Sunday, April 23, 2017

Sri Durga Chandrakala Stuti - ஸ்ரீ துர்க்கா சந்த்ரகலா ஸ்துதி


Courtesy: Google Images

॥ दुर्गाचन्द्रकलास्तुती ॥

वेधोहरीश्वरस्तुत्यां विहर्त्रीं विन्ध्यभूधरे ।
हरप्राणेश्वरीं वन्दे हन्त्रीं विबुधविद्विषाम् ॥ १ ॥

अभ्यर्थनेन सरसीरुहसम्भवस्य, त्यक्तवोदिता भगवदक्षिपिधानलीलाम् ।
विश्वेश्वरी विपदपागमने पुरस्तात्, माता ममास्तु मधुकैटभयोर्निहन्त्री ॥ २ ॥

प्राङ्निर्जरेषु निहतैर्निजशक्तिलेशैः, एकोभवद्भिरुदिताखिललोकगुप्त्यै ।
सम्पन्नशस्त्रनिकरा च तदायुधस्यैः, माता ममास्तु महिषान्तकरी पुरस्तात् ॥३ ॥

प्रालेयशैलतनया तनुकान्तिसम्पत्- , कोशोदिता कुवलयच्छविचारुदेहा ।
नारायणी नमदभीप्सितकल्पवल्ली, सुप्रीतिमावहतु शुम्बनिशुम्भहन्त्री ॥ ४ ॥

विश्वेश्वरीति महिषान्तकरीति यस्याः, नारायणीत्यपि च नामभिरङ्कितानि ।
सूक्तानि पङ्कजभुवा च सुरर्षिभिश्च, दृष्टानि पावकमुखैश्च शिवां भजे ताम् ॥ ५ ॥

उत्पत्तिदैत्यहननस्तवनात्मकानि, संरक्षकाण्यखिलभूतहिताय यस्याः ।
सूक्तान्यशेषनिगमान्तविदः पठन्ति, तां विश्वमातरमजस्रमभिष्टवीमि ॥ ६ ॥

ये वैप्रचित्तपुनसुत्थितशुम्भमुख्यैः, दुर्भिक्षघोरसमयेन च कारितासु ।
आविष्कृतास्त्रिजगदार्तिषु रूपभेदाः, तैरम्बिका समभिरक्षतु मां विपद्भ्यः ॥ ७ ॥

सूक्तं यदीयमरविन्दभवादि दृष्टं, आवर्त्य देव्यनुपदं सुरथः समाधिः ।
द्वावप्यवापतुरभीष्टमनन्यलभ्यं, तामादिदेवतरुणीं प्रणमामि देवीम् ॥ ८ ॥

माहिष्मतीतनुभवं च रुरूं च हन्तुं, आविष्कृतैर्निजरसादवतारभेदैः ।
अष्टादशाहतनवाहतकोटिसंख्यैः, अम्बा सदा समभिरक्षतु मां विपद्भ्यः ॥ ९ ॥

एतच्चरित्रमखिलं लिखितं हि यस्याः, सम्पूजितं सदन एव निवेशितं वा ।
दुर्गं च तारयति दुस्तरमप्यशेषं, श्रेयः प्रयच्छति च सर्वमुमां भजेताम् ॥ १० ॥

यत्पूजनस्तुतिनमस्कृतिंभिर्भवन्ति, प्रीताः पितामह रमेशहरास्त्रयोऽपि ।
तेषामपि स्वकगुर्णंर्ददती वपूंषि, तामीश्वरस्य तरुणीं शरणं प्रपद्ये ॥ ११ ॥

कान्तारमध्यदृढलग्नतयाऽवसन्ना, मग्नाश्चवारिधिजले रिपुभिश्च रुद्धाः ।
यस्याः प्रपद्य चरणौ विपदस्तरन्ति, सा मे सदाऽस्तु हृदि सर्वजगत्सवित्री ॥ १२ ॥

बन्धे वधे महति मृत्युभये प्रसक्ते, वित्तक्षये च विविधे य महोपतापे ।
यत्पादपूजनमिह प्रतिकारमाहुः, सा मे समस्तजननी शरणं भवानी ॥ १३ ॥

