Saturday, October 27, 2012

Bala Mukundashtakam - பா³லமுகுந்தா³ஷ்டகம்

Picture Courtesy - Google Images

॥ बालमुकुन्दाष्टकं॥
करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम्‌।
वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ १॥
संहृत्य लोकान्वटपत्रमध्ये शयानमाद्यन्तविहीनरूपम्।
सर्वेश्वरं सर्वहितावतारं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ २॥
इन्दीवरश्यामलकोमलांगं इन्द्रादिदेवार्चितपादपद्मम्‌।
सन्तानकल्पद्रुममाश्रितानां बालं मुकुन्दं मनसा स्मरामि॥ ३॥
लम्बालकं लम्बितहारयष्टिं शृंगारलीलांकितदन्तपङ्क्‍तिम्‌।
बिंबाधरं चारुविशालनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ ४॥
शिक्ये निधायाद्यपयोदधीनि बहिर्गतायां व्रजनायिकायाम्‌।
भुक्त्वा यथेष्टं कपटेन सुप्तं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ ५॥
कलिन्दजान्तस्थितकालियस्य फणाग्ररंगे नटनप्रियन्तम्‌।
तत्पुच्छहस्तं शरदिन्दुवक्‍त्रं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ ६॥
उलूखले बद्धमुदारशौर्यं उत्तुंगयुग्मार्जुन भंगलीलम्‌।
उत्फुल्लपद्मायत चारुनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ ७॥
आलोक्य मातुर्मुखमादरेण स्तन्यं पिबन्तं सरसीरुहाक्षम्‌।
सच्चिन्मयं देवमनन्तरूपं बालं मुकुन्दं मनसा स्मरामि॥ २॥
॥ इति बालमुकुन्दाष्टकम्‌ संपूर्णम्‌॥

  பா³லமுகுந்தா³ஷ்டகம் 
(ுத்ர லாபத்தையும்,  ஸர்வ பாக்யங்களையும் கொடுக்கக்கூடிய ஸ்தோத்ரம். சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களின் தமிழ் உரையுடன்).

கராரவிந்தே³ன பதா³ரவிந்த³ம்  முகா²ரவிந்தே³  வினிவேஸ²யந்தம்   |
வடஸ்ய பத்ரஸ்ய புடே ஸ²யானம்  பா³லம் முகுந்த³ம்  மனஸா ஸ்மராமி   || 1 ||

(தாமரை போன்ற கையினால், தாமரை போன்ற காலை,  தாமரை போன்ற முகத்தில் வைத்துக் கொள்ளுகிறவரும், ஆலிலை மேல் பள்ளி கொண்டவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே ஸ²யானமாத்³யந்த விஹீனரூபம்  |
ஸர்வேஸ்²வரம்  ஸர்வஹிதாவதாரம்  பா³லம்  முகுந்த³ம்  மனஸா ஸ்மராமி || 2 ||
 (உலகங்களை ஸம்ஹரித்து ஆலிலையின் மத்தியில் படுத்திருப்பவரும், ஆதி அந்தம் அற்ற உருவத்தை உடையவரும், எல்லோருக்கும் ஈஸ்வரனும், எல்லோருடைய ஹிதத்தின் பொருட்டு அவதரித்தவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

இந்தீ³வரஸ்²யாமள  கோமளாங்க³ம்  இந்த்³ராதி³தே³வார்சிதபாத³பத்³மம்  |
ஸந்தானகல்பத்³ருமமாஸ்²ரிதானாம்  பா³லம்  முகுந்த³ம் மனஸா ஸ்மராமி   || 3 ||

(நீலோத்பல புஷ்பம் போல் கருமையும், அழகும் வாய்ந்த சரீரத்தை உடையவரும், இந்திரன் முதலிய  தேவர்களால் பூஜிக்கப்பட்ட பாதகமலத்தை உடையவரும், அண்டினவர்களுக்குப் புத்ர லாபத்தைக் கொடுக்கும் கல்பக விருக்ஷம் போன்றவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

