Friday, February 15, 2013

Sri Sitala Ashtakam - சீ₂தலாஷ்டகம்



Image Courtesy - Google Images
 ॥ शीतलाष्टकं॥
अस्य श्रीशीतलास्तोत्रस्य महादेव ऋषिः।अनुष्टुप् छन्दः।  शीतला देवता।
लक्ष्मीर्बीजम्।  भवानी शक्तिः। सर्वविस्फोटकनिवृत्यर्थे जपे विनियोगः॥
ईश्वर उवाच।
वन्देऽहं शीतलां देवीं रासभस्थां दिगम्बराम्। मार्जनीकलशोपेतां शूर्पालङ्कृतमस्तकाम् ॥१॥
वन्देऽहं शीतलां देवीं सर्वरोगभयापहाम् । यामासाद्य निवर्तेत विस्फोटकभयं महत् ॥२॥
शीतले शीतले चेति यो ब्रूयद्दाहपीडितः। विस्फोटकभयं घोरं क्षिप्रं तस्य प्रणश्यति ॥३॥
यस्त्वामुदकमध्ये तु ध्यात्वा सम्पूजयेन्नरः। विस्फोटकभयं घोरं गृहे तस्य न जायते ॥४॥
शीतले ज्वरदग्धस्य पूतिगन्धयुतस्य च । प्रणष्टचक्षुषः पुंसस्त्वामाहुर्जीवनौषधम् ॥५॥
शीतले तनुजान् रोगान् नृणां हरसि दुस्त्यजान् । विस्फोटकविदीर्णानां त्वमेकाऽमृतवर्षिणी ॥६॥
गलगण्डग्रहा रोगा ये चान्ये दारुणा नृणाम् । त्वदनुध्यानमात्रेण शीतले यान्ति सङ्क्षयम् ॥७॥
न मन्त्रो नौषधं तस्य पापरोगस्य विद्यते । त्वामेकां शीतले धात्रीं नान्यां पश्यामि देवताम् ॥८॥
मृणालतन्तुसदृशीं नाभिहृन्मध्यसंस्थिताम् । यस्त्वां सञ्चिन्तयेद्देवि तस्य मृत्युर्न जायते ॥९॥
अष्टकं शीतलादेव्या यो नरः प्रपठेत्सदा । विस्फोटकभयं घोरं गृहे तस्य न जायते ॥१०॥
श्रोतव्यं पठितव्यं च श्रद्धाभाक्तिसमन्वितैः। उपसर्गविनाशाय परं स्वस्त्ययनं महत् ॥११॥
शीतले त्वं जगन्माता शीतले त्वं जगत्पिता । शीतले त्वं जगद्धात्री शीतलायै नमो नमः ॥१२॥
रासभो गर्दभश्चैव खरो वैशाखनन्दनः। शीतलावाहनश्चैव दूर्वाकन्दनिकृन्तनः ॥१३॥
एतानि खरनामानि शीतलाग्रे तु यः पठेत् । तस्य गेहे शिशूनां च शीतलारुङ् न जायते ॥१४॥
शीतलाष्टकमेवेदं न देयं यस्यकस्यचित् । दातव्यं च सदा तस्मै श्रद्धाभक्तियुताय वै ॥१५॥
॥ इति श्रीस्कन्दपुराणे शीतलाष्टकं सम्पूर्णम् ॥

|| ஸ்ரீ சீ²தலாஷ்டகம் ||

அஸ்ய ஸ்ரீசீ²தலா ஸ்தோத்ரஸ்ய மஹாதே³வ ரிஷி​:|

அனுஷ்டுப் ச²ந்த³:|  சீ²தலா தே³வதா | லக்ஷ்மீர் பீ³ஜம் |  பவானீ ஸ²க்தி​:|

ஸர்வவிஸ்போ²டக நிவ்ருத்யர்த்தே² ஜபே வினியோக³:||

ஈஸ்²வர உவாச |

வந்தே³Sஹம் சீ²தலாம் தே³வீம் ராஸபஸ்தா²ம் தி³க³ம்ப³ராம் |

மார்ஜனீ கலசோ²பேதாம் சூ²ர்ப்பாலங்க்ருத மஸ்தகாம்  || 1 ||

வந்தே³Sஹம் சீ²தலாம் தே³வீம் ஸர்வரோக³பயா பஹாம் |

யாமாஸாத்³ய நிவர்த்தேத விஸ்போ²டக பயம்மஹத் || 2 ||

சீ²தலே சீ²தலே சேதி யோ ப்³ரூயாத்³ தா³ஹபீடி³த​: |

விஸ்போ²டக பயம்கோரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்²யதி || 3 ||
 
