Thursday, July 19, 2012

Naga Chaturthi and Garuda Panchami Part II - நாகசதுர்த்தியும், கருட பஞ்சமியும்... பகுதி 2

கருட பஞ்சமி விரத கதை

வியாசமாமுனிவரிடமிருந்து ஞான நூல்கள் அனைத்தையும் உணர்ந்து , சௌனகர் முதலான முனிவர்களுக்கு சொல்லும் முகமாக‌ நமக்குச் சொன்னவர் ஸூதமுனிவர். கருட பஞ்சமி விரதத்தை கதையுடன் சௌனகாதி முனிவர்களுக்கு, ஸூத முனிவர் சொன்னது.

"உத்தமமான முனிவர்களே ! கச்யபருடைய மனைவியரில் ஒருத்தியான வினதை, கச்யபருடைய இன்னொரு மனைவியான கத்ருவுக்கு அடிமையாக இருந்தாள். வினதையின் மகனான கருடன் சுக்ல பஞ்சமி திதியில் பிறந்தவர். பலத்திற்கும், வீரத்திற்கும், தைரியத்திற்கும் அவருக்கு இணையே இல்லை என்னும் படியாக விளங்கினார்.

கருடன் ஒரு நாள் தன் தாயான வினதையிடம் அடிமையாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டார். வினதை, "மகனே ! உன் மாற்றாந்தாயான கத்ருவும் நானும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது அவள் உச்சைஸ்சிரவஸின்  (இந்திரனின் குதிரையின் பெயர்) வால் கறுப்பு நிறம் என்றாள். நான் மறுத்து 'வெண்மை நிறம்' என்றேன். அவளோ, சரி, பந்தயம். தோற்றவர் வென்றவருக்கு அடிமை என்று சொல்ல நானும் ஒப்புக்கொண்டேன். கத்ரு தன் குழந்தைகளான கருநாகங்களை அழைத்து உச்சைஸ்சிரவஸ் வாலில் சுற்றிக்கொள்ளச் சொன்னாள். கறுப்பு நிறம் கொண்ட அந்நாகங்களும் தாயான கத்ரு சொன்னபடியே செய்தன. இவற்றுள், வாசுகி முதலான சில நாகங்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அந்நாகங்களை, கத்ரு,"சர்ப்ப யாகத்தில் வீழ்ந்து மடியக் கடவது" என்று தன் மக்களென்றும் பாராமல் சாபமிட்டாள். அந்தச் சாபத்திலிருந்து விடுபடவே,வாசுகி பிரம்மதேவரைச் சரணடைந்து, அவரருளால், தம் குலம் காக்க வரமடைந்தாள். கருநாகங்கள் சுற்றிய உச்சைஸ்சிரவஸ்  வாலைக் கறுப்பு என்று கத்ரு காட்ட நானும் சூது வாது தெரியாமல் நம்பி ஒப்புக் கொண்டு விட்டேன். அவளுக்கு அடிமையாக ஆனேன்." என்று கூறினாள்.

இதைக்கேட்ட கருடன் உடனே தன் மாற்றாந்தாயான கத்ருவிடம் சென்று தன் தாயின் விடுதலைக்கு வழி கேட்டார். கத்ரு " தேவ லோகத்தில் உள்ள அமிர்தத்தைக் கொண்டு வந்தால், உன் தாயான வினதைக்கு விடுதலை கிடைக்கும்" என்றாள். கருடனும் சரி என்று ஒப்புக்கொண்டு விரைவாக தேவலோகத்தை அடைந்தார்.