बाणासुरप्रहितपन्नगबन्धमोक्षः, तद्बाहुदर्पदलनादुषया च योगः ।
प्राद्युम्निना द्रुतमलभ्यत यत्प्रसादात्, सा मे शिवा सकलमप्यशुभं क्षिणोतु ॥ १४ ॥

पापः पुलस्त्यतनयः पुनरुत्थितो मां, अद्यापि हर्तुमयमागत इत्युदीतम् ।
यत्सेवनेन भयमिन्दिरयाऽवधूतं, तामादिदेवतरुणीं शरणं गतोऽस्मि ॥ १५ ॥

यद्ध्यानजं सुखमवाप्यमनन्तपुण्यैः, साक्षात्तमच्युत परिग्रहमाश्व वापुः
गोपांगनाः किल यदर्चन पुण्यमात्रा, सा मे सदा भगवती भवतु प्रसन्ना ॥ १६ ॥

रात्रिं प्रपद्य इति मन्त्रविदः प्रपन्नान्, उद्बोध्य मृत्युवधि मन्यफलैः प्रलोभ्य ।
बुद्ध्वा च तद्विमुखतां प्रतनं नयन्तीं, आकाशमादिजननीं जगतां भजे ताम् ॥ १७ ॥

देशकालेषु दुष्टेषु दुर्गाचन्द्रकलास्तुतिः ।
सन्ध्ययोरनुसन्धेया सर्वापद्विनिवृत्तये ॥ १८ ॥

श्रीमदपय्यदीक्षितविरचिता दुर्गाचन्द्रकलास्तुतिः ।


|| து³ர்கா³சந்த்³ரகலாஸ்துதீ ||


வேதோ ஹரீஸ்²வரஸ்துத்யாம்ʼ விஹர்த்ரீம்ʼ விந்த்⁴யபூ⁴த⁴ரே |

ஹரப்ராணேஸ்²வரீம்ʼ வந்தே³ ஹந்த்ரீம்ʼ விபு³த⁴வித்³விஷாம் ||  1 ||


அப்⁴யர்த²னேன ஸரஸீருஹஸம்ப⁴வஸ்ய, த்யக்தவோதி³தா ப⁴க³வத³க்ஷிபிதா⁴னலீலாம் |

விஸ்²வேஸ்²வரீ விபத³பாக³மனே புரஸ்தாத், மாதா மமாஸ்து மது⁴கைடப⁴யோர்னிஹந்த்ரீ ||  2 ||


ப்ராங்னிர்ஜரேஷு நிஹதைர்னிஜஸ²க்திலேஸை²​:, ஏகோப⁴வத்³பி⁴ருதி³தாகி²லலோககு³ப்த்யை |

ஸம்பன்னஸ²ஸ்த்ரனிகரா ச ததா³யுத⁴ஸ்யை​:, மாதா மமாஸ்து மஹிஷாந்தகரீ புரஸ்தாத் || 3 ||


ப்ராலேயஸை²லதனயா தனுகாந்திஸம்பத்- , கோஸோ²தி³தா குவலயச்ச²விசாருதே³ஹா |

நாராயணீ நமத³பீ⁴ப்ஸிதகல்பவல்லீ, ஸுப்ரீதிமாவஹது ஸு²ம்ப³னிஸு²ம்ப⁴ஹந்த்ரீ ||  4 ||


விஸ்²வேஸ்²வரீதி மஹிஷாந்தகரீதி யஸ்யா​:, நாராயணீத்யபி ச நாமபி⁴ரங்கிதானி |

ஸூக்தானி பங்கஜபு⁴வா ச ஸுரர்ஷிபி⁴ஸ்²ச, த்³ருʼஷ்டானி பாவகமுகை²ஸ்²ச ஸி²வாம்ʼ ப⁴ஜே தாம் ||  5 ||


உத்பத்திதை³த்யஹனனஸ்தவனாத்மகானி, ஸம்ʼரக்ஷகாண்யகி²லபூ⁴தஹிதாய யஸ்யா​: |

ஸூக்தான்யஸே²ஷனிக³மாந்தவித³​: பட²ந்தி, தாம்ʼ விஸ்²வமாதரமஜஸ்ரமபி⁴ஷ்டவீமி ||  6 ||


யே வைப்ரசித்தபுனஸுத்தி²தஸு²ம்ப⁴முக்²யை​:, து³ர்பி⁴க்ஷகோ⁴ரஸமயேன ச காரிதாஸு |

ஆவிஷ்க்ருʼதாஸ்த்ரிஜக³தா³ர்திஷு ரூபபே⁴தா³​:, தைரம்பி³கா ஸமபி⁴ரக்ஷது மாம்ʼ விபத்³ப்⁴ய​: ||  7 ||