யஸ்த்வா முத³க மத்யே து த்யாத்வா ஸம்பூஜயேன் நர​: |

விஸ்போ²டக பயம்கோரம் க்³ருஹே தஸ்ய ந ஜாயதே || 4 ||

சீ²தலே ஜ்வரத³க்³தஸ்ய பூதிக³ந்தயுதஸ்ய ச |

ப்ரணஷ்டசக்ஷுஷ​: பும்ஸஸ்த்வா மாஹுர் ஜீவநௌஷதம் || 5 ||

சீ²தலே தனுஜான் ரோகா³ன் ந்ருணாம் ஹரஸி து³ஸ்த்யஜான் |

விஸ்போ²டக விதீ³ர்ணானாம் த்வமேகா(அ)ம்ருத வர்ஷிணீ  || 6 ||

க³லக³ண்ட³க்³ரஹா ரோகா³  யே சான்யே தா³ருணா ந்ருணாம் |

த்வத³னுத்யான மாத்ரேண சீ²தலே யாந்தி ஸம்க்ஷயம் || 7 ||

ந மந்த்ரோ நௌஷதம்  தஸ்ய பாபரோக³ஸ்ய வித்³யதே |

த்வாமேகாம் சீ²தலே தாத்ரீம் நான்யாம் பச்²யாமி தே³வதாம் || 8 ||

ம்ருணாளதந்து ஸத்³ருசீ²ம் நாபிஹ்ருத்மத்ய ஸம்ஸ்த்தி²தாம் |

யஸ்த்வாம் ஸஞ்சிந்தயேத்³தே³வி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே || 9 ||

அஷ்டகம் சீ²தலாதே³வ்யா யோ நர​: ப்ரபடே²த் ஸதா³ |

விஸ்போ²டகபயம் கோரம் க்³ருஹே தஸ்ய ந ஜாயதே || 10 ||

ச்²ரோதவ்யம் படி²தவ்யம் ச ச்²ரத்³தா பக்தி ஸமன்வித​: |

உபஸர்க³ விநாசா²ய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத் || 11 ||

சீ²தலே த்வம்  ஜக³ன்மாதா சீ²தலே த்வம் ஜக³த்பிதா |

சீ²தலே த்வம் ஜக³த்³தாத்ரீ சீ²தலாயை நமோ நம​: || 12 ||

ராஸபோ க³ர்த்த³பஸ்²சைவ க²ரோ வைசா²க² நந்த³ன​: |

சீ²தலா வாஹனஸ்²சைவ தூ³ர்வாகந்த³ நிக்ருந்தன​: || 13 ||

ஏதானி க²ர நாமானி சீ²தலாக்³ரேது ய​: படே²த் |

தஸ்ய கே³ஹே சி²சூ²னாம்  ச சீ²தலாருங் ந ஜாயதே || 14 ||

சீ²தலாஷ்டகமே வேத³ம் ந தே³யம் யஸ்ய கஸ்யசித் |

தா³தவ்யம் ச ஸதா³ தஸ்மை ச்²ரத்³தா பக்தி யுதாய வை || 15 ||

||  இதி ஸ்ரீ ஸ்கந்த³புராணே சீ²தலாஷ்டகம் ஸம்பூர்ணம் ||


காலரா, அம்மை, வைசூரி போன்ற வெம்மை நோய்களுக்கு வட இந்தியாவில் அனைவரும் வழிபடும் தெய்வம் சீதளாதேவி. தமிழ் நாட்டில் நாம் எப்படி மாரியம்மனை வழிபடுகிறோமா அதே போல் அவர்கள் சீதளா தேவியை வழிபடுகின்றனர். கேரளாவிலும் சீதளாதேவி வழிபாடு மிகவும் பிரசித்தம். சீதளம் என்றால் குளிர்ச்சி. பண்டைய கேரளத்தில் ஜூரத்திலிருந்து விடுபட சீதளாதேவியை வழிபடுவர்.

