Monday, July 9, 2012

Sarpa Suktam (aka Subramanya Suktam) - சர்ப்ப சூக்தம்



सर्प सूक्तम् 
 नमो अस्तु सर्पेभ्यो ये के पृथिवीमनु।
ये अन्तरिक्षे ये दिवि तेभ्यः सर्पेभ्यो नमः॥
येऽदोरोचने दिवो ये वा सूर्यस्य रश्मिषु।
येषामप्सु सदः कृतं तेभ्यः सर्पेभ्यो नमः॥ 
या इषवो यातुधानानां ये वा वनस्पतीगंरनु।
ये वाऽवटेषु शेरते तेभ्यः सर्पेभ्यो नमः॥
इदगं सर्पेभ्यो  हविरस्तु जुष्टम्। आश्रेषा येषामनुयन्ति चेतः।
ये अन्तरिक्षं पृथिवीं क्षियन्ति। ते नः सर्पसो हवमागमिष्ठाः॥
ये रोचने सूर्यस्यापि सर्पाः। ये दिवं देवीमनु संचरन्ति।
येषामाश्रेषा अनुयन्ति कामम्। तेभ्यः सर्पेभ्यो मधुमज्जुहोमि॥
निघृष्वैरसमायुतै। कामैर् हरित्वमापन्नैः। इन्द्रायाहि सहस्रयुक्॥
अग्निर्विभ्राष्टिवसनः। वायुश्श्वेतसिकद्रुकः।
सम्वथ्सरो विषूवर्णैः। नित्यास्तेऽनुचरास्तव॥
सुब्रह्मण्योगं सुब्रह्मण्योगं सुब्रह्मण्योम्॥ 


ஸர்ப்ப ஸூக்தம்
நமோ அஸ்து ஸர்பேப்யோ யே கே ச ப்ருதி²வீமனு |
யே அந்தரிக்ஷே யே தி³வி தேப்ய​: ஸர்பேப்யோ நம​: ||
யே(அ)தோ³ரோசனே தி³வோ யே வா ஸூர்யஸ்ய ரஸ்²மிஷு |
யேஷாமப்ஸு ஸத³   க்ருதம் தேப்ய​: ஸர்பேப்யோ நம​:||
யா இஷவோ யாதுதானானாம் யே வா வனஸ்பதீக³ம் ரனு |
யே வா(அ)வடேஷு ஸே²ரதே தேப்ய​: ஸர்பேப்யோ நம​:||
இத³³ம் ஸர்பேப்யோ  ஹவிரஸ்து ஜுஷ்டம் |  
 ஆஸ்²ரேஷா யேஷாமனுயந்தி சேத​:|
யே அந்தரிக்ஷம் ப்ருதி²வீம் க்ஷியந்தி |   
தே ந​: ஸர்பஸோ ஹவமாக³மிஷ்டா² : ||
யே ரோசனே ஸூர்யஸ்யாபி ஸர்பா​: |  
 யே தி³வம் தே³வீமனு ஸஞ்சரந்தி |
யேஷாமாஸ்²ரேஷா அனுயந்தி காமம் |  
 தேப்ய​: ஸர்பேப்யோ மதுமஜ்ஜுஹோமி  ||
நிக்ருஷ்வைரஸமாயுதை  |  காமைர் ஹரித்வமாபன்னை​: |   
இந்த்³ராயாஹி ஸஹஸ்ரயுக்  ||
அக்³னிர்விப்ராஷ்டிவஸன​: |  வாயுஸ்²ஸ்²வேதஸிகத்³ருக​: |
ஸம்வத்²ஸரோ விஷூவர்ணை​:|  நித்யாஸ்தே(அ)நுசராஸ்தவ ||
ஸுப்³ரஹ்மண்யோக³ம்  ஸுப்³ரஹ்மண்யோக³ம்  ஸுப்³ரஹ்மண்யோம்  ||

சர்ப்ப சூக்தம் அல்லது சுப்ரமண்ய சூக்தம் எனப்படும் இந்த ஸ்தோத்ர பாராயணம் சர்ப்ப கிரகங்களினால் ஏற்படும் இன்னல்களுக்கு ஏற்ற பரிகாரம் ஆகும். நாக தோஷத்தின் கடுமையான விளைவுகளை குறைக்க நித்யம் இதை சொல்லலாம். முடிந்தவரையில் சுப்ரமணிய பூஜையும், நெய் தீபமும் ஏற்றி வைத்து இதை படிக்க ஆரம்பிக்கலாம்.

