Image Courtesy - Google Image |
வாசகர்கள் கவனத்திற்கு:
பொதுவாக ஸ்தோத்ரம் என்றால் கடவுளை துதிப்பது , ஸ்தோத்ரங்கள் கடவுளின் அளவில்லா
மகிமையை புகழ்ந்து ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மகான்களால் மக்களின் நன்மைக்காக பாடலாக
இயற்றி அருளப்பட்டது. அவற்றை பாராயணம் செய்வதற்கு எவ்வித தடையும் என் சிற்றறிவுக்கு
எட்டியவரை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பொதுவிதிகளுக்கு, சில விதிவிலக்கு இருப்பது
போல், ஸ்தோத்ரங்களிலும் விதிவிலக்குகள் உண்டு. மந்திர உச்சாடனத்துடன் கூடிய ஸ்தோத்ரங்களை
பாராயணம் செய்வதற்கு குரு உபதேசம் அல்லது வேதம் நன்கு கற்றறிந்த பண்டிதர்கள் மூலம்
கற்று பிறகு பாராயணம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். இல்லையெனில் தவறான மந்திர உச்சாடனம்
பயன் அளிக்காமல் போவதுடன், பிற வீபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம். இதை கவனத்தில் கொள்ளவும்.
பீஜ மந்திரங்களுடன் கூடிய இந்த் ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் மிகவும் சக்தி
வாய்ந்தது. ஆதலால் மிகவும் கவனத்துடன் குரு முகமாக அல்லது வேதம் கற்றறிந்தவர் மூலம்
நன்கு கற்றறிந்து, பிறகு பாராயணம் செய்வது நல்லது.
பொதுவாக ஹனுமான் ஸ்தோத்ரத்தை எந்நாளும் செய்யலாம். ஆனால் நான் அறிந்த வரை
இந்த ஸ்தோத்ரத்தை வடநாட்டினர் புதன்கிழமை அன்று மட்டும் பாராயணம் செய்வது வழக்கமாக
இருந்து வருகிறது.
வழிபடும் மார்க்கத்திற்கு ஏற்ப, பாராயண விதிகளும் இரு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அவை:-
தந்திர விதி : கடுகு எண்ணெய் விளக்கேற்றி தினம் 108 முறை ஆக 41 நாட்கள்
ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்ய, அனைத்து தடைகளும் விலகி வேண்டியது கைக்கூடும்.
சாத்வீகம் : புதன் கிழமைகளில் சுத்த பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி
அனுமானை தியானித்து 108 முறை ஸ்தோத்ர பாராயணம் செய்ய தடைகள் விலகி, நல் ஆரோக்கியமும்,
செல்வமும் கைக்கூடும் என்பது நம்பிக்கை.
॥ श्री हनुमान वडवानल स्तोत्रम् ॥
श्री गणेशाय नमः ॥
ॐ अस्य श्री हनुमानवडवानल स्तोत्रमंत्रस्य ॥ श्रीरामचंद्र
ऋषिः ॥ श्रीवडवानल हनुमान देवता ॥ मम समस्तरोगप्रशमनार्थ आयुरारोग्यैक्ष्वर्या भिवृध्दर्थ
समस्तपापक्षयार्थं सीतारामचंद्र प्रीत्यर्थ हनुमान्वडवानल स्तोत्र जपमहं करिष्ये ॥
1 ॥
ॐ र्हां र्हीं ॐ नमो भगवते श्री महाहनुमंते प्रकटपराक्रम
सकलदिङ् मण्ड्लयशोवितानधवलीकृत जगत्रितय वज्रदेह रुद्रावतार लंकापुरीदहन उमाअमलमंत्र
उदधिबंधन दशशिरः कृतांतक सीताक्ष्वसन वायुपुत्र अंजनी गर्भसंभूत श्रीरामलक्ष्मणानंदकर
कपिसैन्य प्राकार सुग्रीवसाह्या रणपर्वतोत्पाटन कुमारब्रह्मचारिन् गभीरनाद सर्वपापग्रहवारण
सर्वज्वरोच्चाटन डाकिनीविध्वंसन ॥ 2 ॥
