Wednesday, July 25, 2012

Bhagyada Lakshmi - பாக்யாதா லக்ஷ்மீ


பாக்யாதா லக்ஷ்மீ
லக்ஷ்மீ பூஜையில் அவசியம் இடம் பெற வேண்டிய பாடல். பாக்கியத்தை அருளும் தாயே மஹாலக்ஷ்மீ !  இந்த அடியேனின் வீட்டிற்கு வருகை தருவாயம்மா என்று உள்ளம் தழுதழுக்க அழைக்கும் பாடல். இது புரந்தர தாஸர் க்ருதிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். ஆனால் இதை பாட பாட மஹாலக்ஷ்மீயின் கருணையை வீட்டில் நிதர்சனமாக காணலாம். இது கன்னட மொழியில் இயற்றப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில் கன்னடத்திலிருந்து தமிழுக்கு அப்படியே உச்சரிப்பை கொண்டு வர ப்ரயத்தனம் செய்துள்ளேன். இதைப் படிக்கும் கன்னடம் தமிழ் தெரிந்த அன்பர்கள், இதில் தவறு இருந்தால், அதை பின்னூட்டத்திலோ அல்லது தனி மெயில் மூலமாகவோ தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
இது வரமா லக்ஷ்மீ அதாவது வரமஹா லக்ஷ்மீ பூஜையில் அதிகமாக பாடப்படுவதால் இதற்கு ஸ்ரீ வரலக்ஷ்மீ பாடல் என்றே அறியப்படுகிறது.


ஸ்ரீ வரலக்ஷ்மீ பாடல் 
ராகம் -  ஸ்ரீ அல்லது மத்யமாவதி                                                              தாளம் - ஆதி

பல்லவி
பாக்யாதா லக்ஷ்மீ பாரம்மா நம்மம்ம நீ, சௌபாக்யாதா லக்ஷ்மீ பாரம்மா
சரணம்


கெஜ்ஜய காலு கிலுகிலு யெனுத, ஹெஜ் ஜய மயாலே ஹெஜ்ஜய நிக்குத

ஸஜ்ஜன ஸாது பூஜய வேளெகே, மஜ்ஜிகே யொளகின பெண்ணே யந்தே
  (பாக்யா...)
கனக வ்ருஷ்டி கரவுத பாரே, மன காமனெய சித்தி ஸிதோரே
தினகர கோடி தேஜவு ஹொளெயுத, ஜனக ராயன குமாரி பாரே                    
 (பாக்யா...)

ச'ங்கே யில்லாத பாக்யவ கொட்டு, கங்கண கைய்ய திருகுபாரே
குங்கு மாங்கிதே ! பங்கஜ‌ லோசனே ! வெங்கட ரமணன பட்ட ராணி          
(பாக்யா...)

அத்தித் தொலகதே பக்தா மனெயலி, நித்ய மஹோத்ஸவ நித்ய ஸூமங்கள

ஸத்யவு தோருத ஸஜ்ஜன மனதலி, சித்ததி ஹொளயுவ பத்ததி பொம்பே 
     (பாக்யா...)

ஸக்கரே துப்பவ காலிவிஹரிஸூ, சுக்ர வாரா பூஜய வேளெகே
அக்க ரெயுள்ள அளகிரி ராயன, சொக்க‌ புரந்தர விட்டலன ப்ரியே 
             (பாக்யா...)


இதில் பெரிய எழுத்தில் உள்ள 'த" வை தனியாகவும், அழுத்தியும் உச்சரிக்க வேண்டும். பாக்யாதா லக்ஷ்மீ பாடலின் அழகையும் அது பூஜையில் பாடப்படும் போது கொடுக்கும் ஒரு தெய்வீக தன்மையையும் இக்காணொளியில் கேட்கலாம். 


No comments:

Post a Comment