Friday, December 25, 2009

பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு



சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய நேரம் தான் பிரதோஷ நேரம்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் ஆகும். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.

பிரதோஷ வழிபாடு செய்தால் வறுமை, பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும், நன்மைகள் பல விளையும் என்று கடம்பவன புராணம் கூறுகிறது.

சிவபெருமான் பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் உயிர்கள் உய்யும் பொருட்டு திருநடம் புரிந்தார். தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் இறைவழிபாடு செய்கிறார்கள்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசியும், நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

பிரதோஷ வேளையில் சிவலிங்கத்தை ரிஷபதேவருக்கு இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

சனிக்கிழமையன்று பிரதோஷம் வந்தால் மிகச்சிறப்பு. இதர நாட்களில் வரும் பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் ஆலய வழிபாடு செய்தால் ஒரு ஆண்டு ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்றால் சனிப் பிரதோஷ தினத்தில் பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் ஆலய வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

பதினொன்று பிரதோஷம் பார்ப்பது ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் உண்டு. 120 பிரதோஷம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

4 comments:

Unknown said...

120 pradosham should be continous or in entrie lifetime ?

sriganeshh said...

I believe it is not continous..

kshetrayatraa said...

120 பிரதோஷ வழிபாடு தொடர்ச்சியானாது இல்லை என்பது என் கருத்து. நன்றி.

Unknown said...

Thank Ganesh and Kshetrayatraaa for the info.

Post a Comment