Monday, June 24, 2013

Arthanarishwara Stotram - அர்த்த⁴நாரீஸ்²வர ஸ்தோத்ரம்



கேட்ட வரமருளும் அர்த்தநாரீஸ்வர ஸ்தோத்ரம்
ஆடல், பாடல், காதல், உருகுதல், என்று பக்தியின் வெளிப்பாடு வெவ்வேறு வகைப்படும். அவற்றில் மனத்தில் இறைவனை உருவகம் செய்து பிரார்த்திப்பது ஒரு வகை. இரு உயிர் ஒரு உடல் என்ற தத்துவப்படி உருவான திரு உரு தான் அர்த்தநாரீஸ்வரர்.  உமையவள் ஒரு பாகம், உமையவன் ஒரு பாகம். அன்னையும், சிவனும் உலகின் இரு எதிர் துருவங்கள். எதிர் துருவங்களின் சங்கமம் உலகம் இயங்குவதற்கு அடிப்படை என்ற தத்துவத்தை உணர்த்துவதே அர்த்தநாரீஸ்வர கோலம். 

ஆதிசங்கராச்சாரியரால் அருளப்பட்ட இந்த அற்புதமான ஸ்தோத்ர பாராயணம் கேட்ட வரத்தை, வேண்டிய அனைத்தையும் அருளும் சக்தி பெற்றது.திருமணமான ஒவ்வொரு தம்பதியும் இந்த அஷ்டகத்தைப் பொருளறிந்து பாடி வந்தால் அவர்களுக்கு மனமொருமித்த வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர் படித்தாலும் அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் துதி இது என்பதை மறக்க வேண்டாம். 

॥ अर्धनारीश्वरस्तोत्रम्॥
चाम्पेयगौरार्धशरीरकायै कर्पूरगौरार्धशरीरकाय ।
धम्मिल्लकायै च जटाधराय नमः शिवायै च नमः शिवाय ॥ १॥
कस्तूरिकाकुङ्कुमचर्चितायै चितारजःपुञ्जविचर्चिताय ।
कृतस्मरायै विकृतस्मराय नमः शिवायै च नमः शिवाय ॥ २॥
झणत्क्वणत्कङ्कणनूपुरायै पादाब्जराजत्फणिनूपुराय ।
हेमाङ्गदायै भुजगाङ्गदाय नमः शिवायै च नमः शिवाय ॥ ३॥
विशालनीलोत्पललोचनायै विकासिपङ्केरुहलोचनाय ।
समेक्षणायै विषमेक्षणाय नमः शिवायै च नमः शिवाय ॥ ४॥
मन्दारमालाकलितालकायै कपालमालाङ्कितकन्धराय ।
दिव्याम्बरायै च दिगम्बराय नमः शिवायै च नमः शिवाय ॥ ५॥
अम्भोधरश्यामलकुन्तलायै तडित्प्रभाताम्रजटाधराय ।
निरीश्वरायै निखिलेश्वराय नमः शिवायै च नमः शिवाय ॥ ६॥
प्रपञ्चसृष्ट्युन्मुखलास्यकायै समस्तसंहारकताण्डवाय ।
जगज्जनन्यै जगदेकपित्रे नमः शिवायै च नमः शिवाय ॥ ७॥
प्रदीप्तरत्नोज्ज्वलकुण्डलायै स्फुरन्महापन्नगभूषणाय ।
शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय ॥ ८॥
एतत्पठेदष्ठकमिष्टदं यो भक्त्या स मान्यो भुवि दीर्घजीवी ।
प्राप्नोति सौभाग्यमनन्तकालं भूयात्सदा तस्य समस्तसिद्धिः ॥ ९॥
॥ इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छंकरभगवतः कृतौ अर्धनारीश्वरस्तोत्रम् संपूर्णम् ॥
 
||  அர்த்தநாரீஸ்²வர ஸ்தோத்ரம் || 

சாம்பேயகௌ³ரார்த்த⁴ஸ²ரீரகாயை கர்ப்பூரகௌ³ரார்த்த⁴ஸ²ரீரகாய |
த⁴ம்மில்லகாயை ச ஜடாத⁴ராய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய ||1|| 
 
செண்பகப்பூவை ஒத்த ஜொலிக்கும் பொன் நிறத்தில் அன்னை ஒரு பாகத்தில், கற்பூர வெள்ளை நிறத்தில் மின்னும் ஐயன் மற்றொரு பாகத்தில். 
 
