Friday, April 6, 2012

Eka Sloki Navagraha Stotra


ஒரே ஸ்லோகத்தில் நவக்கிரக வழிபாடு
இவ்வுலகில் நவக்ரஹங்களின் தாக்கமில்லாமல் ஒன்றும் இருக்கமுடியாது. நம் உடலின் ஆதாரச் சக்ரங்களாக உள்ளவை மூலாதாரம்,  ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞை, ஸஹஸ்ராரம். இவைகளில் முதல் ஆறு சக்ரங்களிலும், நாடி நரம்புகளிலும், எந்த எந்த கிரஹங்கள் அமைந்து ஆட்சி செய்கின்றன என்று விவரித்து அவற்றை ஆதாரச் சக்ரங்களுடன் ஜபித்துப் பலனடைய இந்த ஸ்தோத்ரம் உதவும்.

இதைக் கேரளத்தில் நவக்ரஹ நமஸ்காரங்கள் செய்வதற்கு முன்பாக, தியான ஸ்லோகமாகவும், தனியாகவும் ஜபித்து வருகின்றனர். இந்த ஆதார சக்ர த்யானம் மிகவும் வலிமை வாய்ந்தது. பலன் அளிப்பது. எனவே நாமும் இதை தினமும் ஜபித்துப் பலனடையலாம்.




ஆதாரச் சக்ரங்களுடன் தொடர்புடைய ஏக ஸ்லோகீ நவக்ரஹ ஸ்தோத்ரம்


आधारे प्रथमे सहस्र किरणं, ताराधवं स्वाश्रये
माहेयं मणिपूरके ह्रुधि बुधं, कण्ठे च वाचस्पतिं
भ्रूमध्ये भृगु नन्दनं दिनमणे, पुत्रं त्रिकूटस्थले
नाडी मर्मसु राहु केतु गुलिकान
नित्यं नमामि आयुषे


ஆதாரே ப்ரதமே ஹைஸ்ரகிரணம்,  தாரா தவம் ஸ்வாஸ்ரயே

மாஹேயம் மணிபூரகே, ஹ்ருதி புதம், கண்டேச வாசஸ்பதிம்

ப்ரூமத்யே ப்ருகு நந்தனம், தினமணே: , புத்ரம் த்ரிகூடஸ்தலே
நாடீ மர்மஸூ ராஹூ கேது குளிகான்
நித்யம் நமாமி ஆயுஷே !

  
1). மூலாதாரம் - சூரியன். (2). ஸ்வாதிஷ்டானம் - சந்திரன்  (3). மணிபூரகம் - செவ்வாய்  (4). அனாஹதம் - புதன் (மார்பு)  (5). விஸூத்தி - குரு (கழுத்து)  (5 A).  கழுத்தும் தலையும் சேருமிடம் - த்ரிகூடஸ்தலம் -  சனி (நாடி, நரம்பு - ராகு கேது குளிகர்கள்) (6). ஆக்ஞா - சுக்கிரன் (புருவ மத்தி)  (7). ஸஹஸ்ராரம் - ஸர்வேச்வரன் & ஈஸ்வரி.

(மூலாதாரத்தில் சூரியனையும், ஸ்வாதிஷ்டானத்தில் நக்ஷத்ர அதிபதி சந்த்ரனையும், மணிபூரகத்தில் செவ்வாயையும், ஹ்ருதயத்தில் புதனையும், கழுத்து ஸ்தானத்தில் குருவையும், புருவ மத்தியில் ப்ருகு மஹரிஷியின் புத்ரனான சுக்ரனையும், கழுத்தும் தலையும் சேரும் இடத்தில் சூரிய புதல்வனான சனி பகவானையும், நாடி, நரம்பு மற்றும் மர்ம ஸ்தானங்களில் ராகு கேதுவையும் தினந்தோறும் எனக்கு பூரண ஆயுள் கிடைப்பதற்காக நமஸ்கரிக்கின்றேன்.)

You can download Eka Sloki Navagraha Stotra here

No comments:

Post a Comment