வாராஹி மாலை
1. வசீகரணம்
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம்
இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம்
கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம்
சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை
மாணிக்கமே
2. காட்சி
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைக்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவப் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே
8. பெருவச்யம் ( திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வைகயத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே
10. வாக்கு வெற்றி
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் தவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்ம பூஜை
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல்
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே !
17. வாழ்த்துதல்
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல்
வேறாக்கும் நெஞ்சம் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல்
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஒடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு
தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சந்நிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நம்க்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே.
23. புகழ்சொற்பாமாலை (மௌனாந்த யோகம்)
ஊரா கிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சித்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
thankn u sir
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=beuqWsKxR3Y
ReplyDelete@Prasanna Kumar,
ReplyDeleteThank you for visiting blog and sharing Youtube link.
thanks for the varahi malai. Sir. on th 11th para it should be suvarida soolathai vittu and not thavarida soolathai vittu. please correct. thank you
ReplyDeleteThank you very much for this prayer. Can someone help me by translating the meaning in English?
ReplyDeleteThank you in advance!
வாராஹி பொருள் விளக்கம் வேண்டும்
ReplyDelete2. காட்சி
ReplyDeleteதேராத வட்டம் முக்கோணம் or
2. காட்சி
தோராத வட்டம் முக்கோணம்
தோராத வட்டம்
DeleteThank you sir
ReplyDeleteThank u
ReplyDeleteSir please post lyrics in English
ReplyDeleteThanks for sharing this
ReplyDeleteAmma
ReplyDeleteThan k uuuu varahi amma en amma.
ReplyDeleteபகைமுடிப்பு (வித்வேஷணம்)
ReplyDeleteAmma vali vedanai kadumaiya erukku
ReplyDeleteVarahi thaaye our nala velai vendum
ReplyDeleteWhen you are posting this , one should be able to copy this in word document , take print out & recite the same . Don't understand what benefit you get or devotees get by not making in editable or by preventing it to be copied !!!!
ReplyDeleteCan u please give the text in English.
ReplyDeleteI don't know to read Tamil but know to speak. It will be of great help if u give the text in English. Thank u
Nice
ReplyDeletefor all those who requires english text version, please use email button below the post ....you will get the stotra in your mail.
ReplyDeletecopy the stotra and paste it in google translation ...you will get english version.
Can you please post varahi malai in English on iyerpk71@gmail.com
Deletefor the unknown who commented on making it non-editable or non copy...
ReplyDelete...
My postings are essentially my love for the mother and nothing more. And all my postings are my works and not copied from anywhere else...but many are copying it and making it as their own posts in various forums and some even started commercial...
to restrict this kind of activity, i did...
just my two cents on my view
Thank you so much
ReplyDelete@prasanna,
ReplyDeleteIt is difficult to translate in english...but if you require english version, suggest you to use email button below the post, u will get this in your email. copy the stotra from email and paste it in google translation, transliteration...u will get sketchy version, which u can modify ...hope it helps ..
thanks for visiting and comments
மதுரை விரகனூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதி அன்று காலை 8 மணி முதல் மாலை.6.30 வரை 108 தடவை வாராஹி மாலை கூட்டு பாராயணம் நடைபெறுகிறது
ReplyDelete