Saturday, July 3, 2010

சிவசிவா ஸ்துதி


சிவசிவாஸ்துதி
அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும் - அவர்கள் ஆசியால்.

நமோ நமஸ்தே கிரீஸாய துப்யம்
நமோ நமஸ்தே கிரிகன்யகாயை
நமோ நமஸ்தே வ்ருஷபத்வஜாய
சிம்ஹத்வஜாய ச நமோ நமஸ்தே                  ||

கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக்கொடியுடைவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக்கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.

நமோ நமஸ்தே பூதிவிபூணாய
நமோ நமஸ்தே சந்தனருஷிதாயை
நமோ நம: பாலவிலோசனாய
நமோ நம: பத்மவிலோசனாயை                   ||

மகிமைமிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்ரியரை போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரைக் கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.

த்ரிசூல ஹஸ்தாய நமோ நமஸ்தே
நமோ நம: பத்மாலமத்கராயை
நமோ நமோ திக்வமனாயதுப்யம்
சித்ராம்பராயை ச நமோ நமஸ்தே                ||

திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகளை உடுத்தும் சிவைக்கு வணக்கம்.

சந்த்ராவதம்பாய நமோ நமஸ்தே
நமோஸ்து சந்த்ராபரணாஞ் சிதாயை
நம: சுவர்ணாங்கித குண்டலாய
நமோஸ்து ரத்னோஜ்வல குண்டலாயை       ||

சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.

நமோஸ்து தாராக்ரஹ மாலிகாய
நமோஸ்து ஹாரான்வித சுந்தராயை
சுவர்ண வர்ணாய நமோ நமஸ்தே
நம: ஸ்வர்ணாதிக சுந்தராயை                     ||

நட்சத்திரங்களையும் கோள்களையும் மாலையாக அணிந்தவர்க்கு வணக்கம். தோள்களில் மாலை துவள ஒளிரும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னார் மேனியனுக்குப் போற்றி வணக்கம். பொன்னை விட அழகான, ஒளிரும் மேனி பெற்ற சிவைக்கு நமஸ்காரம்.

நமோ நமஸ்தே த்ரிபுராந்தகாய
நமோ நமஸ்தே மது நாசனாயை
நமோ நமஸ்துத்வந்தக சூதனாயை
நமோ நம: கைடப சூதனாயை                    ||

த்ரிபுராசுரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.

(மது, கைடபர் இருவரையும் திருமால் அழித்தார். பரமனின் ஒரு பாதி பார்வதி என்பது போல சங்கர நாராயணனின் ஒரு பகுதியானவர் நாராயணன். பார்வதியின் பகுதி தான் அவளின் சோதரன் நாராயணன் பகுதி. அப்பகுதிக்குரிய பெருமைதான் மது, கைடப சம்ஹார வைபவம். சிவ பாகம் பொன்மேனி. பார்வதி பாகம் கருமை. நீலமேக வண்ணம் திருமாலுடையது.)

நமோ நமோ ஞான மயாய நித்யம்
நமஸ் சிதானந்தன ப்ரதாயை
நமோ ஜடா ஜுட விராஜிதாய
நமோஸ்து வேணி பணி மண்டிதாயை          ||

பரமஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங்குழலையுடையவளுக்கு வணக்கம்.

நமோஸ்து கற்பூர சாகராய
நமோ லமத் குங்கும மண்டிதாயை
நமோஸ்து வில்வாம்ர பலார்ச்சிதாய
நமோஸ்து குந்தப்ரஸவார்ச்சிதாயை            ||

கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி ! குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி ! வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே வணக்கம்.

நமோ ஜகன் மண்டல மண்டனாய
நமோ மணிப்ராஜித மண்டனாயை
நமோஸ்து வேதாந்த கணஸ்துதாய
நமோஸ்து விஸ்வேஸ்வர சம்ஸ்துதாயை      ||

பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப்படுபவளுக்கு நமஸ்காரம்.

நமோஸ்து சர்வாமர பூஜிதாய
நமோஸ்து பத்மார்ச்சித பாதுகாயை
நம: சிவாலிங்கித விக்ரஹாய
நம: சிவாலிங்கித விக்ரஹாயை                  ||

அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா (மகாலக்ஷ்மி) யால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.

நமோ நமஸ்தே ஜனகாய நித்யம்
நமோ நமஸ்தே கிரிஜே ஜனன்யை
நமோ நமோ அனங்கஹராய நித்யே
நமோ நமோ அனங்க விவர்தனாய             ||

உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.

நமோ நமஸ்தேஸ்து விஷாசனாய
நமோ நமஸ்தேஸ்து சுதாசனாயை
நமோ நமஸ்தேஸ்து மகேஸ்வராய
ஸ்ரீசந்தனே தேவி நமோ நமஸ்து               ||

பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுதமயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம். மணம் கமழும் சந்தனமயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் நலமும் பெருகிட அருள்வீராக...!

(சிவசிவா துதி நிறைவு)

நன்றி: குமுதம் பக்தி ஸ்பெஷல்

No comments:

Post a Comment