Wednesday, April 18, 2012

Sri Surya Satakam

ஸ்ரீ சூர்ய சதகம்
 

இதன் பிண்ணணி பற்றி எனக்குத் தெரிந்த இரு விபரங்கள். எது சரி என்பது எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

1. முதல் பிண்ணணி
சூரியனை வழிபடும் வழக்கம் நமது இந்திய கலாசாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்திருக்கிறது,  ஆரோக்கியமான நோய் நொடியின்றி வாழ சூர்ய வழிபாடு கட்டாயமாகிறது. சூரிய வழிபாட்டில் காயத்ரி தேவி வழிபாடும் கலந்திருக்கிறது. வேத காலம் முதல் ஏராளமான கவிஞர்கள் சூரியனை போற்றி பாடியுள்ளனர். மயூர பட்டர் அவர்களில் எல்லாம் முதன்மையானவராக கருதப்படுகிறார். அவரால் இயற்றப்பட்ட "சூர்ய ஸதகம்" மற்ற எல்லாவற்றையும் விட மேலானது எனக் கூறலாம். இதன் அருமை தெரிந்து முதலில் இத்தாலி நாட்டினர் தங்களது மொழியில் மொழி பெயர்த்தனர். பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இத்தாலியில் சுமார் 1605  A.D. ஆண்டிலும், ஆங்கிலத்தில் 1617 A.D ஆண்டிலும் வெளியிடப்பட்டது. மயூரகவி பட்டர் 7 ம் நூற்றாண்டை சேர்ந்தவர்.  போஜராஜ மன்னரின் அரசவையில் கவிஞராக இருந்தார். ஒரு முறை மயூரகவி பட்டர் அக்காலத்தில் மிகவும் கொடியதாக கருதப்பட்ட "பெருவியாதி" (leprosy) யினால் துன்பம் அடைந்தார். மயூரகவி வைத்திய அறிவு மிக்கவர். அதனால் மக்களின் பிணிகளை தீர்த்து குறிப்பாக பாம்பு கடியினால் உண்டாகும் விஷத்தாக்குதல் நோய்களை களைந்து மிகவும் பிரபலமானவர். ஆனால் தனக்கு வந்த பெருவியாதிக்கு மருந்து இல்லாமல் சிரமம் பட்ட போது, சூரிய சதகத்தை எழுதி சூரியனை வழிபட்டார். இதனால் சூரிய தேவனும் மகிழ்ச்சி அடைந்து அவர் முன் தோன்றி அவரை நோயிலிருந்து குணப்படுத்தினான்.

2. இரண்டாவது
சூரிய சதகத்தை எழுதிய மயூர பட்டர் முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவராகவும்,  ஹர்ஷவர்த்தன மகாராஜாவின் அரசவையில் கவிஞராகவும் இருந்தவர் என்று நம்பப்படுகிறது. அவரால் இயற்றப்பட்ட சூர்ய சதகம் கண் பார்வைக் குறைப்பாட்டினை குணப்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

இத்தனை அருமையான சூரிய சதகத்தை தமிழில் (சமஸ்கிருதம் மூலத்துடன்) நமது LIFCO புத்தக நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். இந் நிறுவனத்தினர் இதை பிழையின்றி உச்சரிப்பதற்கு வசதியாக இதை ஆடியோ வாகவும் வெளியிட்டுள்ளனர். இதன் ஆடியோ வெளியீடை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சூரிய சதகம் இலவச ஆடியோ வெளீயீட்டிற்கான டவுன்லோட் லிங்க் இதோ

2 comments:

Unknown said...

The download link is not available anymore.. can u kindly post that audio or provide a link for the audio. Thank you.

Unknown said...

Audio Link not working.. can you please post that audio or provide a new link.. Thank you

Post a Comment