கருடன் எதற்காக வந்திருக்கிறார் என்ற விவரம் தெரிந்த தேவேந்திரனும், தேவர்களும், வஜ்ராயுதம் மற்றும் பல ஆயுதங்களைக் கொண்டு கருடனைத் தடுத்தனர். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு மரியாதை தந்து தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார். இதைப்பார்த்த, இந்திரன், "மகிழ்ச்சி அடைந்தேன்," என்றான். கருடன் தன் தாயாரின் அடிமைத்தனத்தைக் கூறி, "அந்த அடிமைத்தனத்தைப் போக்கவே, நான் அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதைக் கொண்டுபோய் கத்ருவிடம் தந்த பிறகு, உடனே நீங்கள் மறுபடியும் இதைக்கொண்டு வந்து விடலாம்," என்று கூறினார். இந்திரனும் மகிழ்ந்து அனுமதி அளித்தான். அத்துடன் பாம்புகளை உணவாகக் கொள்ளும் வரமும் தந்தான். அனுமதி பெற்ற கருடன் அமிர்தம் இருக்குமிடம் சென்று அதை எடுக்கும் போது அங்கே காவல் காத்துக் கொண்டிருந்தவர்கள் பலவிதமான ஆயுதங்களால் கருடனைத் தாக்கினார்கள். ஆனால் கருடனோ அவர்களை எல்லாம் வென்று அமிர்தத்தைக் கொண்டு வந்து கத்ருவிடம் தந்தார். அவளும் மகிழ்ந்து கருடனை 'சுபர்ணன்' என்று பெயரிட்டு வாழ்த்தினாள். கருடன் தாயான வினதைக்கு விடுதலை கிடைத்தது.

தாயாரின் அடிமைத்தனம் நீங்குவதற்காக வீரம், பலம், தைரியம் இவைகள் கொண்ட கருடனின் சாமர்த்தியத்தையும், பணிவையும், அடக்கத்தையும் ஆயிரம் நாக்குகளைக் கொண்ட ஆதிசேஷனும் கூறிவிட இயலாது.
 
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்று ஆனது.

த்யான ஸ்லோகம்

ஸ்ரீ வாயுவாஹனாய நம:
அஷ்டாபதாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோரகாதீஸ்வர பூஷிதாங்கம்
அஷ்டாயுத ப்ரோஜ்வல தஷ்டபாஹூம்
அபீஷ்ட ஸித்தயை கருடம் ப்ரபத்யே
அம்ருத கலச யுக்தம் காந்தி ஸம்பூர்ண காத்ரம்
ஸகல விபூத வந்தயம் தேவ சாஸ்த்ரை ரசிந்த்யம்
விவித விமல பக்ஷைந் தூய மாநாண்ட கோளம்
ஸகல விஷவிநாசம் சிந்த்யேத் பக்ஷிராஜம்
ஸ்ரீ வாயுவாஹனாய நம:
ஸ்ரீ கருட அஷ்டோத்ரம் (ஒவ்வொரு நாமத்தின் முன்பும் 'ஓம்" என்னும் பிரணவத்தை சேர்த்து பின்னர் நாமாவின் இறுதியில் நம: என்று முடிக்கவும்.)

