Saturday, December 26, 2009

பிரம்மபுரீஸ்வரர், திருப்பட்டூர், திருச்சி மாவட்டம்



திருப்பட்டூர், திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தில் இரண்டு மூம்மூர்த்தி தலங்கள் உண்டு.
1. உத்தமர் கோவில்  2. திருப்பட்டூர்.
 


பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றிய திருத்தலம் திருப்பட்டூர். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர், சுயம்புலிங்கம், பிரம்மன் பிரதிஷ்டை செய்த லிங்கங்களோடு மண்டூக மகரிஷி பூஜித்த லிங்கமும் சேர்த்து மொத்தம் 14 லிங்கங்கள். 1000 ஆண்டு பழமையான மகிழ மரத்தடியில் தான் பிரம்மாவிற்கு சிவன் அருள் பாலிக்கிறார். பிரம்மாவிற்கு தனி சந்நிதி உண்டு.

1. இழந்த பதவியை மீண்டும் பெற்றுத் தருபவர்
2. தோஷங்கள் நீக்கி சந்தோஷம் தருபவர்



நம் தலையெழுத்தையே மாற்றி எழுதும் வல்லமை படைத்தவர். பிரம்மன் தாமரையில் தியான நிலையில் 6 அடி 6 அங்குலம் உயரம் உள்ளார். வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு. இப்பிரம்மனுக்கு நாமே அரைத்த மஞ்சளைக் காப்பிட்டு தர்ப்பையால் ஆன கீரீடத்தை அணிவித்து 108 புளியோதரை உருண்டைகளை படைத்து ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தில் வழிபட்டு வந்தால் நம் தீவினைகள் அகன்று சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.




சிவன் நடுவில் இருக்க, வலதுபுறம் பிரம்மா, பின் கோஷ்டத்தில் மஹாவிஷ்ணு ஆக மூம்மூர்த்திகள் உள்ளனர். பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி உள்ளது. தல மரம் ‍‍‍மகிழம், தீர்த்தம் ‍பிரம்ம தீர்த்தம், பிரம்மா வழிபட்டதால் பிரம்மபுரீச்வரர், மண்டூக ரிஷி வழிபட்ட தலம் ஆகையால் மண்டூகநாதர்.பிரம்மாவுக்கு அத்தனை செல்வத்தையும் வழங்கிய இறைவி சம்பத் ‍கௌரி இங்கு எழுந்தருளி உள்ளாள்.


3 comments:

Unknown said...

Pls tell me the road/rail route to reach Thirupattor temple from trichy

kshetrayatraa said...

திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து துறையூர் செல்லும் பஸ்களில் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். தூரம் சுமார் 30 கி.மீ.
கோயில் நேரங்கள் :
காலை 7.30 லிருந்து மதியம் 12 மணி
மாலை 4.00 லிருந்து இரவு 8.00 மணி
வியாழக்கிழமைகளில் காலை 6 முதல் மதியம் 12.30 வரை.

தொடர்பு கொள்ள: 94438 17385 / 98949 26090

Unknown said...

Thanks a lot for valuable information. Hope your good work continues.

Post a Comment