ॐ र्हां र्हीं ॐ नमो भगवंते महावीराय सर्वदुःखनिवारणाय
ग्रहमंडळ सर्वभूतमंडल सर्वपिशाचमण्डलोच्चाटन भूतज्वर एकाहिकज्वर द्वयाहिकज्वर त्र्याहिकज्वर
चातुर्थिकज्वर संपापज्वर विषमज्वर तापज्वर माहेक्ष्वर वैष्णवज्वरान् छिं धि छिं धि
यक्षब्रह्मराक्षस भूतप्रेतपिशाचान् उच्चाटय् उच्चाटय ॥ 3
॥
ॐ र्हां र्हीं ॐ नमो भगवते श्री महाहनुमते ॥ 4 ॥
ॐ र्हां र्हीं र्हूं र्हैं र्हौं र्हं: आं हां हां हां
हां औं सौ. एहि एहि ॐ हं ॐ हं ॐ हं ॐ हं ॥ 5 ॥
ॐ नमो भगवते श्रीमहाहनुमते श्रवणचक्षुभूतानां शाकिनीडाकिनीना
विषमदुष्टांना सर्वविषं हर हर ॥ 6 ॥
आकाशभुवनं भेदय भेदय छेदय छेदय मारय मारय शोषय शोषय मोहय
मोहय ज्वालय ज्वालय
प्रहारय प्रहारय सकलमायां भेदय भेदय ॥ 7 ॥
ॐ र्हां र्हीं ॐ नमो भगवते महाहनुमते सर्व ग्रहोच्चाटन
परबल क्षोभय क्षोभय ॥
सकल बंधनमोक्षणं कुरु कुरु ॥
शिरःशुलगुल्मशुल सर्वशूलान्निर्मूल्य निर्मूलय ॥ 8 ॥
नागपाशनंत्तवासुकित्तक्षककर्कोटक कालियान् यक्षकुल जलदगतबिलगत
रात्रिंचर दिवाचर सर्वान्निर्विषं ॥ कुरु कुरु स्वाहा ॥ 9 ॥
राजभय चोरभय परमंत्र परयंत्र परतंत्र परविद्याश्छेदय
छेदय ॥ 10 ॥
स्वमंत्र स्वयंत्र स्वतंत्र स्वविद्याः प्रकटय प्रकटय
॥ 11 ॥
सर्वारिष्टान्नाशय नाशय ॥ 12 ॥
सर्वशत्रून्नाशय नाशय ॥ 13 ॥
असाध्यं साधय साधय ॥ 14 ॥
हुं फ़्ट् स्वाहा ॥
॥ इति बिभीषणकृतं हनुमद्वडवानलस्तोत्र संपूर्णम् ॥
|| ஸ்ரீ ஹனுமான் வட³வானல ஸ்தோத்ரம்
||
ஸ்ரீ க³ணேஸா²ய நம: ||
ஓம் அஸ்ய ஸ்ரீ ஹனுமான் வட³வானல ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
|| ஸ்ரீராமசந்த்³ர ரிஷி: || ஸ்ரீவட³வானல ஹனுமான் தே³வதா || மம ஸமஸ்த ரோக³ ப்ரஸ²மனார்த்த² ஆயுராரோக்³யைஸ்வர்யாபிவ்ருத்த³ர்த்த² ஸமஸ்த பாப க்ஷயார்த்த²ம் ஸீதாராமசந்த்³ர ப்ரீத்யர்த்த² ஹனுமான் வட³வானல ஸ்தோத்ர ஜப-மஹம்
கரிஷ்யே || 1 ||
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே ஸ்ரீ மஹாஹனுமந்தே
ப்ரகட பராக்ரம ஸகல தி³ங்மண்ட்³ல யஸோ²விதான, தவலீக்ருத
ஜக³த்ரிதய வஜ்ரதே³ஹ ருத்³ராவதார லங்காபுரீத³ஹன உமா அமல மந்த்ர
உத³தி-ப³ந்தன த³ஸ²ஸி²ர: க்ருதாந்தக ஸீதாக்ஷ்வஸன வாயுபுத்ர அஞ்ஜனீ க³ர்ப்பஸம்பூத ஸ்ரீராம லக்ஷ்மணானந்த³கர கபிஸைன்ய ப்ராகார
ஸுக்³ரீவஸாஹ்யா ரணபர்வதோத் பாடன குமார ப்³ரஹ்ம-சாரின் க³பீரநாத³ ஸர்வ-பாப-க்³ரஹ-வாரண ஸர்வ-ஜ்வரோச்சாடன,
டா³கினீ வித்வம்ஸன ||
2 ||
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே மஹாவீராய ஸர்வது³க்:க² நிவாரணாய
க்³ரஹமண்ட³ல ஸர்வபூதமண்ட³ல ஸர்வ பிசா²ச மண்ட³லோச்சாடன பூத-ஜ்வர-ஏகாஹிக-ஜ்வர-த்³வ்யாஹிக-ஜ்வர-த்ர்யாஹிக-ஜ்வர-சாதுர்தி²க ஜ்வர-ஸம்பாப ஜ்வர- விஷம-ஜ்வர-தாபஜ்வர-மாஹேக்ஷ்வர வைஷ்ணவ-ஜ்வரான் சி²ந்தி சி²ந்தி, யக்ஷ-ப்³ரஹ்ம-ராக்ஷஸ-பூத-ப்ரேத-பிசா²சான் உச்சாடய உச்சாடய
|| 3 ||
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே ஸ்ரீ மஹா ஹனுமதே
