ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்
(இந்த ஸ்தோத்திரம் மஹா பாபங்களையும் ரோகங்களையும் போக்கி, சரீர ரக்ஷயையும், கார்ய ஸித்தியையும் அளிக்கும். மேலும் ஜாதகத்தில் அங்காரகன், இராகு, கேது முதலிய கிரஹங்கள் தோஷமுள்ளதாகவோ, நீசர்களாகவோ, இருந்தால் புத்திர லாபத்திற்கு தடையும், ரத்தத்தில் தோஷம், பங்காளிகள், வேலைக்காரர்கள் இவர்களுடைய மனஸ்தாபமும், வீடு, பூமி இவைகளின் நஷ்டமும் இருக்கக்கூடும். இந்த தோஷங்கள் விலகவும் இந்த ஸ்தோத்திரத்தை படிக்கவும். முடிந்தால் ஸ்ரீ சுப்ரம்மண்ய மூலமந்திரத்தால் ஹோமமும் செய்யலாம்.)
ஸிந்தூராருணமிந்து காந்திவதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |
அம்போஜா பயசக்தி குக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
ஸூப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம் ||
(ஸிந்தூரம் போல் சிவந்தவரும், சந்திரன் போல் அழகு வாய்ந்த முகமுள்ளவரும், தோள்வளை முக்தாஹாரம் முதலிய திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சரீரமுள்ளவரும், ஸ்வர்க போகம் முதலிய ஸூகத்தை அளிப்பவரும், தாமரைப்பூ, அபய ஹஸ்தம், சக்திவேல், கோழி இவைகளை தரித்தவரும், சிவந்த வாசனைப் பொடிகளால் பிரகாசிக்கின்றவரும், நமஸ்கரிப்பவர்களின் பயத்தைப் போக்குவதில் முயற்சி உள்ளவருமான ஸ்ரீ ஸூப்ரஹ்மண்யரை உபாசிக்கின்றோம்.)
ஸூப்ரஹ்மண்யோக்ரத: பாது ஸேனாநீ: பாது ப்ருஷ்டத:
குஹோ மாம் தக்ஷிணே பாது வன்னிஜ: பாது வாமத:
(முன் பாகத்தில் ஸ்ரீ ஸூப்ரஹ்மண்யர் ரக்ஷிக்கட்டும். தேவசைன்ய பதிவானவர் பின்புறத்தில் ரக்ஷிக்கட்டும். தென் பாகத்தில் குஹன் ரக்ஷிக்க வேண்டும். இடது பாகத்தில் அக்னியிலிருந்து உண்டான முருகன் ரக்ஷிக்க வேண்டும்.)
சிர: பாது மஹாஸேன: ஸ்கந்தோ ரக்ஷேல்லலாடகம்
நேத்ரே மே த்வாதசாக்ஷச்ச ச்ரோத்ரே ரக்ஷது விச்வப்ரித்
(பெரும் சேனையை உடையவர் சிரஸ்ஸை ரக்ஷிக்க வேண்டும். ஸ்கந்தன் நெற்றியை ரக்ஷிக்க வேண்டும். பன்னிரண்டு கண்களை உடையவர் எனது கண்களை ரக்ஷிக்க வேண்டும். உலகத்தை வஹிக்கின்றவர் காதுகளை ரக்ஷிக்க வேண்டும்.)
முகம் மே ஷண்முக: பாது நாஸிகம் சங்கராத்மஜ:
ஒஷ்டௌ வல்லீபதி: பாது ஜிஹ்வாம் பாது ஷடானன:
(ஆறு முகங்களை உடையவர் எனது முகத்தை ரக்ஷிக்க வேண்டும். சிவகுமாரன் எனது மூக்கை ரக்ஷிக்க வேண்டும். வள்ளியின் கணவன் எனது உதடுகளை ரக்ஷிக்க வேண்டும். ஆறு முகங்களை உடையவர் எனது நாக்கை ரக்ஷிக்க வேண்டும்.)
தேவஸேனாபதிர்தந்தான் சிபுகம் பஹூளோத்பவ:
கண்டம் தாரகஜித் பாது பாஹூ த்வாதச பாஹூக:
ஹஸ்தௌ சக்திதர: பாது வக்ஷ: பாது சரோத்பவ:
ஹ்ருதயம் வஹ்னிபூ: பாது குக்ஷிம் பாத்வம்பிகாஸூத:
(தேவஸேனையின் கணவன் பற்களை ரக்ஷிக்க வேண்டும். பாஹூளேயன் முகவாய் கட்டையை ரக்ஷிக்க வேண்டும். தாரகனை ஜயித்தவர் எனது கழுத்தை ரக்ஷிக்க வேண்டும். பன்னிரண்டு கைகளை உடையவர் எனது கைகளையும், வேலாயுதத்தை தரித்தவர் எனது உள்ளங்கைகளையும் ரக்ஷிக்க வேண்டும். நாணற்காட்டில் உண்டானவர் எனது மார்பை ரக்ஷிக்க வேண்டும். அக்னியிலிருந்து உண்டானவர் எனது ஹ்ருதயத்தை ரக்ஷிக்க வேண்டும். அம்பிகையின் புதல்வர் எனது வயிற்றை ரக்ஷிக்க வேண்டும்.) (5 - 6)
நாபிம் சம்புஸூத: பாது கடிம் பாது ஹராத்மஜ:
ஊரூ பாது கஜாரூடோ ஜாநூ மே ஜான்ஹவீஸூத:
(சம்பு குமாரன் எனது தொப்புளை ரக்ஷிக்க வேண்டும். ஹரபுத்ரன் எனது இடுப்பை காக்க வேண்டும். யானையின் மீது அமர்ந்திருப்பவர் எனது துடைகளை ரக்ஷிக்க வேண்டும். கங்கையின் புதல்வர் எனது முழங்கால்களை காக்க வேண்டும்.)
