Wednesday, April 24, 2013

Sri Tulasi Ashtottara Satha Nama Stotra - ஸ்ரீ துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்



श्री तुळस्यष्टोत्तर चतनाम स्तोत्रम्
यऩ्मूले सर्व तीर्थ्‍तानि यऩ् मध्ये सर्व देवता ।
यतग्रे सर्व वेदाच्च तुळचीम् ताम् नमाम्यहम् ॥१॥
या द्रुष्टा निखिलाघ सङ्घचमऩी  स्प्रुष्टा वपु: पावऩी ।
रोगाणा मभिवन्दिता निरसिऩी सिक्तान्तक त्रासिऩी ॥२॥
प्रत्या सक्ति विधायिऩी  भगवत:  क्रुष्णस्य सम्रोपिता ।
याचार्च्चा करणात् विमुक्ति फलदा तस्यै तुळस्यै नम: ॥३॥
तुळसीपावऩि पूज्या विरुन्दावऩ निवासिऩी ।
ज्ञाऩदात्रि ज्ञाऩमयी निर्मला सर्वपूजिता ॥४॥
सती पतिव्रता ब्रुन्दा क्षीराप्धि मथऩोद्भवा ।
कृष्ण वर्णा रोगहन्त्री त्रिवर्णा सर्वकामदा ॥५॥
लक्ष्मीसखी नित्यचुद्धा सुदन्ती भूमिपावऩी ।
हरिध्याऩैक निरता हरिपाद क्रुतालया ॥६॥
पवित्र रूपिणी  धऩ्या चुगन्धिन् यम्रुतोद्भवा ।
चुरूपा  रोग्यदा  तुष्टा चक्ति त्रितय रूपिणी ॥७॥
देवी  देवर्षि सम्स्तुत्या  कान्ता विष्णुमऩ: प्रिया ।
भूत वेताळ भीतिघ्नी  महा पातक नाचिऩी ॥८॥
मऩोरथप्रदा  मेधा कान्तिर् विजयदायिऩी ।
चङ्क चक्र गदा पद्म धारिणी  कामरूपिणी ॥९॥
अपवर्गप्रदा च्यामा क्रुचमद्या सुकेचिऩी ।
वैकुण्टवासिऩी  नन्दा  बिम्बोष्ठी  कोकिलस्वरा ॥१०॥
कपिला  निम्ऩगा जऩ्म  भूमि रायुष्य दायिऩी ।
वऩरूपा दुक्ख नाचिऩ्यविकारा चतुर्भुजा ॥११॥
गरुत्मद्वाहऩा  चान्ता  दान्ता  विघ्ननिवारिणी ।
श्रीविष्णु  मूलिका  पुष्टि: त्रिवर्ग फलदायिऩी ॥१२॥
महा चक्तिर्  महामाया लक्ष्मी वाणी  सुपूजिता ।
सुमङ्गल्यर्च्चऩ प्रीता  सौमङ्गल्य विवर्ध्तिऩी ॥१३॥
चातुर्मास्योध सवराध्या  विष्णु सान्निध्यदायिऩी ।
उत्थाऩ द्वादची पूज्या सर्वदेव  प्रपूजिता ॥१४॥
गोपीरतिप्रदा  नित्या  निर्गुणा  पार्वतीप्रिया ।
अपमृत्युहरा  राधाप्रिया  मृगविलोचऩा ॥१५॥
 अम्लाऩा हम्सगमऩा कमलासऩवन्दिता ।
भूलोकवासिऩी  चुद्धा रामकृष्णादि पूजिता ॥१६॥
 सीता पूज्या राम मऩप्रिया नन्दऩ सम्स्थिता ।
सर्व तीर्त्थमयी मुक्ता लोक स्रुष्टिविधायिऩी ॥१७॥
प्रातर् दृच्या ग्लाऩिहन्त्री  वैष्णवी  सर्वसिद्धिदा ।
नारायणी  सन्ततिदा  मूलमृद्धारि  पवाऩी ॥१८॥
अचोक वऩिका  सम्स्था  सीताध्याता निराच्रया ।
गोमती सरयूतीर  रोपिता  कुटिलालका ॥१९॥
अपात्रभक्ष्य  पापघ्नी दान तोय विचुद्धिदा ।
चृति धारण  सुप्रीता चुभा सर्वेष्टदायिऩी ॥२०॥
॥ इति तुळस्यष्टोत्तर चतनाम स्तोत्रम् सम्पूर्णम् ॥