ஸூக்தம்ʼ யதீ³யமரவிந்த³ப⁴வாதி³ த்³ருʼஷ்டம்ʼ, ஆவர்த்ய தே³வ்யனுபத³ம்ʼ ஸுரத²​: ஸமாதி⁴​: |

த்³வாவப்யவாபதுரபீ⁴ஷ்டமனன்யலப்⁴யம்ʼ, தாமாதி³தே³வதருணீம்ʼ ப்ரணமாமி தே³வீம் ||  8 ||


மாஹிஷ்மதீதனுப⁴வம்ʼ ச ருரூம்ʼ ச ஹந்தும்ʼ, ஆவிஷ்க்ருʼதைர்னிஜரஸாத³வதாரபே⁴தை³​: |

அஷ்டாத³ஸா²ஹதனவாஹதகோடிஸங்க்²யை​:, அம்பா³ ஸதா³ ஸமபி⁴ரக்ஷது மாம்ʼ விபத்³ப்⁴ய​: ||  9 ||


ஏதச்சரித்ரமகி²லம்ʼ லிகி²தம்ʼ ஹி யஸ்யா​:, ஸம்பூஜிதம்ʼ ஸத³ன ஏவ நிவேஸி²தம்ʼ வா |

து³ர்க³ம்ʼ ச தாரயதி து³ஸ்தரமப்யஸே²ஷம்ʼ, ஸ்²ரேய​: ப்ரயச்ச²தி ச ஸர்வமுமாம்ʼ ப⁴ஜேதாம் ||  10 ||


யத்பூஜனஸ்துதினமஸ்க்ருʼதிம்பி⁴ர்ப⁴வந்தி, ப்ரீதா​: பிதாமஹ ரமேஸ²ஹராஸ்த்ரயோ(அ)பி |

தேஷாமபி ஸ்வககு³ர்ணம்ʼர்த³த³தீ வபூம்ʼஷி, தாமீஸ்²வரஸ்ய தருணீம்ʼ ஸ²ரணம்ʼ ப்ரபத்³யே ||  11 ||


காந்தாரமத்⁴யத்³ருʼட⁴லக்³னதயா(அ)வஸன்னா, மக்³னாஸ்²சவாரிதி⁴ஜலே ரிபுபி⁴ஸ்²ச ருத்³தா⁴​: |

யஸ்யா​: ப்ரபத்³ய சரணௌ விபத³ஸ்தரந்தி, ஸா மே ஸதா³(அ)ஸ்து ஹ்ருʼதி³ ஸர்வஜக³த்ஸவித்ரீ ||  12 ||


ப³ந்தே⁴ வதே⁴ மஹதி ம்ருʼத்யுப⁴யே ப்ரஸக்தே, வித்தக்ஷயே ச விவிதே⁴ ய மஹோபதாபே |

யத்பாத³பூஜனமிஹ ப்ரதிகாரமாஹு​:, ஸா மே ஸமஸ்தஜனனீ ஸ²ரணம்ʼ ப⁴வானீ ||  13 ||


பா³ணாஸுரப்ரஹிதபன்னக³ப³ந்த⁴மோக்ஷ​:, தத்³பா³ஹுத³ர்பத³லனாது³ஷயா ச யோக³​: |

ப்ராத்³யும்னினா த்³ருதமலப்⁴யத யத்ப்ரஸாதா³த், ஸா மே ஸி²வா ஸகலமப்யஸு²ப⁴ம்ʼ க்ஷிணோது ||  14 ||


பாப​: புலஸ்த்யதனய​: புனருத்தி²தோ மாம்ʼ, அத்³யாபி ஹர்துமயமாக³த இத்யுதீ³தம் |

யத்ஸேவனேன ப⁴யமிந்தி³ரயா(அ)வதூ⁴தம்ʼ, தாமாதி³தே³வதருணீம்ʼ ஸ²ரணம்ʼ க³தோ(அ)ஸ்மி ||  15 ||