13 comments:

  1. சுப்பிரமணிய சுவாமியை நாக உருவில் வழிபடுவது கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் வழக்கில் உள்ளது. வடமாநிலங்களிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். கேரளாவில், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல விக்கிரகம் உள்ள வெகு சில கோவில்களுள் ஒன்றான,(மிகப் பெரும்பாலான கோவில்களில், காலத்தால் ஏற்பட்ட விளைவுகளால், விக்கிரகங்கள் மாற்றப்பட்டு விட்டன) அச்சன் கோவில் மஹாசாஸ்தாவை, இரவு நேரத்தில் சித்தர்கள் அரூபமாக வந்து சர்ப்ப ஸூக்தம் சொல்லி தினமும் ஆராதிப்பதால், அங்கே சர்ப்பக் கடி பட்ட யாரும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை எனவும், கோவிலில் வந்து தீர்த்தமும் பிரஸாதமும் பெற்று, கடிபட்ட இடத்தில் பிரஸாத சந்தனத்தை பூசினால் விஷம் முறிகிறது என்றும், இக்காலத்திலும் இது கண்கூடாக நடக்கிறதென்றும் ஒரு புத்தகத்தில் படித்தேன்.

    இதைத் தேட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், தங்கள் பதிவில் பார்த்தவுடன் அடைந்த சந்தோஷம் சொல்ல முடியாது. மிக மிக நன்றி. குகே சுப்பிரமணிய ஸ்வாமியின் படமும் அருமை.

    ReplyDelete
  2. சகோதரியின் வருகைக்கும், மேலதிக விவரங்களுக்கும் மிக்க நன்றி.
    இந்த சர்ப்ப ஸூப்ரமண்ய சூக்தத்தை தவிர இன்னுமொரு சர்ப்ப சூக்தமும் உள்ளது. நாக பஞ்சமி அன்று கால சர்ப்ப பூஜை செய்யும் போது அதையும் மானசா தேவி ஸ்தோத்ரத்தையும் சொல்லி பூஜை செய்து வழிபடுவார்கள். அது காலசர்ப்ப தோஷத்திற்கு ஏற்ற பரிகாரம்.

    ReplyDelete
  3. நாக பஞ்சமியை ஒட்டி அந்த‌ இன்னொரு சர்ப்ப ஸூக்தத்தையும் சகோதரர் பதிவிட வேண்டுமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  4. சகோதரிக்கு நன்றி.
    நிச்சயமாக அதற்கு முன்பாகவே பதிவிட முயற்சிக்கிறேன். ஒரு வேண்டுகோள் இந்த "தாழ்மையான" என்றெல்லாம் வேண்டாமே. பதிவுகளினால் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்பதற்காகத் தான் அரிதான ஸ்தோத்ரங்களை தேடித் தேடி பதிவுகள் இடுகிறேன். அம்முயற்சிக்கு இம்மாதிரி வேண்டுகோள் தான் ஊக்கம்.

    ReplyDelete
  5. For Veda Mantram Swaram must be added
    Other version of sarpa Suktham can be located and published

    ReplyDelete
    Replies
    1. Yes Mahalingam Sir, I agree with you. Veda mantras must be recited with swaras otherwise it is said to be ineffective.

      Delete
  6. Thanks for your visit. Please see the below link for other version of sarpa suktham.
    http://kshetrayaatra.blogspot.in/search/label/Sarpa%20Suktam

    if any other sarpa suktham is there, kindly send it to me at kshetrayatraa@gmail.com and will definitely post it here.

    ReplyDelete
  7. Is this stotra is helpful for sarp dosh. I have seen other stotra and sloka in your website. I need in English and Hindi. How can I get

    ReplyDelete
    Replies
    1. It is believed to be helpful in reducing harmful effects of sarpa dosha .. You can try sanskrit documents site for devanagari version

      Delete
  8. Replies
    1. Sorry I don't hv English version. You can try Google transliteration

      Delete
  9. மிகநெடுங்காலமாக தேடியது, தங்கள் தயவால் கிடைத்தது. மிக்க நன்றி.
    இந்த ஸுப்ரமண்ய ஸூக்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் தயவடன் பதிவேற்ற முடியுமா?
    ஏனெனில், வேதமந்திரங்கள் பொருளுணர்ந்து ஓதவேண்டியது கட்டாயம் என்பதால் ஆகும்.
    நன்றி🙏🏿

    ReplyDelete
  10. @Mano,
    thanks for visit and comment.
    Unfortunately, tamil translation with explanation is not available. will definitely try to post, if i get it....

    ReplyDelete