அதற்குரிய விதிமுறைகளின் படி பாராயணம் செய்தால் நிச்சயம் வாழ்வின் விடிவெள்ளி தோன்றும். நாம் உணரக்கூடிய, வரவேற்றத்தக்க மாறுதல்கள் தென்படும்.

உலக நன்மைக்காக, பெரும் மஹான்களும் ரிஷிகளும் அருளிச் செய்திருக்கும் ஸ்தோத்ரங்கள் ஏராளம். அறிந்த வரை அவற்றின் எண்ணிக்கை சுமார் 1000 ஐ தொடும். அவை எல்லாவற்றிலும் மணிமகுடமாக கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரத்தை சொல்லலாம். ஏன்? பிற ஸ்தோத்ரங்கள் நாம் நமக்காக பிரார்த்திப்பது. ஆனால் கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம் வயிற்றில் வளரும் தன் கருவிற்காக அன்னை பிரார்த்திப்பது. ஒரு அன்னையின் தியாகவாழ்க்கை, குழந்தை கருவாக வயிற்றில் உருக்கொள்ளும் பொழுதிலிருந்து தொடங்கி விடுகிறது. இந்த ஒரு காரணம் போதாதா....,  இதற்கு மகுடம் சூட்ட!!!. 

கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரத்தின்  மகிமையினால்  பயனடைந்த குடும்பங்கள் அநேகம். இந்த ஸ்தோத்ரத்தின் மகிமை அபாரமானது.

பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்,  ரிஷி சௌநகரால் இயற்றப்பட்ட மற்றுமொரு கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம் என இரண்டு ஸ்தோத்ரங்களையும் இப்பதிவில் காணலாம். இவற்றில் சௌநகரால் அருளப்பட்ட ஸ்தோத்ரம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம்ʼ
(பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர்)

ஸ்ரீ மாத⁴வீ கானனஸ்த்தே க³ர்ப்ப⁴
ரக்ஷாம்பி³கே பாஹீ ப⁴க்தம் ஸ்து²வந்தம் |  
( ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவுக்கு பின்னரும்...)

வாபீ தடே வாம பா⁴கே³, வாம தே³வஸ்ய தே³வீ ஸ்தி²தா த்வம்ʼ,
மான்யா வரேண்யா வதா³ன்யா, பாஹி,
க³ர்ப்ப⁴ஸ்த்த‌ ஜந்தூன் ததா² ப⁴க்தா லோகான் . 1 (ஸ்ரீ மாத⁴வீ.... )

ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷாபுரேயா தி³வ்ய,
ஸௌந்த³ர்ய யுக்தா ,ஸுமாங்க³ல்ய கா³த்ரீ,
தா⁴த்ரீ, ஜனீத்ரீ ஜனானாம, தி³வ்ய,
ரூபாம் தயார்த்ராம் மனோஞாம் ப⁴ஜே தாம்ʼ . 2 (ஸ்ரீ மாத⁴வீ.... )

ஆஷாட⁴ மாஸே ஸுபுண்யே , ஸு²க்ர,
வாரே ஸுகந்தே⁴ன க³ந்தே⁴ன லிப்தா,
தி³வ்யாம்ப³ரா கல்ப வேஷா² வாஜ,
பேயாதி யாக்³யஸ்த்த‌ ப⁴க்தைஸ் ஸுத்³ருஷ்டா. 3 (ஸ்ரீ மாத⁴வீ.... )

கல்யாண தா⁴த்ரீம்ʼ நமஸ்யே, வேதீ³,
கா³ட்யஸ்த்ரியா   க³ர்ப⁴ ரக்ஷா கரீம்ʼ த்வாம்ʼ,
பா³லைஸ் ஸதா³ ஸேவீதா²ங்க்³ரிம், க³ர்ப்ப⁴
ரக்ஷார்த², மாராது⁴பே தை² ருபேதா²ம். 4 (ஸ்ரீ மாத⁴வீ.... )