ஜங்கே விசாகோ மே பாது பாதௌ மே சிகி வாஹன:
ஸர்வாண்யங்கானி பூதேச: ஸர்வதாதூம்ச பாவகி:
(விசாகன் எனது கணுக்கால்களை ரக்ஷிக்க வேண்டும். மயிலை வாஹனமாகக் கொண்டவன் எனது கால்களை ரக்ஷிக்க வேண்டும். எல்லா பூதங்களுக்கும் ஈசன் எனது எல்லா அவயங்களையும் காப்பாற்ற வேண்டும். அக்னி குமாரன் எனது எல்லா தாதுக்களையும் ரக்ஷிக்க வேண்டும்.)
ஸந்த்யாகாலே நிசீதின்யாம் திவாப்ராதர்ஜலேக்னிஷூ
துர்கமே ச மஹாரண்யே ராஜத்வாரே மஹாபயே
துமுலே ரணமத்யே ச ஸர்வ துஷ்டம் ருகாதிஷூ
சோராதிஸாத்வஸேSபேத்யே ஜ்வராதிவ்யாதிபீடனே
துஷ்டக்ரஹாதிபீதௌ ச துர்நிமித்தாதி பீஷணே
அஸ்த்ரசஸ்த்ர நிபாதே ச பாதுமாம் க்ரௌஞ்சரந்த்ரக்ருத்
(ஸந்த்யா காலத்திலும், நடு இரவிலும், பகலிலும் காலையிலும் ஜலத்திலும் நெருப்பிலும் பிரவேசிக்க முடியாத காட்டிலும் அரண்மனை வாயிலிலும் மிகுந்த பயத்திலும் பயங்கரமான யுத்தத்தின் நடுவிலும் எல்லாவித துஷ்ட முருகங்களிடமிருந்தும் திருடர் முதலிய பயத்திலிருந்தும் தடுக்க முடியாத ஜூரம் முதலிய வியாதிகளின் பீடையிலிருந்தும் துஷ்டக்ரஹம் முதலிய பயத்திலிருந்தும் கெட்ட சகுனம் முதலிய பயங்கர ஸமயத்திலும் அஸ்திரங்கள், சஸ்திரங்கள் இவைகள் விழும் பொழுதும் க்ரௌஞ்ச மலையை துளை செய்தவரான ஸ்ரீ முருகன் என்னை காக்க வேண்டும்.) (8 - 11)
ய: ஸூப்ரஹ்மண்ய கவசம் இஷ்டஸித்தி ப்ரதம் ப்டேத்
தஸ்ய தாபத்ரயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
(இஷ்ட ஸித்தியை நன்கு அளிக்கும் இந்த சுப்ரமண்ய கவசத்தை எவன் படிப்பானோ, அவனுக்கு மூன்று தாபங்கள் கிடையாது. நான் ஸத்யமாகச் சொல்கிறேன். ஸத்யமாகச் சொல்கிறேன்.)
தர்மார்த்தீ லபதே தர்மமர்த்தார்த்தீ சார்த்த்மாப்னுயாத்
காமார்த்தீ லபதே காமம் மோக்ஷார்த்தீ மோக்ஷமாப்னுயாத்
(தர்மத்தை விரும்புகிறவன் தர்மத்தையும், பொருளை விரும்புகிறவன் பொருளையும், காமத்தை விரும்புகிறவன் காமத்தையும், மோக்ஷத்தை விரும்புகிறவன் மோக்ஷத்தையும் அடைவான்.)
யத்ர யத்ர ஜபேத் பக்த்யா தத்ர ஸன்னிஹிதோ குஹ:
பூஜாப்ரதிஷ்டாகாலே ச ஜபகாலே படேதிதம்
தேஷாமேவ பலாவாப்தி மஹாபாதக நாசனம்
(எவ்விடமெல்லாம் இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் ஜபிக்கிறானோ அங்கு ஸ்ரீ குஹன் சமீபத்தில் இருப்பான். பூஜை, பிரதிஷ்டை இவைகளைச் செய்யும் பொழுதும் ஜபகாலத்திலும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் தான் பூஜை முதலியவைகளின் பயன் நன்கு ஏற்படும். மஹாபாபங்கள் விலகும்.)
ய: படேத் ச்ருணுயாத் பக்த்யா நித்யம் தேவஸ்ய ஸன்னிதௌ
ஸர்வான் காமானி ஹப்ராப்ய ஸோந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத்
இதை ஸ்ரீ தேவ ஸன்னிதியில் பக்தியுடன் யார் படிக்கின்றானோ, யார் கேட்கின்றானோ அவன் இவ்வுலகில் எல்லா விருப்பங்களையும் அடைந்து முடிவில் கைலாஸத்திலுள்ள ஸ்ரீ ஸ்கந்தனுடைய பட்டணத்தை அடைவான்.)
//இதி ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கவசம் ஸம்பூர்ணம்)
No comments:
Post a Comment