  1. ஸ்ரீ வாயுவாஹனாய
  2. வைநதேயாய
  3. ககபதயே
  4. காஸ்யபேயாய
  5. மஹாபலாய
  6. தப்தகாஞ்சநவர்ணாபாய
  7. ஸூபர்ணாய
  8. ஹரி வாஹனாய
  9. சந்தோமயாய
  10. மஹாதேஜஸே
  11. மஹோத்ஸாஹாய
  12. க்ருபாநிதயே
  13. ப்ரஹ்மண்யாய
  14. விஷ்ணுபக்தாய
  15. குந்தேந்து தவளாய
  16. சக்ரபாணி தராய
  17. ஸ்ரீமதே
  18. நாகாரயே
  19. நாகபூஷணாய
  20. விஜ்ஞாநதாய
  21. வித்யாநிதயே
  22. விஹகேசாய
  23. அநாமயாய
  24. பூதிதாய
  25. புவநத்ராத்ரே
  26. பயதாய
  27. பக்தவத்ஸலாய
  28. சத்யச்சந்தஸே
  29. மஹாபக்ஷாய
  30. ஸூராஸூரபூஜிதாய
  31. கஜ புஜே
  32. கச்ச பாசினே
  33. தைத்ய ஹந்த்ரே
  34. அருண அநுஜாய
  35. அம்ருதாம்சவே
  36. அம்ருதவபுஷே
  37. ஆனந்தநிதயே
  38. அவ்யாய
  39. நிகமாத்மனே
  40. நிராதாராய
  41. நிஸ்த்ரைகுண்யாய
  42. நிரஞ்ஜனாய
  43. நிர்விகல்பாய
  44. ப்ரஸ்மைஜ்யோதிஷே
  45. பராத்பரதர ப்ரியாய
  46. சுபாங்காய
  47. சுபதாய
  48. சூராய
  49. சூக்ஷ்மரூபிணே
  50. ப்ருஹத்தமாய
  51. விஷாசினே
  52. விஜிதாத்மனே
  53. விஜயாய
  54. ஜயவர்த்தநாய
  55. ஜாட்யக்னே
  56. ஜகதீசாய
  57. ஜநார்த்தநமஹாத்வஜாய
  58. ஜனசந்தாப ஹராய
  59. ஜராமரண வர்ஜிதாய
  60. கல்யாண தாய
  61. கலாதீதாய
  62. கலாதர ஸமப்ரபாய
  63. ஸோமபே
  64. ஸூரஸங்கேசாய
  65. யக்ஞவாஹனாய
  66. மஹாஜவாய
  67. அதிகாயாய
  68. மன்மதப்ரிய பாந்தவாய
  69. சங்கப்ருதே
  70. சக்ரதாரிணே
  71. பாலாய
  72. பஹூபராக்ரமாய
  73. ஸூதாகும்பதராய
  74. ஸ்ரீ லக்ஷ்மீ வாஹனாய
  75. துராதர்ஷாய
  76. அமராரிக்னே
  77. வஜ்ராங்காய
  78. வரதாய
  79. வந்த்யாய
  80. வாயுவேகாய
  81. நித்ய சூரயே
  82. விநதா நந்தநாய
  83. யதி பூஜ்யாய
  84. விஜிதாரி ஸங்குலாய
  85. பதத் வரிஷ்டாய
  86. ஸர்வேசாய
  87. பாபக்னே
  88. பாசமோசநாய
  89. அக்னிஜிதே
  90. ஜயநிர்கோஷாய
  91. ஜகதாஹ்லாத கராய
  92. வக்ரநாஸாய
  93. ஸூவக்த்ராய
  94. மாரக்னே
  95. மதபஞ்ஜநாய
  96. காலஜ்ஞாய
  97. கமலேஷ்டாய
  98. கலிதோஷ நிவாரணாய
  99. வித்யுந்நிபாய
  100. விசாலாங்காய
  101. விநதாதாஸ்யமோசநாய
  102. ஸோம பாத்மனே
  103. த்ரிவ்ருந்மூர்த்தயே
  104. ஸ்ரீ பூமிகாயத்ரீலோசநாய
  105. ஸாம காயநரதாய
  106. ஸ்ரக்விநே
  107. ஸ்வச்சந்தகதயே
  108. ஸர்வாக்ரண்யே
கருடாழ்வாரைப் பற்றி மேல் விவரம் (எனக்குத் தெரிந்தவரையில்)
  • பூஜையின் போது அடிக்கப்படும் கோயில் மணியின் மேலே கருடன் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • கருடரின் நிழல் விழும் இடங்களில் பயிர்கள் நன்கு செழுமையாக விளையும் என்று நம்பிக்கை உண்டு.
  • கெட்ட ஜந்துக்கள் வீட்டில் வராமலிருக்க கருடக்கிழங்கு வாசலில் கட்டும் பழக்கம் உண்டு.
  • பறவைகளின் அரசன் என்பதால் பக்ஷிராஜன். "சுபர்ணன், பன்னகாசனன், புஷ்பப்ரியன், மங்களாலயன், கலுழன், சுவர்ணன், புள்ளரசு, பெரிய திருவடி என்பன கருட பகவானின் வேறு பெயர்கள்.
  • எல்லோருக்கும் வரமளிக்கும் பகவானுக்குத் தானே அவரது வாகனமாயிருப்பதாக அவருக்கு வரமளித்த பெருமைக்குரியவர் கருடர்.
  • வேதமே உருவானவர் ஸ்ரீகருடாழ்வார். அவரது இறக்கைகள் மூன்று வேதங்களையும் குறிக்கின்றன் என்று சொல்வர்.
  • மற்ற பறவைகளைப் போல் இறக்கையை உதறிவிட்டுப் பறக்க மாட்டார். கருடர் ஒளி மயமானவர். நாகாபரணம் பூண்டவர். வைகுந்தத்தில் இவர் பகவானின் கண்ணாடியாக நிற்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் தான் பெருமாள் கோயில்களில் புறப்பாடு சமயத்தில் கண்ணாடி சேவை நடக்கிறது.
  • மத்ஸ்ய புராணம் பகவானும் கருடனும் ஒன்றே என்று வர்ணிக்கிறது.
  • கருடனைப் பார்த்தால் மனதில் ஜெபிக்க வேண்டிய மந்திரம் " மங்களானி பவந்து ".
  • கருடனின் குரல் - கருடத்வனி இசை நயமிக்கது என்று சொல்வர். மங்களகரமானது. சாமவேதத்துக்கு ஒப்பானது. இந்த இராக ஆலாபனையை திருமாங்கல்ய தாரண சமயத்தில் செய்வது மிகவும் சிறந்தது என்பர்.
  • ஸ்ரீ கருட காயத்ரியை குரு முகமாக உபதேசம் பெற்றுத் தான் ஜெபிக்க வேண்டும். ஸ்வாமி தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை கருடாழ்வார் தான் உபதேசித்ததாக கூறப்படுகிறது.
  • உறங்கச் செல்லும் போதும், ஊருக்குக் கிளம்பும் போதும் திருமண விசேஷங்களின்  போதும் கருட மந்திரம் சொல்வது சிறப்பு,