மணப்பெண்ணின் கூந்தல் எப்படி அலங்கரிக்கப்படுகிறதோ, அப்படி அலங்கரிக்கப்பட்ட கூந்தலுடன் அன்னை ஒரு பாகத்தில், சித்தம் போக்கு சிவம் போக்கு என்ற வாக்குப்படி அலங்காரமான அன்னைக்கு நேர் எதிராக விரிந்து படர்ந்திருக்கும் நீள் ஜடாமுடியுடன் அப்பன் மற்றொரு பாகத்தில், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன். 

 கஸ்தூரிகாகுங்குமசர்சிதாயை சிதாரஜ​:புஞ்ஜவிசர்சிதாய |
க்ருʼதஸ்மராயை விக்ருʼதஸ்மராய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 2||

மணக்கும் கஸ்தூரி மஞ்சள் நறுமணம் உடலெங்கும் வீச அன்னை இடது பாகத்திலும், மயான சிதையின் சாம்பல் உடலெங்கும் அணிந்த சிவனார் மற்றோரு பாகத்திலும், நன்கு அலங்கரிக்கப்பட்டு மனதுக்கு சாந்தி, அமைதியை தரும் அன்னையின் வடிவம் ஒரு பாகத்திலும்,  நல்ல சர்ப்பம் கழுத்தில் அணிகலனாக, யானையின் தோலை ஆடையாக அணிந்து, உடலெங்கும் மயான சிதையின் சாம்பலை பூசிக்கொண்டு காண்பவர்களை மிரள வைக்கும் அப்பனின் தோற்றம் மற்றொரு பாகத்திலும், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன். 
 
  ²ணத்க்வணத்கங்கணநூபுராயை பாதா³ப்³ஜராஜத்ப²ணிநூபுராய |
ஹேமாங்க³தா³யை பு⁴ஜகா³ங்க³தா³ய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 3||
 
கைகளில் அசைவுகளுக்கு ஏற்ப நடனமாடும் அழகிய கங்கணம், அசைவுகளுக்கு ஏற்ப இசை ஒலி எழுப்பும் கொலுசு கால்களிலும் அணிந்த அன்னையின் தோற்றம் இடபாகத்தில்,  கடும் விஷத்தை கக்கும் ராஜநாகம் கழுத்திலும், கால்களிலும் அணி செய்ய தோற்றமளிக்கும் சிவனார் வலது பாகத்திலும், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன்.
 
(இடது பக்கத்தில் தங்க அணிகலன், வலப்பக்கத்தில் சீறும் சர்ப்பங்கள், .நமது உணர்ச்சிகள், எண்ணங்களின் உருவகம் தான் சீறும் சர்ப்பங்கள், உணர்வுகள் மற்றும் எண்ணங்கள், எண்ணங்களினால் விளையும் செயல்கள், செயல்களின் கர்மவினைகளால் இயங்கும் ஜனன மரண இயக்கம்., அத்தகைய இடையறாத சங்கிலி இயக்கத்தை தனது தவத்தின் வலிமையால் வெற்றிக்கொண்டு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யோகீஸ்வரர் சிவபெருமான்)

 விஸா²லநீலோத்பலலோசனாயை விகாஸிபங்கேருஹலோசனாய |
ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 4||

அழகிய நீலோத்பல மலரை ஒத்த விசாலமான திருவிழிகள்,  அந்த விழிகளிலிருந்து பொழியும் திருஅருள் தாரை, வணங்கும் பக்தர்களின் வாழ்க்கையை வளமாக்கும் அன்னையின் திரு உரு தோற்றம் இடபாகத்தில், தாமரை மலரை போன்ற ஒளி நிறைந்த, பார்வையை தன்னிடமே நிறுத்தக்கூடிய விசேஷமான மூன்று விழிகளை உடைய‌ சிவபெருமான் வலபாகத்தில், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன்.

 மந்தா³ரமாலாகலிதாலகாயை கபாலமாலாங்கிதகந்த⁴ராய |
தி³வ்யாம்ப³ராயை ச தி³க³ம்ப³ராய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 5|| 
 
சிவந்த நிற  மந்தார மலர்களால் ஆன மாலை கழுத்தை அலங்கரிக்க, திவ்யமான பட்டாடை உடுத்தி திவ்யமான தோற்றத்துடன் அன்னை ஒரு பாகத்தில், மண்டையோடுகளாலான மாலையை கழுத்தில் அணிந்து, திசைகளையே ஆடையாக அணிந்து திகம்பராக காட்சி தரும் சிவ பெருமான் மற்றொரு பாகத்தில், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன்.
 