யத்³த்⁴யானஜம்ʼ ஸுக²மவாப்யமனந்தபுண்யை​:, ஸாக்ஷாத்தமச்யுத பரிக்³ரஹமாஸ்²வ வாபு​:

கோ³பாங்க³னா​: கில யத³ர்சன புண்யமாத்ரா, ஸா மே ஸதா³ ப⁴க³வதீ ப⁴வது ப்ரஸன்னா ||  16 ||


ராத்ரிம்ʼ ப்ரபத்³ய இதி மந்த்ரவித³​: ப்ரபன்னான், உத்³போ³த்⁴ய ம்ருʼத்யுவதி⁴ மன்யப²லை​: ப்ரலோப்⁴ய |

பு³த்³த்⁴வா ச தத்³விமுக²தாம்ʼ ப்ரதனம்ʼ நயந்தீம்ʼ, ஆகாஸ²மாதி³ஜனனீம்ʼ ஜக³தாம்ʼ ப⁴ஜே தாம் ||  17 ||


தே³ஸ²காலேஷு து³ஷ்டேஷு து³ர்கா³சந்த்³ரகலாஸ்துதி​: |

ஸந்த்⁴யயோரனுஸந்தே⁴யா ஸர்வாபத்³வினிவ்ருʼத்தயே ||  18 ||


ஸ்ரீமத³பய்யதீ³க்ஷிதவிரசிதா து³ர்கா³சந்த்³ரகலாஸ்துதி​: |


ஸ்ரீ துர்க்கா சந்த்ரகலா ஸ்துதி ஸ்தோத்ரம் - அம்பிகை தன் சிரசில் தரித்துள்ள 16 சந்திர கலைகளைப் போன்று, 16  ஸ்லோகங்களால் அம்பிகையின் புகழைத் துதிக்கின்றது. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமான் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களால் இயற்றப்பட்ட அற்புதமான ஸ்தோத்ரம்.

தேவி வணக்கம் (காப்பு) : நான்முகன், திருமால், பரமேஸ்வரன் ஆகியோரால் துதிக்கப்படுபவளும், விந்தியமலையில் திருவிளையாடல் புரிந்திருப்பவளும், தேவர்களின் விரோதிகளை அழிப்பவளும், ஹரனின் ப்ராண நாயகியும் ஆன அம்பிகையை வணங்குகிறேன்.

ஐயனின் அருள்விழிகளை, கைகொண்டு மூடிமறைக்கும் திருவிளையாடல் புரிந்தவ
ளும், தாமரையில் தோன்றிய பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் மீண்டும் அவதரித்தவளும், மது-கைடபர்களை வதைத்தவளும், உலக நாயகியுமான என் தாய், என் இடர்களைக் களைய வேண்டி எதிரே தோன்றட்டும். 

முன்பு தேவர்களிடத்தில் வைக்கப்பட்ட தன் சக்தியின் அம்சங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு உலகைக் காக்கத் தோன்றியவளும், அந்தத் தேவர்களின் ஆயுதங்களிலிருந்து வெளிவந்த சக்தியின் அம்சங்களான பற்பல ஆயுதங்களுடன் கூடி மஹிஷாஸூரமர்த்தினியானவளுமான அம்பிகை எதிரே தோன்றட்டும் 


மலைமகளாம் பார்வதியின் தேக ஒளியிலிருந்து தோன்றியவளும், நீலோத்பலம் போன்ற தேஜஸ் மிக்க தேகம் உள்ளவளும், வணங்குவோருக்கு வாரி வழங்கக் கற்பகக்கொடி போல் காத்திருப்பவளும், சும்ப நிசும்பர்களை அழித்தவளுமான நாராயணீ என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தட்டும். 


வேத துல்யமான விச்வேச்வரீ, நாராயணீ என்ற நாமங்களடங்கிய துதிகள் யாவும் ஸூக்தங்கள். அவை பிரம்மா முதலான தேவர்கள், முனிவர்கள், அக்னிதேவன் ஆகியோர் மனதில் ஸ்புரித்து வெளிவந்தவை. அவ்வாறான ஸூக்தங்களால் துதிக்கப்பட்ட தேவியை நான் பூஜிக்கிறேன். 


