Tuesday, January 22, 2013

Sri Mahalakshmi Kruta Ganapathy Stotra - ஸ்ரீ மஹாலக்ஷ்மீ அருளிய கணபதி ஸ்துதி

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ அருளிய கணபதி ஸ்துதி 


 நமோ மஹாதராயைவ நாநாலீலாலதராய தே |

ஸதா ஸ்வாநந்தஸம்ஸ்தாய பக்திகம்யாய வை நம:  ||

அநந்தாநந தேஹாய ஹ்யநந்தவிபவாய தே  |

அநந்தஹஸ்தபாதாய ஸதாநந்தாய வை நம: ||



(மஹோதரே (பெரிய வயிறை உடையவர்), அநேக விதமான லீலைகளைப் புரிபவரே !  எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவரே !! பக்தியால் அடையத்தக்கவரே !!  உமக்கு  நமஸ்காரம். எண்ணற்ற முகங்களையும், தேகங்களையும் கரங்களையும், கால்களையும் உடையவரே !!, அழிவற்ற வைபவம் உடையவரே !! ஆனந்தத்தின் ஸ்வரூபமாக இருப்பவரே நமஸ்காரம்.)
(இந்த ஸ்லோகத்தில், நேரிடையான பொருளின்படி, ஸ்ரீ விநாயகப்பெருமானின் உருவமும் கல்யாண குணங்களும், ரூப பேதங்களும் விளக்கப்படுகின்றன. மறைமுகப் பொருளின்படி, எங்கும் நிறை பரப்பிரம்மமாக விநாயகப்பெருமான் விளக்கப்படுகிறார். பெரிய வயிறு, உலகமனைத்தும் அவருள் அடக்கம் என்பதைக் குறிப்பது. ஆனந்தத்தில் நிலைத்திருப்பது, பரம்பொருள் எப்போதும் ஆனந்தமயமாக இருப்பதைக் குறிப்பது. விநாயகப்பெருமான், எண்ணற்ற முகங்களும் தேகங்களும் உடையவர் என்பது, ஷோடச கணபதி, 32 வித கணபதி முதலிய ரூப பேதங்களை நேரிடையாகக் குறித்தாலும், பலவித தேகமெடுத்து இவ்வுலகனைத்திலும் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுள்ளும் உறையும் பரம்பொருள் அவரே என்பது மறைபொருள். தொடரும் ஸ்லோகங்களிலும், பரம்பொருளின், நிர்க்குண, சகுண நிலைகளே விளக்கப்படுகின்றன.)



சராசரமயாயைவ சராசரவிவர்ஜித |

யோகசாந்திப்ரதாத்ரே தே ஸதா யோகி ஸ்வரூபிணே ||

அநாதயே கணேசாயதிமந்யாந்த ஸ்வரூபிணே  |

ஆதிமத்யாந்தஹீநாய விக்நேசாய நமோ நம:  ||



(அண்டசராசங்களுள்ளும் உறைபவராயும் அவையனத்திலிருந்தும் நீங்கி விளங்குபவராயும், யோகத்தால் அடையப்பெறும் அமைதியை அருளுபவராயும், யோக ஸ்வரூபராயும், ஆதி (முதல்) இல்லாதவரும், கணங்களுக்கு ஈசரும், முதல், நடு, முடிவின் ஸ்வரூபமாக விளங்குபவரும், முதலும் நடுவும் முடிவும் அற்றவருமான விக்நேசரே நமஸ்காரம்!!.)



ஸர்வாதிபூஜ்யகாயைவ ஸர்வபூஜ்யாய தே நம: |

ஸர்வேஷாம் காரணாயைவ ஜ்யேஷ்டராஜாய தே நம:  ||

விநாயகாய ஸர்வேஷாம் நாயகாய விசேஷத:  |

டுண்டி ராஜாய ஹேரம்ப பக்தேசாய நமோ நம:  ||



(எல்லாக் கடவுளருக்கும் முதலாகப் பூஜிக்கப்பெற்றவரே!!!, அனைவராலும் பூஜிக்கத் தகுந்தவரே!! நமஸ்காரம். அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரே!! மூத்த முதல்வனே (ஜேஷ்டராஜரே) நமஸ்காரம் !!!. விநாயகரே, அனைவருக்கும் விசேஷமான, சிறப்புமிக்க நாயகரே!!,  டுண்டி ராஜரே!, ஹேரம்பரே!!, பக்தருக்கு ஈசரே ! நமஸ்காரம்!! )