|| 4 ||
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்
ஹ்ரௌம் ஹ்ர: ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஹாம் ஓம் ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம்
ஹம் || 5 ||
ஓம் நமோ பக³வதே ஸ்ரீமஹாஹனுமதே
ஸ்²ரவண சக்ஷுபூதானாம் ஸா²கினீ-டா³கினீனா விஷம-து³ஷ்டாம்னா ஸர்வ விஷம்
ஹர ஹர || 6 ||
ஆகாஸ²புவனம் பேத³ய பேத³ய, சே²த³ய சே²த³ய, மாரய மாரய, ஸோ²ஷய ஸோ²ஷய மோஹய மோஹய ஜ்வாலய ஜ்வாலய ப்ரஹாரய ப்ரஹாரய ஸகலமாயாம் பேத³ய பேத³ய || 7 ||
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பக³வதே மஹாஹனுமதே ஸர்வ
க்³ரஹோச்சாடன பரப³ல க்ஷோபய க்ஷோபய
||
ஸகல ப³ந்தன மோக்ஷணம் குரு
குரு || ஸி²ர: ஸு²ல-கு³ல்ம-ஸு²ல, ஸர்வ ஸூ²லாந்- நிர்மூலய நிர்மூலய || 8
||
நாக³பாஸ² நந்த வாஸுகி தக்ஷ, கர்கோடக காலியான் யக்ஷகுல-ஜல-த³க³த-பி³ல-க³த ராத்ரிஞ்சர தி³வாசர ஸர்வாந் நிர்விஷம்
|| குரு குரு ஸ்வாஹா || 9 ||
ராஜபய சோரபய பரமந்த்ர பரய்ந்த்ர பரதந்த்ர பரவித்³யாஸ்² சே²த³ய சே²த³ய || 10 ||
ஸ்வமந்த்ர ஸ்வயந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வவித்³யா: ப்ரகடய ப்ரகடய || 11 ||
ஸர்வாரிஷ்டான் நாஸ²ய நாஸ²ய || 12 ||
ஸர்வ ஸ²த்ரூன் நாஸ²ய நாஸ²ய || 13
||
அஸாத்யம் ஸாதய ஸாதய
|| 14 ||
ஹும் பட் ஸ்வாஹா ||
|| இதி ஸ்ரீவிபீஷணக்ருதம் ஹனுமத்³ வட³வானல ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
||
வட்வானல் என்றால் சமுத்திரத்தின்
நடுவில் வசிக்கும் நெருப்பு. வடவாக்கினி என்று தமிழில் கூறுவதுண்டு. அதன் உணவு சமுத்திரத்தின்
தண்ணீர்.
ஓம் என்னும் பிரணவத்துடன் கூடிய அனுமான் மந்திர வட்வானல் ஸ்தோத்ரத்தின்
ரிஷி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, தேவதை - ஸ்ரீ வட்வானல் ஹனுமான், சர்வ ரோக நிவாரணம்,
தீர்க்க ஆயுள், ஐஸ்வர்யம், ஆரோக்யம், சகல வித
பாப நிவர்த்தி அனைத்தையும் அருளும், சீதா ராமச்சந்திர மூர்த்திக்கு பிரியமான அனுமான்
வட்வானல ஸ்தோத்ரத்தை ஜபிக்கிறேன்..
ஓம் ஹ்ராம் ஹ்ரீம், ஓம் நமோ பகவதே என்னும் மந்திர உச்சாடனத்தால் மஹா பராக்கிரமசாலியான, புகழ் அனைத்து திக்குகளிலும் பரவியுள்ள, இவ்வுலகத்தின் ஹ்ருதயமாக விளங்கும் அனுமானை வணங்குகிறேன்.
வஜ்ர தேகம் பொருந்தியவர், ருத்ரனாகிய சிவபெருமானின் அம்சாவதாரம், இலங்கையைத் தகனம் செய்தவர், உமா மகேஷ்வர
மந்திரக் கடலின் திறவுகோலாகத் திகழ்பவர், பத்து தலை இராவணனை அழித்தவர், சீதையின் ப்ராணனை
ரட்சித்து நம்பிக்கை ஸ்வாசத்தை அளித்தவர், வாயுவின் புத்ரர், மாதா அஞ்சனையின் மைந்தன்,
ராம லக்க்ஷமணர்களுக்கு மகிழ்ச்சியை கொணர்ந்தவர், வானர சேனைக்குத் தலைவராக வழி நடத்திச்
செல்பவர், சுக்ரீவனுக்கு சகாயம் செய்தவர், ரத்னங்களால் ஆன பர்வதத்திலிருந்து தோன்றியவர்.அத்தகைய
சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.
