தீர்க்க ஸௌமாங்கல்யத்தை அளிக்கும் ஸ்லோகம்
(இது, ஸத்யவானின் மனைவியான சாவித்ரி, ஸ்ரீ சாவித்ரீ தேவியை பூஜை செய்து நமஸ்கரித்து பிரார்த்தித்த சுலோகங்களாகும்.)
ஓம்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி |
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே ||
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி |
அவைதவ்யம்ச ஸௌபாக்யம் தேஹித்வம் மம ஸூவ்ருதே ||
புத்ரான் பௌத்ராம்ஸ்ச சௌக்யம் ச ஸௌமங்கல்யம் ச தேஹிமே ||
தனது
பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் ஆகியவற்றைத்
தரித்துக் கொண்டு இருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான ஹே ஸாவித்ரீ தேவீ!!!
(காயத்ரீ தேவி) உனக்கு நமஸ்காரம். கணவரோடு எந்நாளும் இணைந்திருத்தலை
(அதாவது தீர்க்க ஸௌமங்கல்யத்தை) எனக்கு அருள்வாயாக!!!.
பதிவ்ரதையும், மஹாபாக்யத்தை உடையவளும், தன்
பர்தாவிற்குப் பிரியமான வார்த்தைகளையே எப்போதும் பேசுகிறவளும் பக்தர்களை
ரக்ஷிப்பதையே வ்ரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி !! எனக்கு தீர்க்க
ஸௌமாங்கல்யத்தை (வைதவ்யம் இல்லாத நிலையை) அருள வேண்டும்.
புத்ர,பௌத்ரர்களுடன் சௌக்கியமாக, சௌமாங்கல்யத்துடன் வாழும் பாக்கியத்தை எனக்கு அருள்வாயாக.
No comments:
Post a Comment