ஸ்ருஷ்டிகர்த்ரே ஸ்ருஷ்டிஹர்த்ரே பாலகாய நமோ நம: |

த்ரிபிர் ஹீநாய தேவேச குணேசாய நமோ நம:  ||

கர்மணாம் பலதாத்ரே ச கர்மணாம் சாலகாய தே |

கர்மாகர்மாதிஹீநாய லம்போதர நமோஸ்து தே ||



(படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிபவரே!!! முக்குணங்களைக் கடந்தவரே!!, தேவர்களுக்கு ஈசரே!!, குணங்களுக்குப் பிரபுவே நமஸ்காரம்!!, (ஜீவராசிகளின்) செயல்களுக்கான பலனைக் கொடுப்பவரே, செயல்பாடுகளுக்குக் காரணமாக இருப்பவரே!!, செயல், செயலற்ற நிலை ஆகிய இரண்டும் நீங்கியவரே!!, லம்போதரரே நமஸ்காரம்!!)



யோகேசாய ச யோகிப்யோ யோகதாய கஜானன:  |

ஸதா சாந்திதநாயைவ ப்ரஹ்மபூதாய தே நம:  ||

கிம் ஸ்தௌமி கணநாதம் த்வாம் ஸதாம் ப்ரஹ்மபதிம் ப்ரபோ ||

அதச்ச ப்ரணமாமி த்வாம் தேந துஷ்டோ பவ ப்ரபோ ||

தத்யாஹம் க்ருதக்ருத்யாஹம் பைலோ மே பவோபவத் ||

தந்யௌ மே ஜநகௌ நாத யயா த்ருஷ்டோ கஜானன: ||

ஏவம் ஸ்துதவதீ ஸா தம் பக்தியுக்தேந சேதஸா  ||

ஸாச்ருயுக்தா நநர்த்தைவ பாஷ்பகண்டா யுதிஷ்டிரா ||



(யோகீசரே!!, யோகிகளுக்கு யோகத்தில் சித்தியைக் கொடுப்பவரே!!, கஜானனரே!!, எப்பொழுதும் சாந்திமயமானவரே!!,  பிரம்ம கைவல்யமானவரே!!, நமஸ்காரம்!!, பிரம்மபதியே(பரப்பிரம்மமே!!), பிரபுவே, கணநாதரே!!, நான் தங்களை எவ்வாறு துதிப்பேன்?!! தங்களை வணங்குகிறேன். எனது நமஸ்காரத்தால் திருப்தியடையுங்கள். நான் பாக்கியம் செய்தவளானேன், என் பிறவி, பயனுள்ளதாயிற்று. கஜானனரின் தரிசனம் கிடைத்ததால், என் தாய் தந்தையரும் புண்ணியசாலிகளானார்கள்' என்று துதித்து, ஸ்ரீ மஹாலக்ஷ்மி, பக்தி மேலீட்டால், ஆனந்தக்கண்ணீர் பெருகியவளாக இருந்தாள்.)



தாமுவாச கணாதீசோ வரம் விஷ்ணு யதேப்ஸிதம் ||

தாஸ்யாமி தே மஹாலக்ஷ்மீ பக்திபாவேந தோஷித: ||

த்வயா க்ருதிம் ச மே ஸ்தோத்ரம் புக்தி முக்தி ப்ரதம் பவேத் ||

படதாம் ஸ்ருண்வதாம் தேவி நாநாகார்யகரம் ததா ||

தநதாந்யாதி ஸம்பூதம் ஸூகம் விந்ததி மாநவ: ||



(இந்த ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்த கணாதீசர் மஹாலக்ஷ்மியை நோக்கி, 'நீ கோரும் வரத்தைக் கேட்பாயாக, நீ அருளிய இந்த ஸ்தோத்திரத்தை, யார் பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு, சகல காரிய சித்தி, தனம், தான்ய விருத்தி, சுகம், மேலான முக்தி அனைத்தும் கிட்டும் என்று திருவாய்மலர்ந்தருளினார்)


No comments:

Post a Comment