குமார பிரம்மச்சாரி (இள பிரம்மச்சாரி), கம்பீர நாத த்வனியை ஒத்த குரலுடையவர், சர்வ பாபங்கள்
மற்றும் க்ரஹ பீடைகளிலிருந்து நிவர்த்தி அருளுபவர், அனைத்து ஜ்வர பீடைகளிலிருந்து நிவாரணம்
தருபவர், சகல வித டாகினி துன்பங்களை அழிப்பவர், அத்தகைய சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை
வணங்குகிறேன்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் என்னும் மந்திர உச்சானடத்தால் ஹனுமானை வணங்குகிறேன்.
வீர தீர பராக்கிரமர், துன்பத்தால் ஏற்படும் வருத்தத்தை நீக்குபவர், நவக்ரஹங்கள், பூத, ப்ரேத தோஷங்களால் விளையும் சங்கடங்களை
நீக்குபவர், பூத ப்ரேத பயத்தால் விளையும் ஜ்வர
தோஷம், கவலை, வருத்தம், சங்கடங்கள், மஹாவிஷ்ணு மற்றும் பரமேஸ்வரரின் கோபத்தால் ஏற்படும்
ஜ்வரங்களிலிருந்து நிவர்த்தி அழிப்பவர் , யக்ஷர்கள், ப்ரஹ்ம ராட்சஸர்கள், பூத, ப்ரேத,
பைசாசம் ஆகியவைகளை அழிப்பவர். அத்தகைய மந்த்ர சக்தி வாய்ந்த வட்வானல அனுமானை வணங்குகிறேன்.
ஓம் ஹ்ராம் ஸ்ரீம் ஓம் என்னும் மந்தர உச்சாடனத்தால் மஹா பலசாலியான ஹனுமானை
வணங்குகிறேன். ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரோம், ஹ்ரா, ஆம் ஹாம் ஹாம் ஹாம்
ஹாம் ஓம் ஸௌம் ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் என்பது வட்வானல ஹனுமானின் பீஜ
மந்த்ரம்.
பூத பிசாசுகளின் கண்களையும், காதுகளையும் அழிப்பீர்!!!, சாகினி, டாகினி,
தீய மனிதர்கள், அனைத்து விஷங்களையும் அழிப்பீர்!!.
ஆகாயம், பூமி இவற்றை உடைப்பீர்!.
சகல மாயங்களையும் வெட்டுவீர், பலமிழக்க செய்வீர், மோஹிக்கச்செய்து எரித்து
அழிப்பீர்!.
ஓம் ஹ்ராம், ஹ்ரீம் ஓம் என்னும் மந்த்ர உச்சாடனத்தால் தங்களை வணங்குகிறேன்.
நவக்கிரகங்களால் விளையும் அனைத்து கேடுகளையும் எதிர்த்து அழித்து என்னை காப்பீர்!!!.
சகல பந்த பாசங்களிலிருந்தும் எனக்கு முக்தி அளிப்பீர்!.
முடக்குவாதம், கணுக்காலில் ஏற்படும் வீக்கம், ஆகியவற்றிலிருந்து பூரண நிவாரணத்தை அளிப்பீர்!.
கொடிய விஷ சர்ப்பங்களான அனந்தன், வாசுகி, தக்க்ஷன், கார்கோடகன், காளிங்கன்,
யக்ஷர், நீரில் வாழும் மிருகங்கள், குகையில்
வாழும் மிருகங்கள், இரவில் மட்டும் நடமாடும்
மிருகங்கள், பகலில் மட்டும் நடமாடும் மிருகங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விஷ பந்தங்களை
(தளைகள்), ஆபத்துக்களை முறியடித்து பெரும் துன்பத்திலிருந்து காப்பீர்!!!.
ராஜ பயம், திருடர் பயம், தீய மந்த்ர, யந்தர, தந்த்ர ப்ரயோகங்களை அழித்து
என்னை காப்பீர்!.
தங்களின் பரிபூரண மந்த்ர, யந்தர, தந்த்ர ஞானத்தை எனக்கு வெளிப்படுத்தி
அருள்வீர்!.
சகல அரிஷ்டங்களையும்(குறைகளையும்) நாசம் செய்வீர்!.
அனைத்து எதிர்ப்புகளையும் அழித்து காப்பீர்!.
முடியாததை முடித்து காட்டுவீர்!.
ஹூம் ஃபட் ஸ்வாஹா
விபீஷணரால் இயற்றப்பட்ட ஹனுமான் வட்வானல ஸ்தோத்ரம் முற்றிற்று.
No comments:
Post a Comment