தானே தோன்றித் தீயவரை அழித்த தேவியின் மகிமையைக் கூறும் ஸ்தோத்ரம் எல்லோரையும் ஆபத்திலிருந்து காக்க வல்லது என்பதால், அனைத்து உயிர்களின் நன்மையைக் கருதி (நிஷ்காம்யமாக), வேதங்களின் சாரமாம் உபநிஷத்துக்களை அறிந்த பெரியோர்கள் அதைப் பாராயணம் செய்கின்றனர். அவர்தம் போற்றுதலுக்குரிய உலகநாயகியை எப்போதும் துதிக்கிறேன். 


வைப்ரசித்தன், மீண்டும் எழுந்த சும்பன் முதலானோரால் மூவுலகிற்கும் ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் அச்சத்தையும் அகற்ற வேண்டி, எந்த தேவி ரக்ததந்திகா முதலான தோற்றங்களில் அவதரித்தாளோ, அவள் அதே போன்ற தோற்றங்களைக் கொண்டு என்னையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவாளாக 


ஸூரதன் என்ற அரசனும், ஸமாதி என்ற வணிகனும், பிரம்மா முதலான தேவர்கள் உளத்தில் ஸ்புரித்த ஸூக்தங்களான தேவி ஸ்துதியைப் பல ஆவ்ருத்திகள் பாராயணம் செய்ததால், அவர்கள் விரும்பிய, பிறரால் அடைய முடியாத பலன்களைத் தேவி அவர்களுக்கு அளித்தாள். அந்த உலக நாயகியை, பரம்சிவ பத்தினியை நமஸ்கரிக்கின்றேன்.


மாஹிஷ்மதிக்குப் பிறந்த மஹிஷாசூரனை ஸம்ஹரிக்கத் தன் சக்தியால் 18 கோடி கன்னிகைகள் கொண்ட சேனையுடனும் , ருரு என்ற  அசுரனை அழிக்க 9 கோடி கன்னிகைகள் கொண்ட சேனையுடனும் தோன்றிய அம்பிகை என்னை ஆபத்துகளிலிருந்து எப்போதும் காப்பாற்றுவாளாக

எந்த பராசக்தியின் சரித்திரத்தை முழுவதும் எழுதிப்பூஜித்தாலும், அல்லது வீட்டில் வைத்திருந்தாலும் கடக்க முடியாத ஆபத்துககளையும் ஒருவன் கடந்து மேன்மை அடைய முடியுமோ, அந்தப் பராசக்தியை, உமா தேவியை நான் வணங்குகிறேன். (வேதம், ஸ்தோத்ரம் போன்ற சிறப்பான நூல்களைப் எழுதிப் பூஜித்தாலும் அல்லது வீட்டில் பூஜை அறையில்  பூஜையில் வைத்திருந்தாலும் அங்கே ஸர்ப்பம் - திருட்டு முதலிய பயங்களுக்கு இடமே இல்லை என்ற கூற்று இங்கே வலியுறுத்தப்படுகிறது)

நான்முகன், மஹாவிஷ்ணு, மஹேச்வரன் போன்றோர் தேவி ஸ்துதி, பூஜை, நமஸ்காரம் ஆகியவை செய்து மனத்திருப்தி அடைகின்றனர். அந்த தேவர்களுக்கும், தனது ஸத்வம் முதலிய குணங்களால் உருவம் அருள்பவள் தேவி, அந்த தேவியை நான் சரணடைகிறேன். 


கானகத்தில் அகப்பட்டு வழி தெரியாது அல்லல் உறுவோர், கடலில் மூழ்கித் தத்தளிப்போர், மாற்றார் ஆக்ரமிப்பினால் அவதிப்படுவோர் போன்றவர்கள் எந்த அன்னையின் சரணாரவிந்தங்களில் அடைக்கலம் புகுந்து ஆபத்துக்களிலிருந்து விடுபடுகின்றனரோ, உலகங்கள் யாவற்றையும் படைக்கும் அந்த தேவி எப்போதும் என்னுள் இருக்கட்டும். 


