Thursday, October 25, 2012

Vijayadasami - 4th Birthday - விஜயதசமி ‍திருநாள் - ‍வலைப்பூவின் நான்காம் ஆண்டு துவக்கம்.


வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இத்திருநாளின் நாயகி துர்க்கா தேவியின் அருளால் அனைவரின் இல்லத்திலும் எல்லாவிதமான வளங்களும் பெருகட்டும்.

க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

மூன்றாம் ஆண்டில் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. 4000 விசிட்டர்களின் எண்ணிக்கையுடன், 88 பதிவுகளுடனும் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த வலைப்பூ ஒரு வருடத்தில் 57 பதிவுகளை சேர்த்து மொத்த பதிவு எண்ணிக்கையை 145 ஆக உயர்த்தி உள்ளது.

விசிட்டர்கள் எண்ணிக்கையும் 4000 லிருந்து 9000 ஆகி உள்ளது. அதாவது இரட்டிப்பாகி இருக்கிறது. பதிவுகளின் பார்வை இட்டோரின் எண்ணிக்கை 19000 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு வாசகர்களின் ஆதரவு மட்டுமே காரணம். வாசகர்களின் ஆதரவுக்கு க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ தன்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கும் சமயம், இந்த நம்பிக்கையும், ஆதரவும் தொடரவும் வேண்டிக்கொள்கிறது.

கடந்த ஆண்டினை போல் அடி எடுத்து வைத்துள்ள நான்காம் ஆண்டிலும் க்ஷேத்ரயாத்ரா வலைப்பூவின் பணி சிறப்பாக இருக்கும் என்று உறுதியுடன் நம்பலாம்.

கடைசியாக, எனக்கு உற்சாகமாக ஆலோசனை அளித்தும், தன்னுடைய பொன்னான நேரத்தை பதிவுகள் பிழைகள் இல்லாமல இருக்க பிழை திருத்தம் செய்தும், என்று என்னுடைய பயணத்தில் உறுதுணையாக இருந்த  பேரன்புக்கு உரிய சகோதரி திருமதி.பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ச‌கோதரியின் அற்புதமான வலைப்பூவினை காண இங்கு சொடுக்கவும்.

நன்றியுடனும், நம்பிக்கையுடனும் நான்காம் ஆண்டில் காலடி வைக்கும்
உங்கள் அன்புள்ள‌
க்ஷேத்ரயாத்ரா

2 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

தங்கள் வலைப்பூவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகச் சிறப்பான தெய்வீகப் பணியைச் செய்து வருகிறீர்கள். ஸ்ரீ ராமருக்கு அணில் உதவியதைப் போன்ற என் சிறு பணியையும் தங்கள் வலைப்பூவில் குறிப்பிட்டு பெருமைப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

kshetrayatraa said...

சகோதரியின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ராமபிரான் பாலம் கட்ட உதவியவர்கள் எத்தனையோ பேர். ஆனால் அதில் மிகச்சிறப்பாக இன்று வரை அனைவரின் நினைவிலும் இருப்பது அணில் செய்த உதவி தான்.

Post a Comment