லம்பா³லகம்  லம்பி³தஹாரயஷ்டிம்  ஸ்²ருʼங்கா³ லீலாங்கிதத³ந்தபங்க்திம்  |
பி³ம்பா³தரம் சாருவிஸா²லநேத்ரம் பா³லம் முகுந்த³ம்  மனஸா ஸ்மராமி   || 4  ||

(தொங்குகின்ற முன்புறத்திலுள்ள கேசங்களை உடையவரும், தொங்குகின்றதும், நீண்டதுமான ஹாரத்தை உடையவரும், ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய பற்களின் வரிசைகளை உடையவரும், கோவைப்பழம் போன்ற உதட்டை உடையவரும், அழகியதும், நீண்டதுமான கண்களை உடையவருமான பாலமுகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

ஸி²க்யே நிதாயாத்³யபயோத³தீனி ப³ஹிர்க³தாயாம்  வ்ரஜநாயிகாயாம்‌  |
புக்த்வா யதே²ஷ்டம்  கபடேன ஸுப்தம்  பா³லம்  முகுந்த³ம்  மனஸா ஸ்மராமி  || 5 ||

(யசோதையானவள் உறியில் நல்லதான பால், தயிர் இவைகளை வைத்துவிட்டு வெளியில் சென்ற பொழுது அவைகளை இஷ்டம் போல் சாப்பிட்டு விட்டுப் பொய்யாகத் தூங்கும் பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

களிந்த³ஜாந்தஸ்தி²தகாளியஸ்ய ப²ணாக்³ரரங்கே³ நடனப்ரியந்தம்   |
தத்புச்ச²ஹஸ்தம்  ²ரதி³ந்து³வக்த்ரம்  பா³லம்  முகுந்த³ம் மனஸா ஸ்மராமி || 6 ||

(காளிந்தீ மடுவிலிருந்த காளியனென்ற பாம்பின் படமாகிற நர்த்தன மண்டபத்தில் நடனம் செய்வதில் ப்ரியமுள்ளவரும், காளியனுடைய வாலின் நுனியைக் கையில் வைத்துக் கொண்டவரும்,  சரத்காலத்து சந்திரனைப் போன்ற முகமுடையவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

உலூக²லே ப³த்³தமுதா³ரஸௌ²ர்யம்  உத்துங்க³யுக்³மார்ஜுன பங்க³லீலம்  |
உத்பு²ல்லபத்³மாயத சாருநேத்ரம் பா³லம் முகுந்த³ம் மனஸா ஸ்மராமி  || 7 ||

(உரலில் கட்டப்பட்டவரும், மஹாசூரரும், மிகவும் உயர்ந்த இரண்டு மருத மரங்களையும் கீழே வீழ்த்துதல் என்ற விளையாட்டை உடையவரும், மலர்ந்த செந்தாமரை போல் நீண்ட அழகிய கண்களை உடையவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

ஆலோக்ய மாதுர்முக²மாத³ரேண ஸ்தன்யம்  பிப³ந்தம் ஸரஸீருஹாக்ஷம்  |
ஸச்சின்மயம்  தே³வமனந்தரூபம்  பா³லம்  முகுந்த³ம்  மனஸா ஸ்மராமி   || 8 ||

(அன்புடன் தாயின் முகத்தை பார்த்து ஸ்தன்ய பானம் செய்கிறவரும், செந்தாமரை போன்ற இரு கண்களை உடையவரும், ஸத்ரூபியும், சித்ரூபியும், வெகு ரூபங்களை உடையவரும், தேவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்.)

||  இதி பா³லமுகுந்தா³ஷ்டகம்‌ ஸம்பூர்ணம்‌||

3 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

மிக அற்புதமான பதிவு. ஆலிலைக் கண்ணனின் அழகிய படமும் அருமை. மிக்க நன்றி.

kshetrayatraa said...

சகோதரியின் வருகைக்கும், வாழ்த்து பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

Anonymous said...

Thank you sir very nice its very useful for my daughter in law saskrit 2nd exam

Post a Comment