சீதளாதேவி ஸ்தோத்ரத்திற்கு ரிஷி(ஸ்தோத்திரத்தை அருளியவர்) மஹாதேவர், அனுஷ்டுப் சந்தஸ், லக்ஷ்மீ பீஜம், பவானி சக்தி, அனைத்து விஷநோய்களுக்கும் நிவர்த்தி வேண்டும் நோக்கத்தோடு இந்த ஜபம் செய்யப்படுகிறது.

மஹாதேவரான சிவபெருமான் அருளிச் செய்தது:

தலைமேல் பறக்கும் முறக்காற்றாடியுடன், ஒரு திருக்கரத்தில் துடைப்பமும் மற்றொரு திருக்கரத்தில் பானையையும் ஏந்தி கழுதையின் மேல் மஹா நிர்வாண மோக்ஷம் என்னும் பேரானந்த நிலையில் பவனி வரும் சீதளா தேவியை வணங்குகிறேன்.

அனைத்து நோய்களையும் தீர்க்கும் தேவி சீதளா அம்மையை வணங்குகிறேன். வெம்மை நோயின் தாக்கத்தினால் ஏற்படும் பயம்,  சீதளா தேவியைப் பிரார்த்தனை செய்வதால் நீங்கும். 

வெம்மையின் தாக்கத்தால் தாகம் மேலிட பிரார்த்தித்த க்ஷணத்தில் நோயின் பயத்தை அழித்து தண்மை அளிக்கும் சீதளா தேவியை வணங்குகிறேன்.  

நீரின் நடுவில் நின்று தேவியை வழிபடுவோரின் வெம்மை நோய் பயத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் எப்பொழுதும் நோய் அண்டாமல் காக்கும் சீதளா தேவியை வணங்குகிறேன்.

அதி ஜூரத்தால் அவதிப்படுவோருக்கும், துர்நாற்றம் கிளம்பும் காயங்களினால் கஷ்டப்படுவோருக்கும், கண் பார்வை இழந்தவர்களுக்கும் அமிர்த சஞ்சீவினி என்னும் அருமருந்தாக இருக்கும் சீதளா தேவியை வணங்குகிறேன்.

தீராத வியாதிகளை குணப்படுத்தி அருளும் சீதளா தேவி, உடலெங்கும் வெம்மை நோய் அளித்த கொப்புளங்களால் அவதிப்படுவோருக்கு அமிர்த தாரையாகவும் விளங்குகிறாள். அத்தகைய (மகிமை பொருந்திய) சீதளாதேவியை வணங்குகிறேன்.
  
பயங்கரமான நோயான அம்மைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி) நின்னை நினைத்த கணமே நீங்கி விடும். அம்மா சீதளா தேவி உன்னை வணங்குகிறேன்.  

பாப கர்மத்தினால் (வினைப்பயனால்) விளையும் நோய்களுக்கு   மருந்தில்லாமல் அவதிப்படுவோருக்கு அன்னையாக அருமருந்து அருளி ரட்சிக்கும் சீதளாதேவியை வணங்குகிறேன்.

தாமரை தண்டினை ஒத்த நூலை போன்று, வயிற்றுக்கும், ஹ்ருதயத்திற்கும் இடையில் வசிக்கும் சீதளாதேவியை நினைவில் இருத்தி தியானிப்பவர்கள் மரணத்தை வெல்வர். 
 
சீதளா தேவியின் அஷ்டகத்தை நிதமும் பாராயணம் செய்பவர்கள் வசிக்கும் வீட்டில் அம்மை, வைசூரி போன்ற வெம்மை நோய்கள் ஒருபொழுதும் அண்டாது தேவி காத்து ரட்சிப்பாள்.
 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனளிக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

நிறைய இடங்களில் பிளேக் மாரியம்மன் என்று ஆலயம் அமைத்திருக்கிறார்கள்..

காரணம் கேட்டால் இந்த ஆலயம் அமைத்தபிறகுதான்ஆந்த ஸ்தலத்தில் தோன்றிய கடுமையான உஷ்ண நோய்கள் தீர்ந்ததாக் குறிப்பிடுகிறார்கள்...

ஸ்தோத்திரப் பகிர்வு பயன் மிக்கது பாராட்டுக்கள்..

kshetrayatraa said...

தங்கள் வருகைக்கும், பதிவின் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

Post a Comment