Sunday, October 13, 2013

Vijayadasami - 5th Birthday - விஜயதசமி திருநாள் - வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டு துவக்கம்



வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இத்திருநாளின் நாயகி துர்க்கா தேவியின் அருளால் அனைவரின் இல்லத்திலும் எல்லாவிதமான வளங்களும் பெருகட்டும்.

க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 

நான்கு ஆண்டுகள் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. 9000 விசிட்டர்களின் எண்ணிக்கையுடன், 145 பதிவுகளுடனும் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்த வலைப்பூ ஒரு வருடத்தில் 75 பதிவுகளை சேர்த்து மொத்த பதிவு எண்ணிக்கையை 220 ஆக உயர்த்தி உள்ளது. 

விசிட்டர்கள் எண்ணிக்கையும் 9000 லிருந்து 16900 ஆகி உள்ளது. பதிவுகளின் பார்வை இட்டோரின் எண்ணிக்கை 39860 ஆக உயர்ந்து உள்ளது. 

இந்த வளர்ச்சிக்கு வாசகர்களின் ஆதரவு மட்டுமே காரணம். வாசகர்களின் ஆதரவுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த நம்பிக்கையும், ஆதரவும் தொடரவும் வேண்டிக் கொள்கிறது.

கடந்த ஆண்டினை போல் அடி எடுத்து வைத்துள்ள ஐந்தாம் ஆண்டிலும் க்ஷேத்ரயாத்ரா வலைப்பூவின் பணி சிறப்பாக இருக்கும் என்று உறுதியுடன் நம்பலாம். கடைசியாக, எனக்கு உற்சாகமாக ஆலோசனை அளித்தும், தன்னுடைய பொன்னான நேரத்தை பதிவுகள் பிழைகள் இல்லாமல இருக்க பிழை திருத்தம் செய்து அளித்தல், என்று என்னுடைய பயணத்தில் உறுதுணையாக இருந்த  பேரன்புக்கு உரிய சகோதரி திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ச‌கோதரியின் அற்புதமான வலைப்பூவினை காண இங்கு சொடுக்கவும். 

நன்றியுடனும், நம்பிக்கையுடனும் ஐந்தாம் ஆண்டில் காலடி வைக்கும் 

உங்கள் அன்புள்ள 
க்ஷேத்ரயாத்ரா

1 comment:

பார்வதி இராமச்சந்திரன். said...

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் க்ஷேத்ரயாத்ரா வலைப்பூவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பல அரிய பெரிய சாதனைகள் படைக்கும் வெற்றி நிறைந்த வருடமாக இவ்வருடம் திகழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். போற்றத் தகுந்த இவ்வரிய சேவையில், என்னால் ஆன சிறு பங்கை செய்ய எனக்கு வாய்ப்பளித்த அன்புச் சகோதரர் திரு.க்ஷேத்ரயாத்ராவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!.

Post a Comment