Monday, October 21, 2013

Sri Vinayaka Stuti - Varaha Puranam - ஸ்ரீ வினாயக ஸ்துதி​: - வராஹ புராணம்


வராஹ புராணத்தில் விநாயக பெருமானின் அவதாரம் பற்றிய ஒரு வித்தியாசமான கதை காணப்படுகிறது. புனித மஹான்கள், ரிஷி முனிவர்கள், தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதன் பலனை அடையும் முயற்சியில்,எண்ணில்லா தடைகளை சந்தித்தனர். ஆனால் நேர்மையை கடைப்பிடிக்காதவர் எவ்வித தடைகளையும் இல்லாமல் முயற்சியில் முன்னேறினர். அதைக் கண்ட அனைவரும் பிரம்மதேவரிடம் சென்று இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்க வேண்டினர். பிரம்மதேவர் அனைவருடன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானிடம் இதற்கு ஒரு நல்வழி காட்டி அருளுமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரபு ருத்ரரும் புன்சிரிக்கும் தன் உதடுகளை திறந்து வாய்விட்டு சிரித்துக்கொண்டே, தன்னைப் போன்ற தன் பிரதிபிம்பத்தை ஆகாயத்தில் உருவாக்கினர். ஆகாயத்தில் தோன்றிய பிரதிபிம்ப சிவபெருமானின் உடம்பிலிருந்து விழுந்த வியர்வை நீரிலிருந்து ஏராளமான விநாயகர்கள் தோன்றினர். அதைக் கண்ட பிரம்ம தேவர், பிரபு ருத்ரரிடம், அவர் வாயிலிருந்து தோன்றிய விநாயகப் பெருமானை, கணபதி என்னும் பெயரால் ஆகாய தத்துவ சொரூபமாக விளங்க ஆசீர்வதிக்குபடி சிவபெருமானை வேண்டினார். அதற்கு இணங்கி, சிவபெருமானும் விநாயகரை ஆசீர்வதித்து, அவ்வேளை முதல் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் கணபதியை முதலில் வழிபடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார். கீழே உள்ள விநாயக ஸ்துதி சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டு தேவர்களால் கணபதியின் அருளை வேண்டி துதிக்கப்பட்டது.

॥ श्रीविनायक स्त्तुतिः - श्रीवराह पुराणम् ॥
देवा ऊचुः -
नमस्ते गज-वक्त्राय नमस्ते गण-नायक ।
विनायक नमस्तेऽस्तु नमस्ते चण्ड-विक्रम ॥१॥
नमोऽस्तु ते विघ्न-कर्त्रे नमस्ते सर्प - मेखल ।
नमस्ते रुद्र - वक्त्रोत्थ प्रलम्ब-जठराश्रित ॥२॥
सर्व देवेन नमस्काराद् अविघ्नं कुरु सर्वदा ॥३॥
॥ फलश्रुतिः ॥
एवं स्तुतस् तदा देवैर् महात्मा गण-नायकः ।
अभिषिक्तस् तु रुद्रेण सोमायाऽपत्यताङ्गतः ॥४॥
एतच् चतुर्थ्यां संपन्नं गणाध्यक्षस्य पार्थिवः ।
यतस् ततोऽयं महतिं तिथिनां परमा तिथिः ॥५॥
एतस्यां यस् तिलान् भुक्त्वा भक्त्या गणपतिन् नृप ।
आराधयति तस्याशु तुष्यते नाऽत्र संशयः ॥६॥
यश् चैतत् पठते स्तोत्रं यश् चैतच् छृणुयात् सदा ।
न तस्य विघ्ना जायन्ते न पापं सर्वथा नृप ॥७॥
॥ इति श्रीवाराह महापुराणे विनायकोत्पत्तिर् नाम त्रयोविंशोऽध्याये श्रीविनायक स्तुतिः सम्पूर्णम् ॥


||  ஸ்ரீ வினாயக ஸ்துதி: - ஸ்ரீ வராஹ புராணம் || 
தே³வா ஊசு: -
நமஸ்தே க³ஜ-வக்த்ராய நமஸ்தே க³ண-நாயக |
வினாயக நமஸ்தே(அ)ஸ்து நமஸ்தே சண்ட³-விக்ரம || 1||
நமோ(அ)ஸ்து தே விக்ன-கர்த்ரே நமஸ்தே ஸர்ப - மேக²ல |
நமஸ்தே ருத்³ர - வக்த்ரோத்த² ப்ரலம்ப³-ஜட²ராஸ்²ரித || 2||
ஸர்வ தே³வேன நமஸ்காராத்³ அவிக்னம்ʼ குரு ஸர்வதா³ || 3||
||  ²லஸ்²ருதி: ||
ஏவம்ʼ ஸ்துதஸ் ததா³ தே³வைர் மஹாத்மா க³ண-நாயக: |
அபிஷிக்தஸ் து ருத்³ரேண ஸோமாயா(அ)பத்யதாங்க³: || 4||
ஏதச் சதுர்த்²யாம்ʼ ஸம்பன்னம்ʼ³ணாத்யக்ஷஸ்ய பார்தி²: |
யதஸ் ததோ(அ)யம்ʼ மஹதிம்ʼ திதீ²னாம்ʼ பரமா திதி²: || 5||
ஏதஸ்யாம்ʼ யஸ் திலான் புக்த்வா பக்த்யா க³ணபதின் ந்ருʼப |
ஆராதயதி தஸ்யாஸு² துஷ்யதே நா(அ)த்ர ஸம்ʼ²: || 6||
யஸ்² சைதத் பட²தே ஸ்தோத்ரம்ʼ யஸ்² சைதச் ச்²ருʼணுயாத் ஸதா³|
ந தஸ்ய விக்னா ஜாயந்தே ந பாபம்ʼ ஸர்வதா² ந்ருʼப || 7||
|| இதி ஸ்ரீவாராஹ மஹாபுராணே வினாயகோத்பத்திர் நாம த்ரயோவிம்ʼஸோ²(அ)த்யாயே ஸ்ரீவினாயக ஸ்துதி: ஸம்பூர்ணம் ||

No comments:

Post a Comment