ஸ்ரீ துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

யன்மூலே ஸர்வ தீர்த்²தானி யன் மத்⁴யே ஸர்வ தே³வதா |  
யத க்³ ரே ஸர்வ வேதா³ச்ச துளசீம் தாம் நமாம்யஹம் ||

யா த்³ருஷ்டா நிகி²லாக⁴ ஸங்க⁴சமனீ  ஸ்ப்ருஷ்டா வபு: பாவனீ |  
ரோகா³னா மபி⁴வந்தி³தா நிரஸினீ ஸிக்தாந்தக த்ராஸினீ ||  

ப்ரத்யா ஸக்தி விதா⁴யினீ  ப⁴க³வத:  க்ருஷ்ணஸ்ய ஸம்ரோபிதா |  
யாசார்ச்சா கரணாத் விமுக்தி ப²லதா³  தஸ்யை துளஸ்யை நம:  ||

துளஸீபாவனி பூஜ்யா விருந்தா³வன நிவாஸினீ  |  
ஞானதா³த்ரி ஞானமயீ நிர்மலா ஸர்வபூஜிதா ||

ஸதீ பதிவ்ரதா ப்³ருந்தா³ க்ஷீராப்தி⁴ மத²னோத்³ப⁴வா | 
க்ருʼஷ்ண வர்ணா ரோக³ஹந்த்ரீ த்ரிவர்ணா ஸர்வகாமதா³ ||

லக்ஷ்மீஸகீ² நித்யசுத்³தா⁴ ஸுத³ந்தீ பூ⁴மிபாவனீ | 
ஹரித்⁴யானைக நிரதா ஹரிபாத³ க்ருதாலயா ||

பவித்ர ரூபிணீ  த⁴ன்யா சுக³ந்தி⁴ன் யம்ருதோத்³ப⁴வா | 
சுரூபா  ரோக்³யதா³  துஷ்டா சக்தி த்ரிதய ரூபிணீ ||

தே³வீ  தே³வர்ஷி ஸம்ஸ்துத்யா காந்தா விஷ்ணுமன: ப்ரியா | 
பூ⁴த வேதாள பீ⁴திக்⁴னீ  மஹா பாதக நாசினீ  ||

மனோரத²ப்ரதா³  மேதா⁴ காந்திர் விஜயதா³யினீ | 
சங்க சக்ர க³தா³ பத்³ம தா⁴ரிணீ  காமரூபிணீ ||

அபவர்க³ப்ரதா³ ச்யாமா க்ருசமத்³யா ஸுகேசினீ | 
வைகுண்டவாஸினீ  நந்தா³  பி³ம்போ³ஷ்டீ²  கோகிலஸ்வரா ||

கபிலா  நிம்னகா³ ஜன்ம  பூ⁴மி ராயுஷ்ய தா³யினீ | 
வனரூபா து³க்க² நாசின்யவிகாரா சதுர்பு⁴ஜா ||

க³ருத்மத்³வாஹனா  சாந்தா  தா³ந்தா  விக்⁴னநிவாரிணீ |
ஸ்ரீவிஷ்ணு  மூலிகா  புஷ்டி: த்ரிவர்க³ ப²லதா³யினீ  ||

மஹா சக்திர்  மஹாமாயா லக்ஷ்மீ வாணீ  ஸுபூஜிதா |
ஸுமங்க³ல்யர்ச்சன ப்ரீதா  ஸௌமங்க³ல்ய விவர்த்⁴தினீ  ||

சாதுர்மாஸ்யோத் ஸவாராத்⁴யா  விஷ்ணு ஸாந்நித்⁴யதா³யினீ |
உத்தா²ன த்³வாத³சீ பூஜ்யா ஸர்வதே³வ  ப்ரபூஜிதா  ||

கோ³பீரதிப்ரதா³  நித்யா  நிர்கு³ணா  பார்வதீப்ரியா |
அபம்ருʼத்யுஹரா  ராதா⁴ப்ரியா  ம்ருʼக³விலோசனா ||

அம்லானா ஹம்ஸக³மநா கமலாஸனவந்தி³தா |
பூ⁴லோகவாஸினீ  சுத்³தா⁴ ராமக்ருʼஷ்ணாதி³ பூஜிதா ||

ஸீதா பூஜ்யா ராம மனப்ரியா நந்த³ன ஸம்ஸ்தி²தா |
ஸர்வ தீர்த்த²மயீ முக்தா லோக ஸ்ருஷ்டிவிதா⁴யினீ  ||

ப்ராதர் த்³ருʼச்யா க்³லானிஹந்த்ரீ  வைஷ்ணவீ  ஸர்வஸித்³தி⁴தா³ | 
நாராயணீ  ஸந்ததிதா³  மூலம்ருʼத்³தா⁴ரி  பவானீ || 

அசோக வனிகா  ஸம்ஸ்தா²  ஸீதாத்⁴யாதா நிராச்ரயா |  
கோ³மதீ ஸரயூதீர  ரோபிதா  குடிலாலகா || 

அபாத்ரப⁴க்ஷ்ய  பாபக்⁴னீ தா³ன தோய விசுத்³தி⁴தா³ | 
ச்ருʼதி தா⁴ரண ஸுப்ரீதா சுபா⁴ ஸர்வேஷ்டதா³யினீ || 

இதி துளஸ்யஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

1. தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.

2. தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது  மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள்(எம பயத்தைப் போக்குபவள்). தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை(பூஜிப்பவர்களை), ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.

3. ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.

4. ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், (கறுப்பு, பச்சை, வெள்ளை) ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.

5. ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். (பறித்துப் பல நாட்கள் இருந்தாலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்திருந்தாலும் மற்ற புஷ்பம் போல் நிர்மால்யம் என்ற தோஷமில்லாதவள்), அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

6. ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள்,  நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள், மூன்று சக்திகளின் (துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி) திருவடிவானவள்.

7. ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.

8. விருப்பங்களை நிறைவேற்றுபவள், ஸ்ரீ துளசி தேவி. மேதா (மேதைத் தன்மை, நுண்ணறிவு) வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள்,  தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.

9. மோட்சத்தைத் தருபவள், ஸ்யாம (கரும்பச்சை) வர்ணம் உள்ளவள் (என்றும் இளமையானவள்), மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.

10. பொன்னிறமானவள் (கபிலா என்ற பசு வடிவமானவள்), (கண்டகி) நதி உண்டாகக் காரணமானவள் (கண்டகீ என்ற நதி துளசீ தேவியின் உடலிலிருந்தும் துளசிச் செடி அவளது கேசத்திலிருந்தும் உண்டானதாக புராணம்), ஆயுள் விருத்தியைத் தருபவள் (பெண்கள் துளசியைத் தினமும் பூஜை செய்தால் கணவனின் ஆயுள் விருத்தியாகும்), வன(காடு) ரூபமானவள் (துளசி ஒரே செடியானாலும் புதர் போல் வளரும் என்பதால்), துக்கத்தை நசிப்பவள்,  மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்கு திருக்கரங்களை உடையவள்.

11. கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணு மூலிகையாக உள்ளவள். (விஷ்ணுவுக்கு வேர் போன்றவள் - துளசிக்கு விஷ்ணு மூலிகா என்று பெயர்), நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.

12. மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்ற‌வள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.

13. சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள்.  சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவ‌ள்.  (சயன ஏகாதசி - சுவாமி சயனிக்கும் நாள், பரிவர்த்தன ஏகாதசி - புரளும் நாள், உத்தான ஏகாதசி -‍சயன நிலையிலிருந்து எழுந்திருக்கும் நாள்), சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.

14. கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள் (நிர்க்குணா), பார்வதி தேவிக்குப் பிரியமானவள், அபமிருத்யுவைப் போக்குபவள் (துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது), ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடைய‌வள்.

15. வாடாத ரூபமுள்ளவள், அன்னம் போன்ற நடையழகை உடையவ‌ள், கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால் வணங்கப்படுகின்றவ‌ள், பூலோகத்தில் வாசம் செய்பவ‌ள், சுத்தமானவள், ராமகிருஷ்ணாதிகளால் பூஜிக்கப்பட்டவள்.

16. சீதா தேவியால் பூஜிக்கப்பட்டவள், ஸ்ரீராமனது மனதிற்குப் பிரியமானவள், ஸ்வர்க்கத்தை அடைவிப்பவளாக இருப்பவள் (நந்தன ஸம்ஸ்திதா), சகல புண்ணிய தீர்த்த மயமானவள், மோட்ச வடிவானவள், உலகை சிருஷ்டிப்பவள்.

17.  காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்,

18. ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள்,  நாராயண ஸ்வரூபமானவள் (நாராயணீ), சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.

19. அசோகவனத்தில் உள்ளவள், சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவ‌ள்.

20.  தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் (தானம் செய்யும் போது, துளசி தீர்த்தம் விட்டு தானம் செய்தாலே, தானத்தின் பலன் கிடைக்கும்). (துளசி தளத்தை) பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள்,  மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.

இவ்வாறு துளசி அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம் முடிவுற்றது.

No comments:

Post a Comment