சிறைவாசம், அழிவு, மரணபயம், சொத்துக்களை (உடைமைகள், உரிமைகளை) இழத்தல், அரசுத் தொல்லைகள், திருட்டு பயம், விலங்குகளின் பயம் போன்றவை அகல எந்த தேவியைப் பூஜிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனரோ, அந்த லோகமாதாவாம் பார்வதியை அடைக்கலம் புகுகின்றேன். 


பிரத்யும்னனின் குமாரனான அநிருத்தன் மீது பாணாஸூரன் நாகாஸ்த்ரத்தை ஏவினான். அதனைத் தளர்த்தி விடுதலை அளித்தவள் தேவி (ஸ்ரீகிருஷ்ண பகவான் பின்னர் வந்து தேவியின் தூண்டுதலுக்கிணங்க பாணாஸூரனை வென்றார்) அவளே அவனது வலிமையை அழித்து அநிருத்தன் - உஷா நல்வாழ்விற்கு வகை செய்தாள். அத்தகைய மங்கள ரூபியாம் பரதேவதை அனைத்து அமங்கலங்களையும் விலக்கி அருள்வாளாக. 


லக்குமியின் அவதாரம் ருக்மிணீ, தன் சுயம்வரத்திற்கு சிசுபாலன் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவள் (ராமாயண காலத்தில் தன்னை அபகரித்துச் சென்ற) புலஸ்த்ய புத்ரனான ராவணன் தான் மீண்டும் வந்து விட்டானோ எனப் பயந்து விடுகிறாள். அந்த பயத்தைத் தேவியைப் பூஜித்துப் போக்கிக் கொள்கிறாள். அப்படிப்பட்ட தேவியாம் பரமசிவ பத்தினியான பரதேவதையைச் சரணடைகின்றேன். 


பகவத் தியானம் பகவானின் தோற்றத்தை நெஞ்சில் நிலை நிறுத்தும். அதனால் அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். இந்த பாக்யம் பல ஜென்மாக்களில் செய்த புண்யங்களால்தான் சித்திக்கும். ஆனால் கோகுலத்தில் கோபிகளோ பகவானை நேரிலேயே கண்டு, விளையாடி, உறவாடி மகிழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியம்? இவர்கள் மார்கழி மாதத்தில் காத்யாயனியைப் பூஜித்ததுதான் இதற்குக் காரணம். அத்தகைய பரதேவதை எனக்கு அருள்புரிவாளாக 


'ராத்ரிம் ப்ரபத்யே' என்ற மந்திரத்தை அறிந்து தன்னிடம் சரணடைந்தவர்களை, உறக்கத்திலிருந்து எழுப்பி, மோக்ஷத்தைத் தவிர மற்ற வரங்களைத் தந்து ஏமாற்றும்போது அவர்கள் அதற்கு மயங்காமல் மோக்ஷத்தையே வேண்டினால், அவர்களுக்குப் பிறவியில்லாப் பெருவாழ்வும் அருளும் ஆதிமாதாவாம் பராசக்தியைப் பூஜிக்கிறேன் 


பலஸ்ருதி - தேச - கால  - வர்த்தமானங்கள் துஷ்டர்களாகும் போது (கெடுதல் அளிக்கும் போது), ஆபத்துக்கள் அகல ஸ்ரீதுர்க்கா சந்த்ரகலா ஸ்துதியை காலை மாலை இருவேளைகளிலும் அவசியம் ஜபிக்க வேண்டும்.

5 comments:

Ganapathi said...

Namaskarams.
All the slokas posted here are rare gems.
Thanks a lot for the uploads.
Is it possible to download the text, so that we can take a print out for our daily recital? If so how to? Because I'm not able to copy the sloka text.
Thanks
Ganapathi Neyveli

kshetrayatraa said...

I understand your difficulty but provision for download attracts copying from other bloggers & they don't even give credit for the source. You can use screenshot facility for printing..Thanks for Visiting blog & commenting.

Aparna said...

Want to know the text in tamil. Is it the commentary?

kshetrayatraa said...

Hi,
I hv given transliteration in tamil but if you are looking for normal tamil I doubt this stotra is available in tamil. If i get, will definitely post

Kailash said...

Thanks For sharing this information, if you are searching about
best tour operator for kailash mansarovar yatra, please contact us for more information.

Post a Comment