Thursday, March 25, 2010

ஸ்ரீ லிங்காஷ்டகம்

 
ஸ்ரீ லிங்காஷ்டகம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்,  நிர்மல பாஷித சோபித  லிங்கம்
ஜன்மஜ துக்க  விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்          1

தேவமுனி  ப்ரவார்சித  லிங்கம்,  காமதஹம் கருணாகர லிங்கம்
ராவண  தர்ப்ப விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்          2

ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம், புத்தி  விவர்த்தன  காரண லிங்கம்
ஸித்த  ஸுராஸுர வந்தித லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்        3

கனக மஹாமணி  பூஷித லிங்கம், பணிபதி  வேஷ்டித  சோபித லிங்கம்
தக்ஷஸு யக்ஞ விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்          4

குங்கும சந்தன லேபித லிங்கம், பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்             5

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம், பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்            6

அஷ்ட தலோபரி  வேஷ்டித லிங்கம், ஸர்வ ஸமுத் பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசக லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்              7

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம், ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம்  பரமாத்மக லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்              8

(இதி ஸ்ரீ லிங்காஷ்டகம் ஸம்பூர்ணம்)

லிங்காஷ்டகம் (தமிழில்)
நான்முகன் திருமால் பூஜை செய் லிங்கம்
தூயசொல் புகழ் பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப்   பெருந்துயர்  போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          1

காமனை எரித்த பேரெழில் லிங்கம்
இராவணன்  கர்வம் அடக்கிய லிங்கம்
வழி வழி  முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          2

திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள்  லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          3

படம் எடுத்தாடும் பாம்பணை  லிங்கம்
கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          4

குங்குமம் சந்தனம் பொழிந்திடும்  லிங்கம்
பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்
வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          5

அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          6

எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்
எல்லாப் பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம்  அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          7

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்
வில்வமதை மலர் எனக்கொளும் லிங்கம்
தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம்          8

(ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழாக்கம் நிறைவு)

No comments:

Post a Comment