Friday, December 23, 2011

சனி பரிகார ஸ்தோத்ரம்

சனி பகவான் பரிகார ஸ்தோத்ரம்
(கடன் நீங்கி, செல்வம் செழிக்க)

த்வயா ஹ்ருத்வா வாமம், வபுரபரித்ருப்தேந மநஸா
சரிரார்த்தம் சம்போ ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ருபம்ஸகல, மருபணாபம் த்ரிநயநம்
குசாப்யா - மாநம்ரம் குடில, சசிசூடால மகுடம்.

சனி பகவான் ஸ்தோத்ரம்
தேவரெண் டிசைக்கதிபர் சித்தரோடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியிறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன் காப்பு.

ஆதிவேதாந்த முதலரிய ஞானம்
ஐந்தெழுத்தினுட்பொருள் அயன்மாலோடும்
சோதி சிற்றம் பலத்திலாடி நின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே

பாதிமதிச் சடைக்கணிய அரவு பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற்பாடி யாடச்
சாதியில்லா வேடனிற் சிற்றின்ன வைத்தாய்
சனியனே காகமேறுந் தம்பிரானே

வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
விறகுகட்டுச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
மாலவனை உரலோடு கட்டி வைத்தாய்
வள்ளிதனைக் குறவரது மனத்தில் வைத்தாய்

காலனை மார்க்கண்டனுக்காக அரனுதைத்த
காரணமும் நீ பிடித்த கருமத்தாலே
சாலவுனை யான் தொழுதேன்னைத் தொடாதே !
சனியனே காகமேறுந் தம்பிரானே

மஞ்சு தவழயோத்தியில் வாழ் தசரதன்றன்
மக்களையும் வனவாசம் ஆக்கி வைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாட்டினையே படச் செய்வித்தாய்
எஞ்சலால் அரிச்சந்திரன் பெண்டைவிற்றே
இழிகுலத்தில் அடிமையுற இசைய வைத்தாய்
தஞ்சமெனவுனைப் பணிந்தேன் எனத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

அண்டமாயி ரத்தெட்டு மரசு செய்த
அடல் சூரபத்மனையும் அடக்கி வைத்தாய்
மண்டலத்தை ஆண்ட நளச்சக்ரவர்த்தி
மனைவியோடு வனமதில் அலையச் செய்தாய்
விண்தலத்தை பானு கோபன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரையும் வெருவச் செய்தாய்
தெண்டனிட்டேன் எந்நாளும் எனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

அண்டர்கோன் மேனியில் கண்ணாகி வைத்தாய்
அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
திண்டிறல் கொள் கெளதமன் அகலிகைதான்
சிலையாகவே சாப முறவே செய்தாய்
திண்டரள நகையிரத மாரன்றன்னைச்
சங்கரனார் நுதல் வழியிற் றனல் செய்வித்தாய்
சுண்டமிலாது உனைத்தொழுதேன் எனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

பாருலவு பரிதியைப் பல்லுதிர வைத்தாய்
பஞ்சவர்க்குத் தூது பீதாம்பரனை வைத்தாய்
தாருலவு வாலி சுக்ரீவன் தம்மைத்
தாரையினால் தீராத சமர் செய்வித்தாய்
சூரனெனுமிலங்கை ராவணன்றன் தங்கை
சூர்ப்பணகி மூக்குமுலை துண்டு செய்வித்தாய்
தாரணியு மணிமார்பா எனத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

சுக்ரன்றன் கண்ணிழந்தான் லங்கை யாண்டு
துலங்கு ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்க புகழ் இரணியென்றான் வீறழிந்தான்
விளங்கு திரிபுராதிகளும் வெந்து மாண்டார்
சக்கரத்தால் உடலறுத் தான்  சலந்தரன்றான்
தாருகா சூரனுமே சமரில் மாண்டான்
தக்கன் மிகச் சிரமிழந்தான் தோஷத்தாற்
சனியனே காகமேறுந் தம்பிரானே

அந்த முள ஐங்கரன் கொம்பறவே செய்தாய்
அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச் செய்தாய்
சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
சந்தமும் உனைப் பணிவேன் எனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

சீதைதனை இராவணனாற் சிறை செய்வித்தாய்
தேவர்களைச் சூரனாற் சிறை செய்வித்தாய்
மாது துரோ பதைதுயிலை வாங்குவித்தாய்
மகேச்வரனை யுமை பிரியும்வகை செய்வித்தாய்
போதில் அன்றாளிற்றளை பூட்டு வித்தாய்
பொதிகையினில் அகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
தாதுசேர் மலர்மார்பா எனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

அப்பர்தமை கருங்கல்லோடு அலையிற் சேர்த்தாய்
அரனடியில் முயலகனை யடங்கச் செய்தாய்
செப்பு மாணிக்கர்தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனை மச்சவுரு எடுக்கச் செய்தாய்
ஒப்பிலா அனுமான் வாலிலொளித் தீயிட்டாய்
ஒலிகடலின் நஞ்சையரன் உண்ண வைத்தாய்
தப்பிலா துனைத் தொழுதேன் எனத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே

நீரினையுண்டெழு மேகவண்ணா போற்றி
நெடுந் தபத்தில் அறுகமலக் கண்ணா போற்றி
சூரியன்றன் தவத்தில் வந்த பாலா போற்றி
துலங்கு நவக் கிரகத்துண் மேலா போற்றி
காரியென் பவர்களுபகாரா போற்றி
காசியினிற் கீர்த்தி பெற்ற தீரா போற்றி
மூரிகொளும் நோய் மகமா முடவா போற்றி
முதுமகளின் முண்டகத்தாள் போற்றி போற்றி

சூரியன் சோமன் செவ்வாய்
சொற்புதன் வியாழன் வெள்ளி
காரியனி இராகு கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாருயச் சக்கரத்தை
தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திர ருண்டாம்
பாக்கியம் நல்குந் தானே


சனி பகவான் ஸ்தோத்ரம் முற்றிற்று


No comments:

Post a Comment