ப்³ரஹ்மோத்ஸவே விப்ர வீத்³யாம் வாத்³ய
கோ⁴ஷேண துஷ்டாம் ரதே² ஸன்னிவிஷ்டாம்
ஸர்வார்த்த² தா⁴த்ரீம்ʼ ப⁴ஜேஹம், தே³வ
ப்ருந்தை³ரபீட்³யாம் ஜக³ன மாதரம் த்வாம்ʼ .5 (ஸ்ரீ மாத⁴வீ.... )

ஏதத்² க்ருʼதம் ஸ்தோத்ர ரத்னம், தீ³க்ஷீத²
அனந்த ராமேன தே³வ்யாஸ் ஸூதுஷ்ட்யை.
நித்யம் படேத்²யஸ்து ப⁴க்த்யா ,புத்ரா பௌத்ராதி³ பா⁴க்³யம்ʼ
ப⁴வேத் தஸ்ய நித்யம்ʼ ||  . 6 (ஸ்ரீ மாத⁴வீ.... )

|| இதி ஸ்ரீ ப்³ரஹ்ம ஸ்ரீ அனந்த ராம தீ³க்ஷீதா விரசிதம் க³ர்ப்ப⁴ரக்ஷாஅம்பி³கா ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம்ʼ || 

ஸ்ரீ க³ர்ப்ப⁴ரக்ஷா அம்பி³கா காயத்ரி மந்த்ர

ஓம்ʼ க³ர்ப்ப⁴ரக்ஷாம்பி³காயை ச வித்³மஹே மங்க³ல தே³வதா³யை ச தீ⁴மஹி
தன்னோ தே³வீ ப்ரசோத³யாத் |

ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம்ʼ  
( ரிஷி சௌநகரால் அருளப்பட்டது.)

எஷ்யேஷி பகவன் ப்ரும்ஹன், ப்ராஜா - கர்த்த: ப்ரஜா - பதே 
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச- இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...1

அஸ்விநௌ தேவ தேவேசௌ, ப்ரக்ருஹ்ணீதாம் பலிம் த்விமம் 
ஸாபத்யாம் கர்பிணீம் ச-இமாம் ச, ரக்ஷதம் பூஜயாSனயா ...2

ருத்ராஸா ஏகாதாஸ ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணந்து பலிம் த்விமம் 
யுஷ்மாகம் ப்ரீதயே வ்ருத்தம், நித்யம் ரக்ஷந்து கர்பிணீம் ...3

ஆதித்யா த்வாதஸ  ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணீத்வம் பலிம் த்விமம் 
யுஷ்மாகம் தேஜஸாம் வ்ருத்த்யா, நித்யம் ரக்ஷத கர்பிணீம் ...4

விநாயக கணாத்யக்ஷ, சிவ புத்ர மஹாபல
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச-இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம்...5

ஸ்கந்த ஷண்முக தேவேஸ புத்ரப்ரீதி விவர்த்தன
ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச-இமம்,  ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம்...6

ப்ரபாஸ: ப்ரபவஸ் - ஸ்யாம:, ப்ரத்யூஷோ மாருதோ - Sநல:
த்ருவோதரா தரஸ்சைவ, வஸவோஷ்டௌ ப்ரகீர்த்திதா:
ப்ரக்ருஹ்ணீத்வம் பலிம் ச-இமம், நித்யம் ரக்ஷத கர்பிணீம் ...7

பிதுர் - தேவி பிதுஸ் - ஸ்ரேஷ்டே, பஹு புத்ரி மஹா - பலே,
பூத ஸ்ரேஷ்டே நிஸா வாஸோ, நிர்வ்ருத்தே ஸௌநக - ப்ரியே
ப்ரக்ருஷ்ணீஷ்வ பலிம் ச - இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...8

ரக்ஷ ரக்ஷ மஹா தேவ, பக்த - அனுக்ரஹ - காரக
பக்ஷிவாஹன கோவிந்த, ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...9

ஸ்லோகங்களை ஜபிக்கும் முறை (கீழே கொடுத்துள்ள வரிசைப்படி, தினமும் 108 முறை ஜபம் செய்வது சிறந்தது)

