Monday, April 9, 2012

Sri Subramanya Panchaga Stotra

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்
(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிட்டும். வியாதி, சத்ருபயம், மனக்கவலை, ரக்த நோய், கடன் முதலியன நீங்கும். மங்களங்கள் உண்டாகும்.)

விமலநிஜபதாப்ஜம் வேதவேதாந்த வேத்யம்
மம குலகுருநாதம் வாத்யகான ப்ரமோஹம்
ரமணஸூகுண ஜாலம் ரங்கராடபாகினேயம்
கமலஜநுதபாதம் கார்த்திகேயம் நமாமி

(பவித்ரமான சரண கமலங்களை உடையவரும், வேதங்கள், உபநிஷத்துகள் இவைகளால் அறியத்தக்கவரும் எனது குலகுருவாயிருந்து பாதுகாப்பவரும், வாத்யங்கள், பாடல்கள் இவைகளில் ரொம்ப மோஹம் கொண்டவரும், மனோஹரமான கல்யாண குணங்களின் கூட்டங்களை உடையவரும், ஸ்ரீ ரங்கனாதனின் மருமானும் பிரம்மதேவனால் துதிக்கப்பட்ட சரண கமலங்களை உடையவருமான ஸ்ரீ கார்த்திகேயனை நமஸ்கரிக்கின்றேன்.)

ஸிவஸரவணஜாதம் ஸைவயோகப்ரபாவம்
பவஹிதகுருநாதம் பக்தப்ருந்தப்ரமோதம்
நவரஸம்ருதுபாதம் நாத ஹ்ரீங்காரரூபம்
கவநமதுரஸாரம் கார்த்திகேயம் பஜாமி

(மங்களமான சரவணப் பொய்கையில் உண்டானவரும், சிவயோகத்தின் மஹிமையாக அமைந்தவரும் ஸ்ரீ பரமேச்வரனுக்கு ஹிதமான பிரணவார்த்தத்தை உபதேசித்த குருநாதரும் பக்தர்களின் கூட்டத்திற்கு ஆனந்தத்தை அளிப்பவரும் நவரஸத்தையும் அளிக்கும் அழகிய சரணகமலங்களை உடையவரும், நாதத்துடன் கூடிய (ஹ்ரீம்) பீஜஸ்வரூபத்தை உடையவரும் இனிமையான கவன சக்தியை அளிப்பவருமான ஸ்ரீ கார்த்திகேயனை (கிருத்திகாபுத்ரனை) ஸேவிக்கிறேன்.)

பாகாராதி ஸூதாமுகாப்ஜமதுபம்
பாலேந்து மௌளீஸ்வரம்
லோகாநுக்ரஹகாரணம் ஸிவஸூதம்
லோகேஸ தத்வ ப்ரதம்
ராகாசந்த்ர ஸமான சாருவதனம்
ரம்போருவல்லீஸ்வரம்
ஹ்ரீங்கார ப்ரணவஸ்ரூபலஹரீம்
ஸ்ரீ கார்த்திகேயம் பஜே

(பாகன் என்ற அஸூரனைக் கொன்ற இந்திரனின் பெண்ணான தேவஸேனையின் முகமாகிற தாமரைக்கு வண்டு போன்றவரும், பாலசந்திரனை தலையில் ஆபரணமாய்த் தரித்தவரும், உலகங்களை அநுக்ரஹிப்பவரும், ஸ்ரீபரமசிவனின் புத்ரரும் உலகங்களையெல்லாம் படைத்த பிரம்மதேவனுக்கு பிரணவார்த்தத்தை உபதேசித்தவரும், பெளர்ணமி சந்திரனைப் போன்ற அழகிய முகத்தை உடையவரும், வாழை போன்ற துடைகளை உடைய ஸ்ரீ வள்ளியின் கணவரும் ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ ஸ்வரூபமாக விளங்குகின்றவருமான ஸ்ரீ கார்த்திகேயனை சேவிக்கிறேன்.)

மஹாதேவாஜ்ஜாதம்
ஸரவணபவம் மந்த்ரஸரபம்
மஹத்தத்வாநத்தம்
பரமலஹரீம் மந்த்ர மதுரம்
மஹாதேவாதீதம்
ஸூரகணயுதம் மந்த்ரவரதம்
குஹம் வல்லீநாதம்
மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரிஸம்

(மஹாதேவனிடத்திலிருந்து உண்டானவரும் சரவணப் பொய்கையில் அவதரித்தவரும் மந்திரச்ரேஷ்டமாக விளங்குகிறவரும் (அல்லது பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை அடக்குவதில் சிம்மத்தை அடக்கும் சரபமிருகம் போன்றவராய் இருப்பவரும்), சிறந்த தத்வமாயும் ஆனந்த வடிவாயும் இருப்பவரும்,  பரம்பொருளாக விளங்குகிறவரும், மதுரமான மந்திர ஸ்வரூபமாய் விளங்குகிறவரும், ஸ்ரீ மஹா தேவனுக்கும் மேல்பட்டவரும் தேவர்களால் சூழப்பட்டவரும் தனது மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு வரன்களை அளிப்பவரும் ஸ்ரீ வள்ளியின் கணவரும் கழுகு மலையில் வசிக்கின்றவருமான ஸ்ரீகுஹனை ஹ்ருதய குஹையில் த்யானிக்கிறேன்.)

யாகாரம் நிகிலவரதம் நிர்மலம் பிரம்மதத்வம்
யம் தேவைர் விநுதசரணம் நிர்விகல்பாதியோகம்
நித்யாநந்தம் நிகமவிதிதம் நிர்குணம் தேவதேவம்
நித்யம் வந்தே மம குருவரம் நிர்மமம் கார்த்திகேயம்

(என்றும் விளங்கும் அழியாத ஸ்வரூபத்தை உடையவரும் யாவருக்கும் வரன்களை அளிப்பவரும் புண்ய பாபங்கள் அற்றவரும், பரப்ரும்ம தத்வமாய் விளங்குகிறவரும் தேவர்களால் தினந்தோறும் துதிக்கப்பட்ட சரணங்களை உடையவரும், நிர்விகல்பம் முதலிய சமாதிகளால் அடையத்தக்கவரும் நித்யாநந்த ஸ்வரூபியும் வேதங்களால் அறியப்பட்டவரும் முக்குணமற்றவரும் தேவாதிதேவனும் எனது குரு சிரேஷ்டரும் அஹங்காரமற்றவருமான ஸ்ரீ கார்த்திகேயனை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறேன்.)

பஞ்சகம் கார்த்திகேயஸ்ய ய:படேத் ஸ்ருணுயாதபி
கார்த்திகேய ப்ரஸாதாத் ஸ: ஸர்வாபீஷ்டமவாப்நுயாத்

(எவன் கார்த்திகேயனுடைய இந்த பஞ்சக (ஐந்து) ஸ்தோத்திரத்தைப் படிப்பானோ, கேட்பானோ அவன் ஸ்ரீ கார்த்திகேயனின் அருளால் ஸர்வாபீஷ்டங்களையும் அடைவான்.)

|| இதி ஸுப்ரஹ்மண்ய பஞ்சகம் சம்பூர்ணம் ||

No comments:

Post a Comment