 அம்போ⁴த⁴ரஸ்²யாமலகுந்தலாயை தடி³த்ப்ரபா⁴தாம்ரஜடாத⁴ராய |
நிரீஸ்²வராயை நிகி²லேஸ்²வராய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 6|| 
 
சூல் கொண்ட மேகத்தைப் போன்று மின்னும் கரு நிற கூந்தலுடன், தனக்கு மேலானவர் யாருமில்லாதவளான‌ அன்னையின் தோற்றம் ஒரு பாகம், கட்டுப்பாடு அற்ற, எண்ணெய் அலங்காரம் காணாத, தாமிர செந்நிறத்தில் ஒளிர்கிற ஜடாமுடியுடன், அனைத்து உயிரினங்களும் தன்னுள் அடக்கம் என்ற சர்வேஸ்வர தோற்றத்துடன் கூடிய சிவபெருமான் மற்றொரு பாகம். இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன்.

 ப்ரபஞ்சஸ்ருʼஷ்ட்யுன்முக²லாஸ்யகாயை ஸமஸ்தஸம்ʼஹாரகதாண்ட³வாய |
ஜக³ஜ்ஜனன்யை ஜக³தே³கபித்ரே நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 7|| 
 
மனதைக் கவரும் அழகுடன் ஆனந்தலயத்தில் அன்னை ஆடும் நடனத்திலிருந்து இவ்வுலகத்தின் சிருஷ்டி ஆரம்பம் ஆகிறது.  ஜகத்தினை ஸிருஷ்டித்து, அதன் அனைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கும் அன்னை ஒரு பக்கம். முடிவில் சம்ஹாரத்தில் சிவபெருமானின் உக்ர தாண்டவம். சிருஷ்டியின் அனைத்து உயிரினங்களையும் அடக்கும் உத்வேகத்துடன் தந்தையாக சிவபெருமான் மற்றொரு பக்கம், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன்.

 ப்ரதீ³ப்தரத்னோஜ்ஜ்வலகுண்ட³லாயை ஸ்பு²ரன்மஹாபன்னக³பூ⁴ஷணாய |
ஸி²வான்விதாயை ச ஸி²வான்விதாய நம​: ஸி²வாயை ச நம​: ஸி²வாய || 8|| 
 
கோடி சூரிய பிரகாசம் தரும் ரத்னக்கற்கள் பதிந்துள்ள தாடங்கங்க‌ளை திருச்செவிகளில் அணிந்துள்ள அகிலத்தை ஆளும் ஈசுவரி ஒரு பக்கம், கடும் விஷத்தை மூச்சாக கொண்ட சர்ப்பங்களை தாடங்கங்க‌ளாக அணிந்த சிவபெருமான் மற்றொரு பக்கம்,  சிவான் விதை...அதாவது சிவனுடன் கூடியிருப்பவள். சிவான் விதா...அதாவது சிவையுடன் கூடியிருப்பவன். ஆதியும் அந்தமும் இல்லா பரப்பிரஹ்மமே அம்மையும் அப்பனும், இப்படி எதிர் எதிர் துருவமாக உருவான அர்த்தநாரீஸ்வர சிவ பார்வதி தம்பதியரை நான் வணங்குகிறேன். 

ஏதத் படே²த³ஷ்ட²கமிஷ்டத³ம்ʼ யோ ப⁴க்த்யா ஸ மான்யோ பு⁴வி தீ³ர்க்க⁴ஜீவீ |
ப்ராப்னோதி ஸௌபா⁴க்³யமனந்தகாலம்ʼ பூ⁴யாத்ஸதா³ தஸ்ய ஸமஸ்தஸித்³தி⁴​: || 9|| 
 
அர்த்தநாரீசுவர அஷ்டகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு, புகழ், நீண்ட ஆயுள், எடுத்த காரியம் யாவினும் வெற்றி (ஸமஸ்த சித்தி), என்றென்றும் சௌபாக்கியம் என்று அனைத்து நலன்களும்  கிட்டும்.

|| இதி ஸ்ரீமத் பரமஹம்ʼஸ பரிவ்ராஜகாசார்யஸ்ய  ஸ்ரீ கோ³விந்த³ ப⁴க³வத் பூஜ்யபாத³ஸி²ஷ்யஸ்ய ஸ்ரீமச் ச²ங்கர ப⁴க³வத​: க்ருʼதௌ அர்த்த⁴னாரீஸ்²வரஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

No comments:

Post a Comment