கருவின் 
2 -ம் மாதத்தில் - முதல் 2 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
3 -ம் மாதத்தில் - முதல் 3 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
4 - ம் மாதத்தில் - முதல் 4 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
5 - ம் மாதத்தில் - முதல் 5 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
6 - ம் மாதத்தில் - முதல் 6 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
7 - ம் மாதத்தில் - முதல் 7 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
8 -ம் மாதத்தில் - முதல் 8 ஸ்லோகங்களை மட்டும் ஜபிக்கவும்
9 - ம் மாதத்தில் - எல்லா (9) ஸ்லோகங்களை ஜபிக்கவும்


(கருவின் இரண்டாவது மாதத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது இல்லை. கருவுற்றது தெரிந்தது முதலோ, அல்லது இந்த ஸ்லோகம் கிடைத்த உடனேயோ தொடங்கி, அந்த மாதத்திற்கான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதிலிருந்து சுப-ஆரம்பம் செய்யலாம்.)

1. பகவானே! ப்ரம்ஹ தேவனே! மக்களைப் படைப்பவரே ! மக்களைக் காப்பவரே ! (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்

2. அஸ்வினி தேவ தேவர்களே ! நைவேத்யத்துடன் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்வீர் ! இந்தக் குழந்தையோடு கூடிய கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.

3. ஏகாதச ருத்ர தேவர்களே ! உங்களது விருப்பத்திற்காகவும், க்ருபைக்காகவும் செய்யப்பட்ட நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.

4. துவாதச ஆதித்ய தேவர்களே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! உங்களது அதீதமான தேஜஸினால் குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.

5. விநாயகரே ! கணபதியே ! சிவபெருமான் மைந்தரே ! மஹா பலசாலியே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.

6. கந்தக் கடவுளே ! ஷண்முக தேவனே ! புத்திரர்களிடம் அன்பை வளர்த்துக் கொள்ள அருளுபவரே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் !  குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.

7. ப்ரபாஸர், ப்ரபவர், ஸ்யாமர், ப்ரத்யூஷர், மாருதர், அநலர், த்ருவர், தராதரர் ஆகிய கீர்த்தி மிகுந்த அஷ்ட வஸூ தேவர்களே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை எப்போதும் ரக்ஷிப்பீர்.

8. என் முன்னோர்களுக்கும் (பிதுர்களுக்கும்) தேவியாக விளங்கிய தேவியே ! பிதுர்களை எல்லாம் விட சிறப்பு மிக்க அன்னையே ! மக்கள் அனைவரையும் குழந்தைகளாகக் கொண்டு தாயாக விளங்குபவளே ! மிகுந்த ஆற்றல் உடைய பராசக்தியே ! அனைத்திற்கும் (அனைத்துப் பொருள்களுக்கும்) மேலானவளே ! ராத்திரி தேவியாக இருந்து காத்து ரக்ஷிப்பவளே ! தோஷங்களற்ற லலிதா பரமேஸ்வரியே ! சௌநகரால் ப்ரியத்துடனும் பக்தி ஸ்ரத்தையுடனும் பூஜிக்கப்பட்ட மாதாவே ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வாயாக ! குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷித்தருள்வாயாக.

9. மஹாதேவனே !  பக்தர்களுக்கு அருள்புரிபவனே ! காத்தருள்வாய். கருடனை வாகனமாகக் கொண்ட‌ கோவிந்தா ! இந்த நைவேத்யத்தை ஏற்றுக் கொள்வீர் !  குழந்தையோடு கூடிய (இந்தக்) கர்ப்பிணியை ரக்ஷிப்பீர்.


இதர ஸ்தோத்ரங்கள்
வம்சவிருத்திகர கவசம் - Click Here
புத்ரப்ராப்திகர மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் - Click Here
பாலரக்க்ஷா ஸ்தோத்ரம் - Click Here  


ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா  திருக்கருகாவூரில் கோவில் கொண்ட வரலாறு, கோயில் ஸ்தல புராணம், பூஜை விவரங்கள், திருக்கருகாவூர் செல்லும் வழி ஆகியவற்றின் மேல் விவரம் அறிய இங்கு சொடுக்கவும். 

No comments:

Post a Comment