பஞ்ச ராத்ர ஸம்ஹிதையில் ஸ்ரீ கருடரின் சந்நிதியில் ஜெபிக்க வேண்டியதாகச் சொல்லப்பட்டுள்ள மந்திரம்:
" கருடாய நமஸ்துப்யம் ஸர்ப ஸர்ப்பேந்த்ர ஸ்தரவே !
வாகனாய மகாவிஷ்ணு தார்க்ஷ்யாய அமிதத்யே ஜஸே !!
இந்த மந்திரம் நல்ல நினைவாற்றலைக் கூட்டும். வேதாந்த அறிவை வளர்க்கும்.

பத்ம புராணத்தில் ஸ்ரீகருடனை உபாஸித்தால் பெறும் பலன்கள் கூறப்பட்டுள்ளன. அவை 
1. எதிரிகளை ஜெயித்தல்
2. எல்லோருக்கும் முதல்வனாக வருதல்
3. நம்மைப் பற்றிய பிறரது தவறான எண்ணங்களை அவர் மறக்குமாறு செய்தல்
4. காற்றில் மிதத்தல்
5. புயல், வெள்ளம் இவற்றைக் கண்டு பயமில்லாமலும் பாதிப்பில்லாமலும் இருத்தல்
6. வித்தைகள் செய்யும் திறன் (சித்தி) பெறுதல்
7. படிப்பில் ஆழ்ந்த கவனமுடையவர்களாய் இருத்தல்
8. பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெறுதல்

எல்லா நலங்களும் அருளும் ஸ்ரீ கருடர் பயங்களை நீக்கி, பராக்கிரமத்தையளித்து, முக்தி அளிக்கும் பரமனின் திருவருளையே என்றும் எண்ணும் பக்தியை நம் மனதில் பயிராக்கட்டும்.

2 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

very nice and useful post. Thank you so much.

kshetrayatraa said...

சகோதரிக்கு மிக்க நன்றி.

Post a Comment